Ads 468x60px

Tuesday, October 20, 2015

பொன்னழகே பூவழகே!


சின்னவிழிச் சித்திரமே! செவ்வந்திப் பூச்சரமே!
இன்னமுதத் தேன்குடமே! ஈடில்லாப் பேரழகே!
என்னுயிரே! பூந்தமிழே! ஈந்திடுவாய் முத்தங்கள்!
பொன்னழகே பூவழகே! கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
புவித்துயரைத் தான்மறந்து கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

அன்னைமடி தொட்டிலடி! அற்புதமே! ஆருயிரே!
சன்னலிலே வான்நோக்கும் சின்னவளே! தேன்சிட்டே!
கன்னமது கற்கண்டுக் காவியமே! கண்ணழகே!
அன்னநடை நாட்டியமே! கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
அற்புதமே! பொற்பதமே! கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

படம் உதவி இணையம்


29 comments:

 1. கண்கள் சொக்குகின்றன.

  இனிமை.

  ReplyDelete
  Replies
  1. தாலாட்டின் ஆனந்தம் உறங்குவதில் தான் இருக்கிறது. அப்படியானால் உங்கள் கண்கள் சொக்கியதில் எனக்குப் பெரு மகிழ்வே.

   Delete
 2. கண்ணுறங்க வைத்ததெனைக் கண்மணிஉன் தாலாட்டு!
  பண்ணெடுத்து பாடிடுவர் பார்!

  மிக மிக அருமைம்மா!
  பாடிப்பார்த்தேன் மனத்துள்! அழகான பதங்கள்!
  குழந்தைத் தாலாட்டு என இப்பாடலைப் பாடகர்கள்
  எடுத்துப் பாடுவதைக் காணப்போகிறோம்!..:)

  மிக இனிமை! அருமை! வாழ்த்துக்கள் மா!

  ReplyDelete
  Replies
  1. கண்மணி என்றழைத்த வெண்பாவில் சொக்கி நிற்கிறேன். நன்றிங்க மா.

   Delete
 3. புவித்துயரைத் தான்மறந்து கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

  அருமை, அருமை, அம்மா வாழ்த்துக்கள்,

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ! நான் சகோ என்று தானே அழைக்கிறேன். தாங்கள் பெயர் சொல்லியும் அழைக்கலாம் இதென்ன அம்மா? ஹஹ.

   Delete
  2. நீங்கள் தாலாட்டுப்பாடியுதும் நாங்களெல்லாம் குழந்தைகளாகிவிட்டோம் அம்மா சொன்னததில் வியப்பொன்றுமில்லை

   Delete
 4. அருமையான பாட்டு அற்புதமான தாலாட்டு! நன்றி சகோ!

  அருமை இனிமை!!

  ReplyDelete
 5. அட! அருமையான தாலாட்டு.....நல்ல மெட்டு அமைத்துப் பாடும் வடிவில்....இனிமை....

  ReplyDelete
  Replies
  1. இதுவரை மூன்று ராகங்களில் நீலாம்பரியில் துவங்கி பாடிவிட்டேன்.
   இன்னமும் மற்ற ராகங்களிலும் பாடு பாடு என்று சொல்கிறது இந்த பாடல்.
   குழந்தையோ இந்தப் பாடலின் முதல் வரிக்கே தூங்கி விட்டது.

   உங்களுக்குப் பிடித்த தர்பாரி கானடா ராகத்திலும் மிக நன்றாக வருகிறது.


   இதை இயற்றிய சசிகலா மேடம் அவர்கள்
   பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்திட
   புவியெங்கும் பெயர் ஒலிக்க
   புவனேஸ்வரி அம்மன் அருள் புரிவார்.

   சுப்பு தாத்தா.
   www.subbuthathacomments.blogspot.com

   Delete
  2. நீங்கள் கேட்டவுடன் தாத்தா பாட வந்துவிட்டார் பாருங்கள்.
   சுப்பு தாத்தா வலைஉலகப்பாடகர் அவர் பாடி உற்சாகம் படுத்தும்விதம் மிகவும் மகிழ்வாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது எங்களுக்கு. அவருக்கு எனதுமனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   என்றென்றும் அனைவரையும் பாடி மகிழ்விக்க வேண்டுகிறேன்.

   Delete
 6. குழந்தைகள் விழித்திருக்கையில் பார்த்துமகிழ்வதும் ஆநந்தமே உறங்க வைத்துக் காண்பதும் அழகு அருமையான தாலாட்டுப் பாடல் மயக்குகிறது சந்தமும் நடையும் பாராட்டுக்கள். .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

   Delete

 7. வணக்கம்!

  விண்ணுருகும் வண்ணத்தில் விந்தைமொழி நான்கண்டேன்!
  பெண்ணுருகும் வண்ணத்தில் பேசுமொழித் தேன்உண்டேன்!
  மண்ணுருகும் வண்ணத்தில் வார்த்தமொழிச் சீர்கொண்டேன்!
  பண்ணுருகும் வண்ணத்தில் பாடியுளார் நம்தென்றன்!
    பாவலர்கள் நெஞ்சுருகப் பாடியுளார் நம்தென்றல்!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. விந்தைமொழியழகை எங்களுக்கு விருப்பமுடன் சொல்லித்தரும் உங்கள் ஆசியே எங்கள் வளர்ச்சிக்கு காரணம் ஐயா. வணங்கித்தொடர்கிறேன். நன்றிங்க ஐயா.

   Delete
 8. கொஞ்சும் தமிழ் அழகு வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 9. குழந்தை அழகு;கவிதையும் அழகு.
  இதைக் கேட்டபின் குழந்தை உறங்காது இருக்குமோ?

  ReplyDelete
 10. அருமை சகோதரியாரே
  எனக்கும் கண்கள் சொக்கத்தான் செய்கின்றன
  தம +1

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சிங்க சகோ.

   Delete
 11. தாலாட்டு அருமைம்மா ! அந்தக் குட்டியும் செம ! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

   Delete
 12. அழகழகா பூத்திருக்கு வார்த்தைகளும் கோர்த்திருக்கு வாச மலர்ச்சோலையாக தாலாட்டும் பாங்குதனை தமிழ் கேட்டு விழித்ததிங்கே விழியுறங்கும் அரும்புகளும் மனமுறங்கா கேட்டிருக்கும் தமிழ் மணம் வீசும் கவிவாசம்

  ReplyDelete
  Replies
  1. அழகான பின்னூட்டம் நன்றிங்க.

   Delete
 13. பூக்களை அழகான மாலையாக தொடுப்பதுபோல உங்கள் கவிதை வரிகள் வார்த்தைகளை அழகான கண்ணிகளாக தொடுத்து அசத்திவிட்டீர்கள்.. நன்றி..

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி