Ads 468x60px

Monday, October 19, 2015

வாழ்வின் விளிம்பில் வாசிப்பு அனுபவம்.கதை என்றதும் நமக்கு ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்... இப்படிச் சொல்பவர்களும் உண்டு.
பாட்டி வடை சுட்ட கதையையே சொல்பவர்களும் உண்டு.
இப்படி கதைசொல்லும் முகங்கள் மாறினாலும் கதாப்பாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் கதைகளைத்தான் நான் அதிகம் கேட்டிருக்கிறேன். மேலும் சுருங்கச் சொல்லிப் போவதே(கவிதை) என் வழக்கம் என்பதாலும் கதைகளின் பக்கம் அவ்வளவாக நான் நேரம் செலவிட்டதில்லை.
அன்பின் பரிசாக புதுக்கோட்டை பதிவர்சந்திப்பில் திரு.ஜி.எம்.பி என்றழைக்கப்படும் ஜ.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் கொடுத்த சிறுகதைத் தொகுப்பை பேருந்து பயணத்திலேயே வாசிக்க ஆரம்பித்து இருளத்தொடங்கும் வரை வாசித்து அதற்கு மேல் அடடா என்று எடுத்து வைக்க மனமில்லாமல் எடுத்தும் வைத்து விட்டேன்.
அதன் பிறகு இன்று தான் கதை பற்றிய விமர்சனம் அல்ல. என் வாசிப்பின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
முதல் கதையாக வரும் தலைப்பே கதையை உணர்த்தும் விதமாக வைத்திருக்கிறார். வாழ்வின் விளிம்பில் அதுவே நூலின் தலைப்பும். வாழும் நாட்களை எல்லாம் ஒரு சேர நினைத்துப் பார்த்து தவித்து ஏங்கும்
மனநிலையை உடனிருந்து பார்ப்பது போன்ற உணர்வைத்தரும் அவர் எழுத்து நடை. உண்மையில் வாழ்நாள் முழுவதும் ஏதோ மயக்கத்திலேயே இருந்துவிட்டோம் என்பதை அதன் விளம்பில் தான் உணர்கிறோம் என்பதை சொல்லிச்செல்லும் கதை.
 கேள்விகளே பதிலாய்... என்ன தான் நவீன வளர்ச்சிகளை அடைந்தாலும் இந்த சாமியார் பூஜை இப்படியான கண்மூடித்தனமான விஷயங்களில் இருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள விரும்புவதில்லை அல்லது அப்படியொரு போர்வையைத் தேடிக்கொள்கிறார்கள் என்று சொல்லும் படியாக செல்லும் கதை ஓட்டம்.
 ஏறிவந்த ஏணி நடுத்தர குடும்பத்தில் ஒரு தலைவனின் மனநிலையை படம்பிடித்துக்காட்டியிருக்கிறார் அதோடு நல்ல ஒரு வழிகாட்டுதலையும் கதையின் வழி சொல்லிச்செல்கிறார். " நிலையான வருமானம் இல்லாதவனுக்குப் பணம் கொடுப்பதை விட நிலையான வருமானத்துக்கு வழி செய்வது சிறந்தது என்பதை" .
 கண்டதும் காதல் அடுத்தென்ன என்று யோசிக்குமுன்னே திருமணம் என்றாகிவிட்ட இன்றைய காதல் திருமணங்களும் அதனால் எழும் பிரச்சனை மட்டும் விவாகரத்து குறித்தும் சிந்திக்க வைக்கும் கதை. மனசாட்சி.
அனுபவி ராஜா அனுபவி கதையைப் படித்தால் நிச்சயம் வாழ்வில் இப்படியும் ஒரு கோணம் இருப்பதை உணர முடியும்.
 வாழ்க்கை ஒரு சக்கரம ;தான் என்பதை அழகான தலைப்போடு அவர் சொல்லிச்செல்லும் விதமும் வெகு சுவார்யஸ்ம்.
.இப்படியும் ஒரு கதை ...என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு இது தான் வாழ்க்கை என்று சலித்துக்கொண்டு உடன்வாழாமல் தலையைச் சீவியெடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றவனின் ஆவேசம் அனைவருக்குள்ளும் ஊடுறுவத்தவரவில்லை.
 எங்கோ ஏதோ தவறு என்று ஒவ்வொருவரும் விலக நினைத்தால் இல்லற வாழ்க்கை இல்லாமலே போய்விடும் என்பதை எங்கே தவறு என்று தெரிகிறதா? என்று கேட்டு சிந்திக்க வைக்கிறார்.
  விபரீத ஆசைகளின் விளைவாக எழும் விபரீத உறவுகள் கடைசியில் என்னவாகும்....?
"சௌத்வி கா சாந்த் ஹோ"  என்ற கதையை படிக்கும் போது நம்மையும் அறியாமல் இந்த ஜோசியம் மீதெல்லாம் நம்பிக்கை வந்துவிடும் போல.
கல்யாணத்தைப் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள் லட்சுமி கல்யாண வைபோகம்  இந்த கதையை படித்து முடிக்கும் வரை படபட வென அடடா திருமணம் நடந்துவிடுமா? என்று எண்ணத் தோன்றிவிடுகிறது.
பயம் என்று வந்துவிட்டாலே ஒன்றும் புரியாது இதில் இரவு நேரத்தில் பயமென்றால் சொல்லவா வேண்டும்!
அடுத்தவருக்கு பாரமாக இருக்கிறவர்களுக்கு ஆசா பாசாங்கள் இருக்க வேண்டுமா என்ன? என்ற கேள்வியை படிப்பவர் மனதில் எழச்செய்கிறது பார்வையும் மௌனமும்.
விளம்புகளில் தொடரும் கதை சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. பெண்ணின் மனஇயல்புகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
வயதாகிக்கொண்டே போனால் என்ன மனசு என்றும் இளமையாகத்தானே இருக்கிறது என்பதை கண்டவனெல்லாம் கதையில் கண்டேன்.
நதிமூலம் ரிஷிமூலம் படித்தவுடன் இப்படியும் நடக்குமா? என்று நினைத்தேன்.

"எல்லாச் சூழல்களிலும் எனக்கு உறுதுணையாக நிற்கும் மனைவி மற்றும் மக்களுக்கு இச்சிறுகதைத் தொகுப்பு சமர்ப்பணம் "என்று ஐயா எழுதியிருப்பது வெறும் எழுத்தல்ல என்பதை அன்று பதிவர் சந்திப்பில் அவரது மனைவி மற்றும் மகனைக் கண்ட போது தெரிந்துகொண்டேன்.
நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தும் திறன் அனைவருக்கும் அமைவதில்லை. அது ஐயாவிடம் இயற்கையாக அமைந்திருக்கிறது. அதுவே அவர் பலம் பலவீனம். 
ஒரு கோப்பை தேநீரை எடுத்தவுடன் ரசித்து ருசித்து பருகி முடிக்க வேண்டும். இடையில் எந்தத் தடங்கலும் இல்லாமல் அப்படியாக இருந்தது இந்த சிறுகதைத்தொகுப்பின் வாசிப்பு அனுபவம். இதுபோன்ற கதைகளை  இன்னும் நிறைய எழுதி வாசகர்களை வசியப்படுத்த வேண்டும் இந்த இளைஞர் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிங்க ஐயா.


 நூல் தலைப்பு : வாழ்வின் விளம்பில்
ஆசிரியர் : ஜி.எம். பாலசுப்ரமணியம்
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம்
தி.நகர் சென்னை-17.

34 comments:

 1. வணக்கம் சகோ நல்லதொரு விமர்சனம் அழகாக தொகுத்து தந்தீர்கள் நானஉம் படித்து இருக்கின்றேன் நிறைய வாழ்வியல் உண்மைகளை அழகாக தொடுத்து இருப்பார் ஐயா நான் மனம் ஒன்றி படித்த நூல்களில் இதுவும் ஒன்று வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ. வாழ்வியல் உண்மைகளை அழகாக தொகுத்துத்தந்திருக்கிறார் என்பதே உண்மை. நன்றிங்க சகோ.

   Delete
 2. ஜி.எம்.பி ஐயா உண்மையிலேயே இளைஞர்தான் சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
 3. ஆமாம் சகோ! நானும் படித்தேன் அருமையாக உள்ளது! உங்கள் விமர்சனமும் அருமையாக உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா மிக்க மகிழ்ச்சிங்க சகோ.

   Delete
 4. அருமையான புத்தக அறிமுகம்
  அவர் எழுத்து எப்போதுமே
  கொஞ்சம் வித்தியாசமானதுதான்
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா அவர் கதைகளை படிக்கும் போது வித்தியாசமான சிந்தனைகள் கதையானதை உணர முடிகிறது. நன்றிங்க ஐயா.

   Delete
 5. உங்கள் வாசிப்பு அனுபவம் மிக நல்ல விமர்சனமாக வெளிப்பட்டிருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. அய்யோ எனக்கு விமர்சிக்க எல்லாம் தெரியாதுங்க ஐயா.

   Delete
 6. ஜி.எம்.பி. ஐயா சென்னைக்கு வந்திருந்தபோது சந்தித்தேன். அப்போது இந்தப் புத்தகத்தை பரிசாகத் தந்தார். இன்னும் படிக்கவில்லை...

  ReplyDelete
  Replies
  1. படித்துப் பாருங்கள் நிச்சயம் ஒரு புது அனுபவம் கிடைக்கும்.

   Delete
 7. உங்கள் விமர்சனத்தைப் பார்த்தபின் நான் என்ன எழுத எனத் தோன்றுகிறது.

  உங்களின் வாசிப்புத் திறனுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியரே எனக்கு விமர்சிக்கத் தெரியாது என் அனுபவத்தை எழுதினேன் அவ்வளவே .

   Delete
 8. வணக்கம்

  புத்தகத்துக்கான விமர்சனம் நன்று படித்து மகிழ்ந்தேன் ..வாழ்த்துக்கள்.த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. அய்யா எனக்கும் தந்த நூலை வாசிக்க வேண்டும் வேகத்தை தந்தது, உங்க பகிர்வு :)

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஒரு புது அனுபவம் கிடைக்கும் வாசிப்பில்.

   Delete
 10. அட..! அப்படியா...! என்று நூலினைத்தேடி வாசிக்க வேண்டும் என்னும் ஆவலை ஏற்படுத்திய விமரிசனம்!
  ஒன்றைப் படித்தால் அதனை விமரிசிக்கும் திறன்
  எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் நீங்களோ
  அந்த நூலை எங்கே கிடைக்கும் எனத் தேடவைக்கும் படியாக
  மிக அருமையாக விமர்சித்து எழுதியுள்ளீர்கள்!

  நூலாசிரிய ஐயாவுக்கும் விமர்சனம் செய்த உங்களுக்கும்
  உளமார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி இத்தனை நாளாக நூலினைத் தேடி வாசிக்காமல் இருந்தோமே என்று நினைக்க வைக்கும் நூல்.நன்றிங்க தோழி.

   Delete

 11. வணக்கம்!

  வாழ்வின் விளிம்பில் எனும்நுாலை வாசித்தே
  ஆழ்ந்து படைத்த அருஞ்சொற்கள் - சூழ்தென்றல்
  போல்மனத்தைத் தொட்டனவே! போற்றுகிறேன் துாயதமிழ்ப்
  பால்மனத்தை நானும் பணிந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் வருகையும் வெண்பா வாழ்த்தும் எனை மேலும் உற்சாகப்படுத்தும் நன்றிங்க ஐயா.

   Delete
 12. மிகவும் அருமையான விமர்சனம்...
  நானும் வாசித்திருக்கிறேன்...
  ஐயாவின் எழுத்து வாழ்வியல் பேசும் எழுத்து...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் உங்க விமர்சனமும் படித்தேன். உங்க அளவிற்கு எழுத வராது எனக்கு.

   Delete
 13. தேடி வாசிக்கத்தூண்டும் விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா இது விமர்சனம் இல்லங்க. என் வாசிப்பு அனுபவம்.

   Delete
 14. நல்லதோர் வாசிப்பனுபவம்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  GMB ஐயாவிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. விமர்சனம் பார்த்த வுடனேயே என்னை வாசிக்கத் தூண்டுகிறதும்மா . அத்தனை நன்றாக உள்ளது. ம்..ம் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 16. அன்பு சகோதரிக்கு( மகளுக்கு?) நன்றி. ஒரு நூலை எழுதி விட்டு அது எப்படிப்பட்ட வரவேற்பு பெறு கிறது என்னும் ஆவால் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கும் காய்தல் உவத்தல் அற்ற எந்த விமரிசனமும் ஏற்புடையதே இந்தக் கதைகள் எந்தப் பத்திரிக்கையிலும் வெளி வராதவை வரவும் வாய்ப்பில்லை. கதைகளை எழுதும் போது என்னையும் மீறி என் எண்ணங்கள் ஆங்காங்கே தலைகாட்டும் அதை மறைக்க முயற்சி செய்ய வில்லை. நான் எழுதும் கதைகளில்தானே என் எண்ணங்களைக் காட்ட முடியும் அதுவே ஒரு குறையாகப் பலரும் கூறினார்கள் உளவியல் சம்பந்தப் பட்ட கருவே கதைகளாகி இருக்கின்றன. வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற் கு நன்றி மேம்

  ReplyDelete
  Replies
  1. ஐயா சசி என்றும் அழைக்கலாம். எண்ணங்களை மறைக்காமல் மறுக்காமல் சொல்லும் தைரியம் பலருக்கு இருப்பதில்லை. அது உங்களிடத்து இருப்பதில் மகிழ்வே. தொடர்ந்து எழுதுங்க. நன்றிங்க ஐயா.

   Delete
 17. அழகான வாசிப்பு அனுபவத்தை அற்புத விமர்சனமாக பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள்.
  த ம 11

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி