Ads 468x60px

Friday, October 23, 2015

பூக்களுமே தனக்கெனவே பூத்ததுவோ!


கனவினிலே வந்தவனும் உலவுகின்ற மென்மை
    களவதனைக் கற்றேதான் கொலுவிருக்கும் பெண்மை!
தனைமறந்தே தளிர்க்கொடியாள் தள்ளாடும் போதும்
     சந்தமுடன் சேதிசொல்ல வந்துவிடும் தூதும்!
கணைதொடுத்தே காத்திருக்கும் காதலதின் வேகம்
    கண்ணசைவில் கதைபலவும் பேசுகின்ற மோகம்!
 இணையாகி உலவிடவே துடித்திருக்கும் நெஞ்சும்!
     இன்னமென்ன செய்திடுவான் என்றேங்கிக் கொஞ்சும்!


பூக்களுமே தனக்கெனவே பூத்ததுவோ எண்ணிப்
    புத்தாடை தான்பூண்டு குதித்தாடும் கன்னி!
பாக்களிலே பழரசத்தைப் பருகிடவே மொண்டு
    பகலிரவில் தமிழுடனே உலவுகின்ற வண்டு!
 நோக்குமவன் பார்வையினை மௌனமுடன் கண்டு
    நோயதுவும் தான்சுமந்து மயங்கும்பூச் செண்டும்
சீக்கிரமே வந்திடுமோ வசந்தமதும் கண்ணா?
    சேர்ந்திருக்கும் நன்நாளும் கண்டிடுவாய் மன்னா!

19 comments:

  1. // பாக்களிலே பழரசத்தைப் பருகிடவே மொண்டு
    பகலிரவில் தமிழுடனே உலவுகின்ற வண்டு //

    ஆகா...!

    வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
  2. அழகான கவிதை. அதற்கேற்ற அருமையான படம்.

    ReplyDelete
  3. கற்பனைக் காட்சியைக் கண்டேன் விருத்தமாய்!
    சொற்பதம் தேன்சுவைச் சொட்டு!

    அற்புதம்! சுவை சொல்லி மாளாது!
    காட்சிப் படமும் சிறப்பு!

    தொடருங்கள் தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இயைபுத் தொடை
    மிக இயல்பாய் வந்து விழுந்திருப்பது
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தினம் ஒரு கவிதை பதிவு அசத்துகிறீர்கள். இம்முறை சோலோவா

    ReplyDelete
  6. கற்பனையுன் கைவசமே காணுகின்றாய் காட்சியினை
    சொற்பதமுன் திறமே தொடர்!

    அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  7. கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அருமை
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
  9. வணக்கம்
    சகோதரி

    அற்புத வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள்... த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. எழுதும் ஒவ்வொரு கவிதையும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன!

    ReplyDelete
  11. படமும் கவிதையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. அருமை சகோ வாழ்த்துகள் தொடர்ந்து இதைப்போல பா எழுதுங்கள்

    ReplyDelete
  13. படமும் கவிதையும் அருமை...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  14. அழகிய வரிகள் சகோ,
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  15. படமும் கவிதை வரிகளும் அருமை சகோ!
    த ம 9

    ReplyDelete
  16. அச்சோ... என்ன அழகு.. என்ன ரசனை... காதல் நெஞ்சத்தின் ஏக்கமும் கவித்தமிழும் கைகோர்த்துக்கொண்டு மனம் கவர்கிறது. பாராட்டுகள் சசி.

    ReplyDelete
  17. சகோ! மனம் கவரும் தித்திக்கும் தமிழில் காதல் ரசம் சொட்டச் சொட்ட இப்படி எழுதினால் மனம் லயிக்காமல் இருக்குமா...அருமை..

    ReplyDelete
  18. மிக அருமை
    இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி