Ads 468x60px

Thursday, October 8, 2015

என்னவனைக் காணாமல்...!


வாசலெங்கும் தோரணமிட்டு
வாத்தியங்கள் முழங்கக்கேட்டு
வாசல் வந்தே நானும் நிக்க
வண்டாட்டம் கண்ணிரன்டு_பூச்
செண்டோட வந்து நிக்க
வாயடைத்து நானும் நின்னேன் 
வந்தவறக் காணலையே.

மூச்சிழுத்து முனகி முனகி
முன்னும் பின்னும் ஓடிப்பிடித்து
ஓர் அணி ஜெய்க்கும் 
கபடியாட்டம் அங்கும் காணலையே.

கிட்டிப்புள் தட்டிவிட
புள் போகும் திசைநோக்கி
புயலென ஓடும் கூட்டம் (அங்கும் காணலையே)

வழுக்கு மர உச்சிதனில்
பரிசொன்னு காத்திருக்க
உசுருக்குள் புகுந்தவனை
உச்சி மரத்தில் தேடிப்பார்த்தேன் (அங்கும் காணலையே)

இரு பிரிவாய் சேர்திழுக்க
ஒரு புறமாய் வந்துசேரும்
பலம் சொல்லும் கயிறாட்டம் (அங்கும் காணலையே)

கண்கட்டி சுத்திவிட்டே
காலாட்டம் போடக்கண்டு
கதைத்திருந்த ஒரு கூட்டம்
சிரித்தடங்கும் வேளையிலே
சிறந்திடுமே உறியாட்டம் (அங்கும் காணலையே)

பருவப் பெண்கள்
பல்லாங்குழி ஆட்டமாட
தூண்டிலென விழி வீச
துரத்திடுதே ஒரு கூட்டம்  (அங்கும் காணலையே)

கண்களிரண்டை கட்டிவிட்டு
தொட்டிடவே தொடர்ந்து வந்து
தூரத்தே விலகி ஓடும் கண்ணாமூச்சி . (அங்கும் காணலையே)

ஆலமர விழுதில் தொங்கி
ஆட்டமாடும் ஊஞ்சலாட்டம்  (அங்கும் காணலையே)

தத்தித் தத்தி நடந்து வந்து
தாவி குதித்தே முன்னே வரும்
சாக்கு பையாட்டம்  (அங்கும் காணலையே)

நிலா வெளிச்சம் நீண்டிருக்க
பச்சைக் குதிரை தாண்டிஆட
பார்த்திருக்கும் கூட்டமிங்கே . (அங்கும் காணலையே)

வட்டமான கூட்டத்திலே
தந்திரமாய் நுழைந்திடவே
தாளத்தோடு பாட்டிசைக்கும்
ஆடு புலி ஆட்டம் பாரு  (அங்கும் காணலையே)

வெட்டவெளி மைதானத்தில்
பட்டமிட்டு பார்த்து மகிழும்
கூட்டமுண்டு  (அங்கும் காணலையே)
 
எங்கு தேடியும் காணாமல்
ஏங்கிப் போய் நானும் வந்தேன்
என் வீட்டுத்திண்ணையிலே
மடிக்கணினி பார்த்து நிக்கான்
மன்னவன என்ன சொல்ல?
 
மீள்பதிவு

28 comments:

 1. மண்வாசனை மனதுக்கு நல்ல ஒத்தடம்!
  எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது சலிக்காது!

  அத்தனை விளையாட்டுக்களையும் பாடலில் அமைத்த அழகு!
  மிகச் சிறப்பு! சிந்தை நிறைத்த கவிதை!
  வாழ்த்துக்கள் மா!

  ReplyDelete
  Replies
  1. மனதிற்கு இதமாக உள்ளது தங்கள் வருகையும் வாழ்த்தும். நன்றிங்க மா.

   Delete
 2. மீள் பதிவே என்றாலும் மீண்டும் ரசித்தேன். மரபுக் கவிதைகளை விட புதுக் கவிதைகள்தான் உங்களுக்கு இயல்பாய் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! சரிங்க இனி இப்படியும் பதிவிடுகிறேன். நன்றிங்க சகோ.

   Delete
 3. ரசித்தேன் கவிதையை, மிகவும் நிதானமாக. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க ஐயா.

   Delete
 4. சகோதரி பின்னி பெடலெடுக்கிறீங்களே! அருமை!! அருமை!! மிக மிக ரசித்தோம்!!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்கள் இருவருக்கும்.

   Delete
 5. ஆஹா அருமைமா,,,,
  இவையெல்லாம் காணலை தான்,
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி. பழையன எதுவும் இல்லை தற்போது. நன்றிங்க தோழி.

   Delete
 6. இப்படிப்பாடி இணையத்தேற்றும் கவிதைகளை கணினியில் அல்லவா காண முடியும்? அதற்காக மடிக்கணினி பார்த்தானாயிருக்கும்.:)

  என்ன அழகாகத் துள்ளிவருகிறது பாடல்..!

  பாவலர் என்ற பட்டம் பொருத்தம்தான் கவிஞரே

  தமிழின் எளிமையின் இனிமை...!

  உங்களிடம் கற்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இதென்ன ஆசிரியரிடம் நான் தானே கற்க வேண்டும். உங்க புலமைக்கு முன் நான் தூசு.
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க ஆசிரியரே.

   Delete
 7. அருமை பாவலரே மீள் பதிவை மீண்டும் தந்தமைக்கு நன்றி மிகவும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றியும்.

   Delete
 8. அருமை அருமை! இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்! மண்வாசனை வீசும் கவிதைகள் உங்கள் பலம்! அதை தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஹஹ அப்படியா சரிங்க . இப்படியும் இனி எழுதுகிறேன். நன்றிங்க.

   Delete
 9. அருமை
  அருமை
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சகோ.

   Delete
 10. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி!
  எங்கெல்லாம் தேடித் த்விக்கிற்ள் தலைவி!
  அருமை சசிகலா

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க ஐயா. எல்லோருமே அப்படித்தானே. நன்றிங்க ஐயா.

   Delete
 11. வணக்கம்
  மிக அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள். சகோதரி. த.ம8

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. புதுக்கோட்டையில் சந்திப்போம்.

   Delete
 12. ஆட்டுக் குட்டியை தோள்லேயே போட்டுக்கிட்டு தேடின கதையா இருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

   Delete
 13. அருமையான கவிதை. மறந்துபோன பழையவற்றையும் நிகழ்கால நவீனத்தையும் அழகான கவிதையாக சொன்னது அற்புதம்.
  த ம 10

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 14. எவ்வளவு சுருக்கமான சுய அறிமுகம்!சரியாத்தான் சொன்னாங்க மின்னல் மாதிரின்னு!

  ReplyDelete
  Replies
  1. ஹஹ சொல்ல என்ன இருக்கு என்றே ஓடிவந்துவிட்டேன் ஐயா.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி