Ads 468x60px

Sunday, October 18, 2015

சிரிச்சிப் பேச மறந்தவரே...

ஆண் பெண் உரையாடலைப் போல படிக்கவும் 
சின்னவரே என்னவரே
சிரிச்சிப் பேச மறந்தவரே...

சின்னவிழிப் பாா்வையில
சிறையெடுக்கும் என்னவளே
சிரிச்சிகிட்டு நிற்பதென்ன?
அணைக்கவாடி சின்னபுள்ள?


ஏ..மச்சான் இந்நேரம்
எனப்பிடிக்கும் பய நோயும்..
கிளியுறங்கும் கீத்துறங்கும்
கீதையென்ன இந்நேரம்...?

கெரங்கடிக்கும் உன்னெனப்பு...
கிறுக்காட்டம் சுத்துரேன்டி
கிட்ட வாடி வௌக்கந்தாறேன்.

மறந்தே தான் போனேன் மச்சான்
வௌக்கு வச்சி நேரமாச்சி...
வீதியில என்ன பேச்சி....

அடி போடி வௌக்கெண்ண.....

அட... ஆமா மச்சான் அத வாங்கத்தான்
நானும் வந்தேன்.படம் உதவி இணையம்.

54 comments:

 1. ஹஹஹ நல்லாருக்கு சசி சகோ...

  ReplyDelete
  Replies
  1. சிரித்தபடி வந்த பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சிங்க.

   Delete
 2. அருமை சகோதரியாரே
  நன்றி
  தம+1

  ReplyDelete
 3. அருமை சகோ கிராமத்து வயல் வெளிகளில்கள் நடந்து போவது போன்ற உணர்வு

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ வரப்பில் முன்னால் போவோரும் பின்னால் வருவோரும் பேசும்படியாக நினைத்தேன் எழுதினேன். சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

   Delete
 4. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு ,விளக்கெண்ணை வாங்க வந்த மாதிரி தெரியலை :)

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை விளக்கெண்ணைய் காதலனை பார்க்க வந்திருப்பாரோ

   Delete
  2. அவங்க எதற்கு வந்தாங்களோ?
   ஆனாலும் உங்க இருவருக்கிடையில் மாட்டிக்கொண்டார்கள்.ஹஹ.

   Delete
 5. அருமை அருமை
  குறிப்பாக முடித்த விதம்...

  ReplyDelete
 6. நன்று.

  ரசித்தேன் சகோ. பாராட்டுகள்.

  ReplyDelete
 7. அருமை சகோ, ரசித்தேன்!

  ReplyDelete
 8. // சின்னவரே என்னவரே
  சிரிச்சிப் பேச மறந்தவரே...///
  சிங்காரியை பார்த்து சிரிச்சு பேச மறந்தவர்களும் உண்டா என்ன?

  ReplyDelete
  Replies
  1. இவர் மறந்துட்டாராம்..ஹஹ.

   Delete
 9. வணக்கம்
  சகோதரி

  இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. சர்க்கரைப்பந்தல்

  ReplyDelete
 11. அவங்க சிரிச்சுப் பேசலைன்னாலும்
  பாடல் முடிவில் நான் சிரித்தேவிட்டேன் தோழி!

  நகைச்சுவை ததும்பும் நாட்டுப்பாடல் மிக அருமை!
  எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர்களோ..:)
  மிகவும் ரசித்தேன்! வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. சாதாரண பேச்சு வழக்கு தானே தோழி.

   Delete
 12. அட கடவுளே விளக்கெண்ணெய் வாங்கவா இந்தக் கூத்து ம்..ம் ரசித்து சிரித்தேன் மா ... அருமைம்மா !

  சிரித்துப் பேசி மறக்காம
  சிறகடிச்சுப் பறக்காம
  விரிச்ச வலையில் விழுந்திடாதம்மா - அந்த
  விளக்கெண்ணெய்யை மறந்திடாதம்மா


  ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணா இருக்கணும் என்ன நான் சொல்கிறது விளக்கெண்ணெயை வாங்கிட்டு போம்மா மறந்திடாமல் ஹா ஹா .....

  ReplyDelete
  Replies
  1. எசப்பாட்டு சூப்பரா இருக்குங்க..ஹஹ.

   Delete
  2. இனியா சூப்பராக இருக்கு உங்க எசப்பாட்டு.... ஆமாம் நீங்க இருவரும் ஒருவர் காதலனாகவும் ஒருவர் காதலியாகவும் பேசுவது போல ஒரு அழகான பாட்டை எழுதி வெளியிடலாமே நேரம் கிடைத்தால் இருவரும் பேசி முயற்சி செய்யுங்கள்

   Delete
  3. பயந்து ஓடாமல் இருந்தால் சரி யாரும்... நான் ரெடி .

   Delete
  4. ஐயடா இதெல்லாம் சரிப்பட்டுவருமா ? வம்பில மாட்டி விட்டுடு வீங்க போலிருக்கே . ஆத்தாடி .....ம்..ம் முயற்சித்து பார்க்கலாம் ...ஆனால் முடியுமா தெரியலியே ......

   Delete
  5. கவிதைகளை படிக்க நானே துணிச்சலாக இருக்கிறேன் என்றால் நீங்கள் எழுததுவங்குவதுதான் நல்லது. சாக நான் ரெடி சாகடிக்க நீங்கள் இருவரும் ரெடியா?

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
 13. நீங்கள் தமிழ் திரையுலகிற்கு பாடல்கள் எழுத முயற்சி செய்யலாம். நல்ல திறமை இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அதற்கு நிறைய பேர் இருப்பாங்க சகோ.
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க சகோ.

   Delete
 14. இப்படித்தான் எதையாவது சொல்லி பெண்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஆண்கள் மட்டும் ஊமையாகிவிடுவதில்லையோ?
   (பொதுவான கருத்துங்க ஐயா)

   Delete
  2. ஆண்கள் ஊமையாக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை

   Delete
  3. ஊமையாக இருந்து பெண்களை அழவைக்கும் யுக்தி அது.

   Delete
 15. அருமை மா வாழ்த்துக்கள்,
  என்னமா பட்டையை ச்சே பாட்ட எழுதுறீங்க,,,,
  அருமை, தொடருங்கள், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஹஹ (சும்மா பேசிட்டு இருக்கோங்க) வடிவேல் ஸ்டைலில் படிங்க.

   Delete
 16. சூப்பர் ட்விஸ்ட்
  அருமை

  ReplyDelete
  Replies
  1. அஜீத்தே ரசித்த பிறகு வேறென்ன வேண்டும் எனக்கு.

   Delete
 17. மதிப்பிற்குரிய தமிழ் இளங்கோ ஐயா சொல்வது உண்மைதான்.

  தமிழ்த் திரையுலகு நல்ல பாடலாசிரியரை இழந்து விட்டது என்பேன்.

  இது வெறும் பேச்சில்லை.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆத்தி இதென்ன..?
   அந்த ஆசையெல்லாம் இல்லை ஆசிரியரே.

   Delete
 18. நண்பர்கள் இளங்கோ மற்றும் விஜூ இருவரும் சொல்வது உண்மைதான். சந்தத்திற்கு வார்த்தை அமைக்கும் திறன் இருந்தால் தாராளமாக சினிமாவில் பாட்டெழுதலாம். பொதுவாக சினிமா பாடல்களில் ஆணின் எண்ணங்களே பிரதிபலிக்கும். பெண்ணின் எண்ணங்களும் பிரதிபலிக்க பெண் கவிஞர்கள் வேண்டும். முயற்சியுங்கள். வாழ்த்துக்கள்!
  த ம 13

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ.அன்பின் வாழ்த்திற்கு நன்றிங்க சகோ.

   Delete

 19. வணக்கம்!

  கொஞ்சும் மொழியுள் கொடுத்த கவிபடித்து
  நெஞ்சம் நிறைந்துநான் வாழ்த்துகிறேன்! - தென்றலே!
  வட்டாரப் பேச்சழகு! வாசமலர் போல்மணக்கும்!
  சிட்டாகத் தோன்றும் சிறகு!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. இனிக்கும் வெண்பா இன்னும் வேண்டுமெனக் கேட்கும் படியாக இருந்தது நன்றிங்க ஐயா.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி