Ads 468x60px

Friday, October 30, 2015

மீட்டும் மகிழ்வதனைத் தேக்க! கவிதை உருகொண்டு கனவைத் தினமுண்டு
       காதல் உணர்வோங்கிக் கொல்ல!
தவிப்பை நீகண்டும் தாளம் புதிதென்று
     தாவித் தன்னுள்ளே  செல்ல!

வரவைத் தினம்தேடி வாடும்இளநெஞ்சை
    வதைக்கும் உன்மௌனம் கண்டு!
மரபில் புதையுண்டு மலரும் பூச்செண்டில்
    மையல் கொண்டாட்ட முண்டு!

மின்னல் கீற்றாகி மீண்டும் எனைத்தாக்கி
    மீட்டும் மகிழ்வதனைத் தேக்க!
சின்னக் குழந்தையெனச் சீற்றம் தனைமறந்து
     சிரித்தே மகிழ்தாடி நோக்க!

இனிக்கும் நினைவேந்தி இயல்பின் கரம்பற்றி
     என்னை இழுத்தோடி நாளும்!
தனிமைச் சுகமென்ற தாகம் தனைத்தீர்க்கச்
      சாலை தினந்தேடி நீளும்!

தொடரும் பயணத்தில் துரத்தித் தோளமர்ந்தே
     சூட்டும் வேதனைகள் கோடி!
உடும்பாய் எனைப்பற்றி உன்னைச் சரணடைய
   உந்தும் உணர்வலைகள் தேடி!   

53 comments:

 1. தொடரும் பயணத்தில் துரத்தித் தோளமர்ந்தே
  சூட்டும் வேதனைகள் கோடி
  உடும்பாய் எனைப்பற்றி உன்னைச் சரணடைய
  உந்தும் உணர்வலைகள் தேடி

  மிகவும் ரசித்தேன் சகோ அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றிங்க சகோ.

   Delete
 2. // சின்னக் குழந்தையெனச் சீற்றம் தனைமறந்து
  சிரித்தே மகிழ்தாடி நோக்க! //

  அருமை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 3. Replies
  1. வாங்க அக்கா! வெகுநாட்கள் ஓய்வெடுத்து வந்துள்ளீர்கள்.

   Delete
 4. எனக்கேனோ இதைப் படித்ததும் கண்ணதாசனின் “ மலர்ந்தும் மலராத” என்னும் பாடல் நினைவுக்கு வந்தது. இதில் இருக்கும் சந்த நயத்தாலா? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா தாங்கள் சொன்ன பிறகே அந்த சந்தத்தில் பாடிப்பார்த்தேன் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. நன்றிங்க ஐயா.

   Delete
 5. இதென்ன வானத்து மின்னலா இடியுடன் கூடி பெய்யும் கவிமழை

  ReplyDelete
  Replies
  1. கவி மழையாகக் கொட்ட நான் இன்னும் கற்க வேண்டுங்க.

   Delete
 6. இதென்ன வானத்து மின்னலா இடியுடன் கூடி பெய்யும் கவிமழை

  ReplyDelete
 7. சந்தக் கவியொன்று தந்திட்ட தென்றலுக்கு
  வந்தனத்தோ டிட்டேன்நல் வாழ்த்து!

  அருமை என்றால் போதாது தோழி!..
  உங்கள் சந்தக் கவி அற்புதம்!
  சிந்தனை சிறகடித்துப் பறக்கின்றது!

  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி. உங்களோடு நானும் பறக்கிறேன். உங்க வாழ்த்து கண்ட மகிழ்வுடன்.

   Delete
 8. வணக்கம் பாவலரே!

  ஏதோ என்னைப் போன்றவர்கள் மரபை எழுதிப் பதிவை நிரப்புகிறோம். எங்களை எல்லாம் ஒரே அடியில் காலி செய்துவிடுவீர்கள் போலிருக்கிறதே?!!!!

  நல்லது!

  எழுதுவதைவிடப் படிப்பதில்தான் ஆனந்தம் உள்ளது.

  அருமை. அருமை!!!

  பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் எல்லாம் தாயக்கட்டையை உருட்டுவதுபோல எளிதாகிவிட்டது.

  உங்களுக்குத் தாயம் விழுந்துவிட்டது.

  கிடைத்த இடைவேளையில், உங்கள் “தேடி“ யில் இருந்து எடுத்து நானும் தொடர்கிறேன்.

  தாயம் விழாவிட்டாலும் கூட,.......,


  “தேடி அலைகின்ற மகவை அறியாமல்
     துரத்தும் தாயான சிந்தை!
    தெருவில் திரிந்தாலும் தினமும் அழுதாலும்
     வெறுக்கத் துணியாத விந்தை!
  வாடும் மலரான வாழ்க்கை அதில்கொஞ்சம்
     வாசம் நிறைக்கின்ற சந்தம்!
    வற்றிக் கிடக்கின்ற வெற்றுச் சுனையூறி
     வறளும்…! சொல்லுக்கும் பஞ்சம்!
  கோடி கவிகொண்ட தமிழின் கூட்டிற்குள்
     குலவும் தென்றலின் கீதம்,
    கொட்டும் மழைமேகக் குளிராய்க் கண்பட்டுக்
     குழையும், மனமுன்றில் மோதும்!
  பாடிக் கடக்கின்ற பொழுதை வசமாக்கும்
     பாடம் அறிந்தீர்‘அப் பாங்கை
    “பாவம்…! நீயென்று படிக்க?“ எனக்கேட்டுத்
     தேங்கும் தமிழென்னில் ஏங்கும்!!!

  உணவிடைவேளையின் நேரக் குறைவில் மீளப்பார்க்கவில்லை.

  தவறிருப்பின் பொறுத்திடுங்கள்!

  நன்றி


  ReplyDelete
  Replies
  1. அட அட! கவியரங்கம் தான்! மழையில் நாங்கள் சொட்டச் சொட்ட நனைகின்றோம்...அருமை...சகோ!

   செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கும் ஈயப்படும்....உணவிடைவேளையில் பா!!! எங்கள் அறிவிற்கும்...கலக்குகின்றீர்கள் சகோ..

   Delete
  2. வணக்கம் ஆசிரியரே!

   நான் தான் மரபில் தவழும் குழந்தை இப்படித் தவழ்ந்துவருகிறேன்.
   ஆனாலும் தாங்கள் சொல்வது உண்மை தான் எழுதுவதைவிட படிப்பதும் ஆனந்தமே. படிக்க ஆரம்பிக்கிறேன்.
   சட்டென நனைத்துப்போனது தங்கள் கவிமழை. இப்படியெழுத நான்தான் இன்னும் எத்தனை ஆண்டுகள் கற்க வேண்டுமோ?

   Delete
  3. //வாடும் மலரான வாழ்க்கை அதில்கொஞ்சம்
      வாசம் நிறைக்கின்ற சந்தம்!
     வற்றிக் கிடக்கின்ற வெற்றுச் சுனையூறி
      வறளும்…! சொல்லுக்கும் பஞ்சம்!//

   அருமை நண்பரின் கவிதை வரிகளும், சகோவின் கவிதையும்.
   வாழ்த்துக்கள்!

   Delete
  4. superb. if u permit, i shall sing this also.

   subbu thatha.

   Delete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. எதுகையைக் கவனிக்காமல் அமைப்பு நோக்கி பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என்று எழுதியும் பின்னூட்டம் இட்டும் போனேன்.

   எதிலும் அவசரம். பிழை பொறுக்க.

   நன்றி.

   Delete
 10. தொடரும் பயணத்தில் துரத்தித் தோளமர்ந்தே
  சூட்டும் வேதனைகள் கோடி!
  உடும்பாய் எனைப்பற்றி உன்னைச் சரணடைய
  உந்தும் உணர்வலைகள் தேடி! //

  என்னமா இப்படி எழுதி...ரசித்தோம் சகோதரி! அருமை அருமை....

  விஜு சகோவின் வரிகளும் சேர்ந்திட மழைதான் போங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டது கண்டும் மகிழ்ந்தேன். நன்றிங்க இருவருக்கும்.

   Delete
 11. மீட்டும் மகிழ்வைத் தேக்க நல்ல கவிதை.

  ReplyDelete
 12. ஆஹா அருமை சகோ,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. ஆழ்ந்த உறக்கத்தில் அசரா கனவொன்று நான் கண்டேன் ஆனந்த கவி மழையில் நனைய அது நனவய்ப்போனதே.. மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.. மீண்டும் ஒரு புதுவைக்குயில் பாடுவதாகவே எண்ணுகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தங்கள் வருகையும் வர்ணனையான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
   ஆமாம் அது யார் புதுவைக்குயில்?
   நான் புதுவை இல்லையே....

   Delete
  2. புதுவைக்குயிலை தெரியாத ஒரு கவிஞரா?

   Delete
  3. புதுவைக்குயிலை தெரியாத ஒரு கவிஞரா?

   Delete
 14. ஆழ்ந்த உறக்கத்தில் அசரா கனவொன்று நான் கண்டேன் ஆனந்த கவி மழையில் நனைய அது நனவய்ப்போனதே.. மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.. மீண்டும் ஒரு புதுவைக்குயில் பாடுவதாகவே எண்ணுகிறேன்..

  ReplyDelete

 15. வணக்கம்!

  விந்தைத் தமிழேந்தி வீசும் கவித்தென்றல்
  சிந்தை புகுந்து செழித்ததுவே! - முந்தை
  நடைகாட்டி! முத்து நகைசூட்டி! இன்றேன்
  அடையூட்டி வாழும் அகத்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
 16. வணக்கம் ஐயா!

  விந்தைத்தமிழை விருப்பமுடன் தாங்கள் எங்களுக்கு கற்றுத்தந்த பயனே இந்த அளவிற்காவது நான் எழுதுவது. தொடர்ந்து வழிநடத்துங்கள். வளம்காண.
  தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

  ReplyDelete
 17. மிக அருமை
  இரண்டாவதில் மட்டும் உன்மௌனம்
  என இருந்தால் சரியாக இருக்குமோ ?
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மாற்றிவிட்டேன் .
   தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 18. வார்த்தைகள் விளையாடும் தங்களின் கவிதையை ரசித்தேன்.
  த ம 8

  ReplyDelete
 19. தேக்கி வைத்த மகிழ்ச்சி ,கவி ஓடையில் ஓடக் கண்டேன் :)

  ReplyDelete
 20. //உடும்பாய் எனைப்பற்றி உன்னைச் சரணடைய
  உந்தும் உணர்வலைகள் தேடி //

  சிக்கெனப் பிடித்ததோ!
  அருமை,அருமை,அருமை

  ReplyDelete
 21. அன்புள்ள சகோதரி,

  தென்னங் கீற்றாலே தென்றல் காற்றாலே

     தேடும் விழியாலே தேவி மொழியாலே

    என்றும் காதலாகி இன்னல் தீர்த்தாலே

     ஈடு இணையில்லா மீண்டு(ம்) மகிழ்வாலே!

  த.ம.11

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. தங்கள் வருகையும் வாழ்த்துப்பாவும் சிறப்பு.

   Delete
 22. சிறப்பான கவிதை ! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. மரபில் தேர்ச்சி தெரிகிறது. ஓசை நயமும் பொருளும் இனிமை இனிமை

  ReplyDelete
 24. நல்ல கவிதை. ரசித்தேன்.

  ReplyDelete
 25. ஆஹா..ஆஹா.

  அற்புதமான காதல் காதல் கவிதை

  அப்பவே இருபத்தி ஐந்தில் கிடைக்காம

  இப்ப எழுபத்தி ஐந்தில் கிடைத்தாலும்

  இந்தக்

  கிழவனும் கிழவியும்

  கானடா ராகக்த்தில் டூயட் பாட, இல்ல

  கனா காணத்துவங்கி விட்டார்கள்.  கேட்போமா !

  சுப்பு தாத்தா.  இதை எப்படி மிஸ் பண்ணினேன் அப்படின்னு தெரியல்ல.  லேட் டா இருந்தாலும் லேட்டஸ்ட் அப்படின்னு சொல்லிப்பிடுவோம்.

  www.subbuthathacomments.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. www.youtube.com/watch?v=8eH_BQitq7w

   subbu thatha.
   www.menakasury.blogspot.com

   Delete
 26. **
  தொடரும் பயணத்தில் துரத்தித் தோளமர்ந்தே
  சூட்டும் வேதனைகள் கோடி!
  உடும்பாய் எனைப்பற்றி உன்னைச் சரணடைய
  உந்தும் உணர்வலைகள் தேடி! ** பாடலின் சிகரம் !!! ரொம்ப லேட்...ஆனாலும் தோழி என்னை மன்னிக்கலாம்:))) பாட அத்தனை அழகாய் இருக்கு பாவலரே உங்க பாடல்!!!

  ReplyDelete
 27. சசி ஒரு தொடர் பதிவில் உங்கள சேர்த்திருக்கேன். எனக்காக தொடரவேண்டும் ஒகே வா?

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி