Ads 468x60px

Saturday, September 26, 2015

இருவிழா அழைப்பிதழ்! இனித்திடும் நிகழ்வுகள்!


சின்னச் சிட்டாய் ராசாத்தி
நீயும் சீவி முடிச்சி வாயேன்டி..
வண்ண வண்ண மாக்கோலம்
வாச மல்லிப் பூவழகும்..
அவை நிறைந்த தமிழ்ப்பூக்கள்
ஆடல் பாடல் கலைகளுடன்
அழகாய் மிளிரும் கம்பன் விழா...
காணக் கண்கோடி வேண்டிடுமடி கட்டழகே
கண்கள் நிலைத்து நிற்குமடி  காவியமே!

அருமைத் தொண்டர் பாரதிதாசன்
ஆற்றும் பணிகோடி தமிழிற்கே!
பெருமை கூறும் கம்பன்விழாவில்
பெண்ணிவள் வணங்கி வாழ்த்துகிறேன்!

ஆண்டிற்கு ஒரு முறை எதாவது விழா ஏற்பாடு செய்வதென்றாலே என்ன பாடுபடுவோம் நாம் ஆனால் இங்கு பாருங்க கம்பன் விழா (பதினான்காம் ஆண்டு) அழைப்பிதழையே ஆச்சரியமாகக் காணும் படி வடிவமைத்து ஆடல் பாடல் பாட்டரங்கம் பட்டிமன்றம் இப்படி இன்னும் பல அசத்தல் நிகழ்வுகளை அயராது உற்சாகமுடன் ஏற்பாடு செய்து இரண்டு நாள் விழாவாக கொண்டாடும் எங்கள் ஆசானை நேரில் கண்டு வணங்கி  பாவலர் பட்டம் பெற நினைத்தேன். செல்ல இயலவில்லை அந்த வாட்டத்தைப் போக்கிய அற்புதமான நம் பதிவர் சந்திப்பு விழாவிற்காக காத்திருக்கிறேன்.



கவிமழையில் நனைந்திருக்க
கட்டுரைகள் முகந்துடைக்கும்
ஆர்வமுடன் வலைதனிலே
அவரவர் பங்கீட்டை
அழகுடனே ஒன்றாக்கி
அன்புடனே முகங்காண
அனைவருமே வந்திடுவீர்..
புத்தம் புதுச் சோலையென
பூத்திருக்கும் புதுக்கோட்டைக்கே...

அனைவரும் கம்பன் விழாவினைக் கண்டு களித்து அப்படியே புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கும் மறக்காம வந்துடுங்க அதுக்கு முன்னாடி பதிவர் கையேட்டிற்கு உண்டான தகவல்களை கொடுத்திட்டிங்களா? இன்னும் நண்பர்களுக்கும் தகவல் சொல்லி கொடுக்கச்சொல்லுங்க அவங்களுக்கு நேரமில்லையா நீங்களே நண்பர்கள் உறவினர் தகவல்களை கொடுத்துடுங்க. அதுக்காக வலையில்லாதவங்க தகவல்களைக் கொடுக்காதிங்க சரியா?


இன்னும் வாசிக்க... "இருவிழா அழைப்பிதழ்! இனித்திடும் நிகழ்வுகள்!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி