Ads 468x60px

Thursday, January 28, 2016

பேரிடி முழக்கம் சேருமோ உன்னை?


விழியது நோக்க வழியின்றி வாடி
     விடையதைத் தேடி விதியென நோகும்
நிழற்குடை இல்லா நீண்டிடும் பயணம்
      நினைவெனும் தீயதும் தீண்டிட வேகும்
வழித்தடம் எல்லாம் வலியது மோத
         மறைவிடம் நோக்கி மனமதும் போகும்
பழகிட இனித்து பரவசம் தந்த
      பைந்தமிழ்த் துணையும் பதுங்கிட நோயும்!

நோயது தீர்க்கும் நூலகம் நீயும்
      நுரையெனத் தங்கி மறைவதும் ஏனோ?
சாயமும் பூசி சகித்திட நாளும்
      தாளமும் போடும் வேடமி தானோ?
காயமும் மாறி கனவென ஆக
     காலைமுன் பனியாய் கரைந்திடும் கண்கள்
பேயெனப் பெய்யும் பெருமழை முன்னே
      பேரிடி முழக்கம் சேருமோ உன்னை?

29 comments:

 1. சந்தக் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! நன்றிங்க சகோ.

   Delete
 2. சகோதரி அவர்களின் மீள் வருகைக்கு நன்றி! சென்னையில் வெள்ளம் சமயம் எங்கிருந்தீர்கள்? கவிஞர் மதுமதி அவர்களிடம் சென்னைப் பதிவர்கள் பற்றி விசாரித்தபோது உங்களைப் பற்றியும் கேட்டேன். நீங்கள் தாம்பரம் – முடிச்சூர் பக்கம்; பாதிப்பு அதிகம்; தொடர்பு கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! அந்தச் சூழலில் யாரையும் தொடர்புகொள்ள இயலவில்லை. நன்றிங்க சகோ. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.இணையம் வர இயலாத சூழல் அனைவரும் மன்னிக்கவும்.

   Delete
 3. பேரிடி முழக்கம் சேருமோ உன்னை?
  என்ற தலைப்பில் பேரிடி முழக்கம் போன்றதோர் அருமையான கவிதை.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்>

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா! எனது நன்றியும்.

   Delete
 4. அடடே மீள் வருகைக்கு வாழ்த்துகள்
  கவிதை நன்று தொடரட்டும் தேக்கிய கவிதை மழை தினந்தோரும் பெய்யட்டும் வாழ்க வளமுடன்
  த.ம.வ,போ

  ReplyDelete
 5. அருமை... தொடர்ந்து பதிவிட வாழ்த்துகள்...

  ReplyDelete
 6. சசி, உங்களை மீண்டும் காண்பது மிக மகிழ்ச்சி. காணோமே என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

  அருமையான கவிதை, உங்கள் கவிப் பெருமழை தொடரட்டும்.

  ReplyDelete
 7. மீண்டும் உங்களை வலைப்பக்கத்தில் காண்பதில் மகிழ்ச்சி...

  சிறப்பான கவிதைகளோடு தொடருங்கள்.....

  ReplyDelete
 8. மறுபடியும் கண்டதில் மகிழ்ச்சி. கவிதையின் இலக்கணம் என்பது நான் அறியாதது. ஆனால் கவிதையை ரசிக்கும் ஆர்வம் உண்டு. ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
 9. வாங்கமா, இயல்பு நிலைக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  இனி இங்கு கவி மழை தான் ,,

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. மீண்டும் கவிதை பதிவோடு வலையுலகம் வந்தது கண்டு மகிழ்ச்சி! இனி தினம் ஒரு பதிவு வரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.
  த ம 5

  ReplyDelete
 11. சென்று சேரட்டும் பேரிடி முழக்கம் சசி. சசியின் வலையை என் வலையின் முகப்பில் வைக்கிறேன்

  ReplyDelete
 12. செம சந்தம் சசி! ஹப்பா வந்துட்டீங்களா...வாங்க கலக்குங்க மீண்டும் உங்கள் கவிதைகளால்...

  ReplyDelete
 13. பேரிடி முழக்கங்கள் ஒன்றுசேரட்டும்
  அருமை சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
 14. கோடை காலத்துப் புது மழை போல்
  உங்கள் வருகை தமிழ் வலை உலகிற்கோர் கொடை .

  வருக. வாழ்க. வளர்க.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 15. என்ன ஆச்சும்மா? ஏன் இவ்வளவு தாமதம் உன் அடுத்த பதிவிற்கு? உடல்நலத்திற்கு ஒன்றுமில்லையே? விரைவில் திரும்புக, வலையகம் திரும்பி வண்ணத் தமிழ்ப்பா வரைக இப்பல்லாம் புதுப்புது வடிவில் நல்ல மரபு கைவந்தது தெரிகிறது. உன் முதல் தொகுப்புக்கும் இன்றைய பாக்களுக்கும்தான் எத்தனை வேறுபாடு! வாழ்க! தொடர்க

  ReplyDelete
 16. வணக்கம் ..
  ஏன் இவ்வளவு நீண்ட இடைவெளி ..
  தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 17. அருமையான கவிதை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. அருமையான கவிதை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  ReplyDelete
 20. வெளுத்தது மேகச் சாயம்!
  ....வானிலே கதிரிச் சாட்டை
  கொளுத்துது! காற்றிற் சூட்டுக்
  ....கொப்புளம்! வெடிப்பா றெங்கும்
  உளுத்தது! கானற் றேரும்
  ....உடைத்திடு கவிதைத் தூறல்
  தெளித்திட வீசு தென்றல்
  ....தேடியே வந்த திங்கே!

  வருக கவிஞரே!

  வெம்மை தணிக்கும் தங்கள் கவிமழைக்குக் காத்திருக்கிறோம்.

  நன்றி.

  ReplyDelete
 21. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News

  ReplyDelete
 22. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

  இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

  அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

  நன்றி..
  Tamil US
  www.tamilus.com

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி