Ads 468x60px

Thursday, October 22, 2015

கண்ணே கனியமுதே வாடி!


கண்ணே கனியமுதே வாடி-உன்னைக்
காணவந்தேன் ஓடி -அந்த
கண்ணாடி வளையலை நானும்
போட்டுவிடத் தாண்டி. (ஆண்)

கல்யாணத் தேதியுந்தான் சொல்லி
கள்ளத்தனம் செய்வீரோ கிள்ளி
கண்ணாடி வளவியுந்தான் சொல்லும்
காண்போரைத் துணைக்கழைத்துக்கொள்ளும்.(பெண்)

கதிரவனும் வலுவிழந்த நேரம்
அந்த வாசப்படி ஓரம் _ வந்து
வாஞ்சையோடு வஞ்சியுனை
வரித்துக் கொள்ள நிற்பேன்.(ஆண்)

கருக்கலிலே வந்து நின்னா என்ன?
காவலுக்கும் ஆளிருக்கே உள்ள
கண்ணால சேதி சொல்லி மெல்ல
பின்னால தள்ளி நில்லேன் நான் வல்ல.(பெண்)

தேனைப் போல மானைப் போல
என்று சொல்ல மாட்டேன்
உன் கண்ணைக் கூட கயல்விழியாள்
என்றே எண்ண மாட்டேன்.(ஆண்)

அப்போ
தேனே மானே கொஞ்சத்தெரியாத மச்சான்
எனைத் தேம்பி யழவைச்சதே மிச்சம்.(பெண்)

இல்லை இல்லை கோச்சுக்காதாம்மா
அப்படி எல்லாம் நான் சொல்வேனா
உன் முன்னாடி அதுங்க எல்லாம்
தூசு தானே போம்மா.(ஆண்)

அங்க இங்க தொட்டுப் பேச வேணா
அடுக்களையில் கைகலப்பும் வேணா
ஆச வார்த்த பேசத்தெரியள ஆமா
அதுக்கு ஏனோ இங்க வந்தீக மாமா.(பெண்)

உன்னழகுக் கிங்கு ஏதும்
ஈடு இல்லை யேம்மா.
உன்னைப் போல ஒருவரை நான்
கண்டதில்லை யேம்மா.(ஆண்)

கேலிப் பேச்சு இங்க வேணா மாமா
கிண்டலுந்தான் செய்வதும் தான் ஏனோ?(பெண்)

ஆச தீரப் பேசவேண்டும்
அருகினிலே வாம்மா
உன்னை எண்ணி ஏங்குவதை
காண்பதில்லை ஏம்மா? (ஆண்)

ஆணாக எழுதியிருப்பது பதிவர் இனியா பெண்ணாக எழுதியிருப்பது தென்றல்.

20 comments:

 1. இதற்கு இசை அமைக்க
  இளையராஜாவும் இசைவார்.

  இந்தக் கிழவனும் கிழவியும்
  இணைந்து இசைத்தோம். .

  இரு இருபத்தி ஐந்து ஆண்டுகட்கு
  இல்லை, இன்னும் முன்னே சென்றுவிட்டோம்.

  சபாஷ். !!

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. இருவரும் சேர்ந்து பாடினாலும் நன்றாகவே இருக்குமே.பாடுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

   Delete
 2. ஆகா... அருமை! அருமை!

  நாட்டார் பாடல்கள் கூட்டாகக் கொட்டுகிறதே அருவியாக!
  இனிமை! மனம் நிறைத்து மணம் வீசுகிறது பாடல்!

  அட.. நம்ம சுப்புத்தாத்தாவும் பாடித்தரப் போறாரா.. நல்லது.!
  தாருங்கள் ஐயா கேட்க ஆவலாய்க் காத்திருக்கின்றேன் நானும்!

  அழகாகப் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி! ஆமாம் சுப்புத்தாத்தா பாட கேட்க ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்.
   நன்றிங்க தோழி.

   Delete
 3. இரு குயில்கள் படைத்த இந்த நாட்டுபுற கவிதை மிக இனிமை பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. மதுரைத் தமிழனல்லவா ஆதலால் கேட்டதும் பாடி விட்டோம். நன்றிங்க.

   Delete
 4. ஆஹா தொடரட்டும் கிராமியப் பாட்டு அருமை சகோ..

  ReplyDelete
  Replies
  1. இன்னுமா? சரியா போச்சி..

   Delete
 5. இனிமை.... இனிமை.... தொடரட்டும் கவிதைகள்.

  ReplyDelete
  Replies
  1. தொடரலாம் அல்லது.....?

   Delete
 6. இருவர் சேர்ந்து படைத்த கவிதை ;புதிய முயற்சி! மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா புதிய முயற்சி.

   Delete
 7. வணக்கம்

  அற்புத வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க சகோ.

   Delete
 8. அப்பாடா ஒரு மாதிரி முயற்சி திருவினை யாயிடுச்சு. சும்மா ஒரு முயற்சி தானே. மதுரை தமிழருக்கு தான் நன்றி சொல்லணும். சசி. ம்..ம் என்னமா வார்தைகள் சரளமா வருது பொருத்தமா உங்களுக்கு உண்மையில் வியந்து தான் போனேன். இனிய மகிழ்ச்சியான தருணம் மிக்க நன்றிம்மா ...! தொடரட்டும் உங்கள் கிராமிய வாசத்தோடு கூடிய பாடல்களும் இங்கு. மேலும் மிளிர வாழ்த்துக்கள் தோழி ....!

  ReplyDelete
  Replies
  1. சாதாரண பேச்சு வழக்கு தானே தோழி இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லையே. நன்றிங்க தோழி.

   Delete

 9. வணக்கம்!

  கண்ணே கனியமுதே வாடி! கவிபடித்து
  மண்ணே மயங்கும் மகிழ்ந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. பாட்டரசரே மகிழ்ந்த பின்பு வேறென்ன வேண்டும் எங்களை உற்சாகப்படுத்த நன்றிங்க ஐயா.

   Delete
 10. எனக்குப் பாராட்ட வார்த்தைகள் வரவில்லை ஆகவே ஒரே வார்த்தையாக பேஷ் ...!

  ReplyDelete
 11. சசி, இனியா சகோக்களே ! ஓ! வலையுலகில் இது மற்றுமொரு கவிதாயினிகளின் கவிதைச் சுற்றோ!!!

  செமையா கலக்குகின்றீர்கள்!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி