Ads 468x60px

Thursday, October 15, 2015

சுமையா! சுமைதாங்கியா?


எண்ணிய தெழுதுகிறேன்
 எனக்கென எழுதவில்லை
 எல்லோரும் இதிலுண்டு!

ஆறு ஓடினாலும்
தாகம் தீர்ந்திடவே
 அள்ளிப் பருகிடுவார்.

 அறிவென்ற ஊற்றுக்கண்
சுரப்பதை அறியாமல்
 எள்ளி நகைக்கின்றார்


 ஆணாய் இருந்துவிட்டால்
 எவளுக்கு எழுதுகின்றாய்
 பெண் எழுதும் திறன்கொண்டால்
 எவனைப் பாடுகிறாய்.

 எழுத்தாளர் குடும்பத்தில்,
 எத்தனை வேதனைகள்.
 எழுத மனம் வைத்தே
 எழுத்தும் இவர் கணக்கில்,
 பொதுவுடைமை காண்பதில்லை!

 அவரவர் மனம்போலே,
 ஆயிரம் சந்தேகம்.
 பண்பாடும்  மொழிவாழ்வும்,
 காக்கும் கைகளுக்கு,
 விலங்கிடும் உறவாலே,
 மனம் பட்ட மரமாக,
 எழுதும் எழுத்துக்கள்,
 அவர்துயர் துடைத்துவிடும்!

 காவியம் படைப்பதற்கும்,
 சரித்திரம் சொல்வதற்கும்,
 அவர்துயர் துடைப்பதற்கும்,
 அசிங்கங்கள் அழிப்பதற்கும்,
 பொழுதுகள் போவதற்கும்,
 நாமெழுத வேண்டும்!
 நமக்கொரு இதயமுணடு,
 நினைக்க நாதியில்லை.
 மேடையில் புகழ்வார்கள்,

 எழுதுகோல் பிடிப்பவர்கள்,
  சிரிக்கவும் முடியவில்லை,
 அழவும் வழியில்லை,
 எண்ணமே பாலையாக,
 கனவுகள் வாழ்க்கையாக,
 எத்தனைநாள் ஓடுவது,
 என்னநாம் செய்குவதோ?

யாருக்காய் எழுதுவது,
 உலகுக்கா  ஊருக்கா,
 உறவுக்கா, உண்மைக்கா,
 அன்புக்கா, பண்புக்கா,
 இயற்கைக்கா, காலத்துக்கா,
 காதலுக்கா, பிரிவுக்கா,
 பிறப்புக்கா; இறப்புக்கா!
 யாருக்காய் எழுதாமலிருப்பது?
 எழுத்தாளனென்ன?
 சுமையா! சுமைதாங்கியா?

 மீள் பதிவு

41 comments:

 1. அருமை அருமை சகோ! ஒவ்வொரு வரியும் சாட்டையடி, சரவெடி!! நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தேடிவந்து அறிமுகம் செய்துகொண்டு பேசியது மகிழ்வாக இருந்தது. நன்றிப்பா.

   Delete
 2. அற்புதம்
  சிந்தனை மெல்ல மெல்ல
  வேகமெடுத்து தடம் மாறாது
  சிகரம் ஏறுவதைப் போல
  அற்புதமாகச் செல்கிறது கவிதையின் போக்கு

  சென்ற கவிதையின் பின்னூட்டத்திற்கு
  பதில் சொல்வது போலவும்...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் உற்சாகப்படுத்தம் பின்னூட்டங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 3. ஹ்ம்ம் அருமை தோழி!
  நமக்காய் நாம் எழுதுவோம்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பா. சரியா சொன்னிங்க நமக்காக நாம் எழுதுவோம்.

   Delete
 4. சகோ கிரேஸ் சொல்லுவது மாதிரி நமக்காக மட்டுமே எழுதுங்க... அதாவது என்னை மாதிரி பொழுது போக்குக்காக மட்டுமே எழுதுங்க எந்த பிரச்சனையும் இல்லை மனசு சந்தோசப்படும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க இனி உங்க ஸ்டைலுக்கு மாறிட வேண்டியது தான்.

   Delete
 5. மிக மிக உண்மையான வரிகள்.......எழுதுபவர்கள் மீது பொறாமை கொள்ளும் நமது கூட்டத்தில் இருக்கும் குள்ள நரிகள் இப்படிதான் கேட்கும்....இதையெல்லாம் சட்டை செய்யாமல் செல்லவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாகச்சொன்னீர்கள் நன்றிங்க.

   Delete

 6. வணக்கம்!

  எங்கே கொடுமை எழுகிறதோ, என்தோழி
  அங்கே கவிதை அலைபாயும்! - மங்கிவரும்
  இவ்வுலகை மாற்ற எழுதுகவே! உன்னெழுத்தை
  எவ்வுலகும் போற்றும் இசைத்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. பாட்டரசர் வழிநடத்த பாவரங்கில் பாமாலை தினந்தொடுப்பேன் நன்றிங்க ஐயா.

   Delete
 7. ஐயா பாரதிதாசனார் அழகாகச் சொல்லி விட்டார்;அதுவே நோக்கமாகட்டும்,
  அருமை

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஆகட்டும் ஐயா.

   Delete
 8. ஆதங்கங்கள் தெளிவாய்த் தெரிகிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. கூடும் கொடுமை குலைந்தேதான் போகட்டும்
  ஏட்டில் எழுதியே ஏற்று!

  என்னவரினும் எழுதுவதை நிறுத்தக் கூடாது!
  தொடருங்கள் தோழி!.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. என்றும் தொடரும் எழுத்துப்பயணம் தக்க நேரத்தில் உற்சாகம் தரும் தங்கள் மறுமொழிக்கு நன்றிங்க தோழி.

   Delete
 10. நம் எண்ணங்களே எழுத்தாகும் இதில் அனைத்தும் உண்டு சகோ
  அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. உங்க ஸ்டைலும் சூப்பர் சகோ.

   Delete
 11. ஏன் என்ன ஆயிற்று பாவலரே :(

  ReplyDelete
  Replies
  1. ஒன்றுமில்லை ஆசிரியரே. துவக்கத்தில் எழுதியவற்றை மீள்பதிவாக்கினேன் அவ்வளவே.

   Delete
 12. முட்டுக் கட்டைகள் வரத்தான் செய்யும். அவற்றை முடக்கி விட்டு முன்னேறுங்கள் மா ! அருமை அருமை ! நன்றி !

  ReplyDelete
 13. வணக்கம்
  சகோதரி
  அற்புத வரிகள் படித்து மகிழ்ந்தேன் த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. நாம் நம் திருப்திக்கு எழுதுவோம்.

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் எழுதி வருகிறேன். நன்றிங்க.

   Delete
 15. சமூகத்திற்காக எழுதும் எழுத்தாளர்கள் சிலர் சுமைதாங்கி ஆகவும், அந்த எழுத்தாளனே பலருக்கு சுமையாகவும் இருப்பது இயல்பே! அழகான கவிதை.
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. சரியான விளக்கம் தந்தீர்கள். நன்றிங்க சகோ.

   Delete
 16. யாருக்காக எழுதுவது? நமக்காக எழுதுவோம்! நம் சுமைகள் எழுத்துக்களாய் இறங்கி நம் பாரம் குறைகிறதல்லவா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க நமக்காக எழுதுவோம். நன்றிங்க.

   Delete
 17. உங்கள் ஆதங்கம் புரிந்தது! எதனால் என்றும்.

  உங்களுக்காக, உங்களை வாசிப்பவர்களுக்காக எழுதுங்கள் சகோ! எந்தத் தடங்கல் வந்தாலும், தடங்கலை வாழ்த்துகின்றேன். ஏனென்றால் அந்தத் த்டங்கல்தான் என்னை இத்தனை படிகள் ஏற வைத்திருக்கிறது - நான் ராப்ர்ட் ப்ரூஸ் என்று சொல்லிக் கடந்து செல்லுங்கள் சகோ!

  அருமை....

  ReplyDelete
  Replies
  1. ராப்ர்ட் ப்ரூஸ் பற்றியெல்லாம் நீங்கள் சொன்னாலொழிய எனக்கு தெரியாதுங்க சகோ.

   Delete
 18. இங்கேயும் இப்படித்தான் ...என் பதிவை விட ,வெங்காயம் உரித்துத் தருவதே என்னவளுக்கு மிகவும் முக்கியம் :)

  ReplyDelete
  Replies
  1. ஹஹ அவரவர்க்கு எது முக்கியமோ அதில் தானே தீவிரமாக இருப்பார்கள்.

   Delete
 19. இரு நோக்கிலும் நாம் எடுத்துக்கொள்ளலாம். நல்ல சிந்தனை. நன்றி.

  ReplyDelete
 20. பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகிவிட்ட இந்த காலத்தில், ‘’யாருக்காய் எழுதுவது?’’ என்ற சிந்தனைமிகு கவிதை.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி