Ads 468x60px

Thursday, October 15, 2015

எங்குமே தமிழைப் பாடி! இனிமையே காண வேண்டும்!


மங்கள நாதம் போலே
      மனத்தினில் மகிழ்ச்சி வேண்டும்!
செங்கதிர் ஒளியாய் எங்கும்
      சிறப்புறும் மேன்மை வேண்டும்!
எங்குமே தமிழைப் பாடி
      இனிமையே காண வேண்டும்!
தங்கிடும் வசந்தம் நாளும்
       தழைத்திட வழிகள் செய்வோம்!

வித்தென என்னுள் ஓங்கும்
      வியத்தகு தமிழே போற்றி!
சொத்தென ஆனாய்! வாழ்வின்
      சொர்க்கமும் கண்டேன் உன்னில்
முத்தினைக் காக்கும் சிப்பி
      முத்தமிழ்ப் புலமை வேண்டும்!
நித்தமும் நிறைவைப் பெற்று
       நேர்த்தியாய் தமிழைக் காப்போம்!

நலமது செழிக்க நாளும்
       நன்மொழிப் பாக்கள் மீட்டு!
களமதில் சேர்ந்த நெல்லாய்க்
        களிப்புற உறவைக் கூட்டு!
உலகினில் உள்ளோர் எல்லாம்
     ஒன்றெனச் சட்டம் தீட்டு!
நிலமகள் மகிழ்வாய் ஏந்த
       நிறைந்திடும் இன்பம் ஏற்போம்!

28 comments:

 1. அருமை கவிஞரே மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. மங்கலம் யாவும் மனம்போலே வாய்க்கட்டும்!
  பொங்குதமிழ் என்றென்றும் போற்று!

  எங்கும் இனிமை பெருக எங்கள் தமிழ் போலல்லாது வேறுண்டோ!
  அருமையான விருத்தம்! அகம் நிறைந்தது தோழி!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வெண்பா வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 3. ஆஹா அருமையான ஆக்கம்,
  வாழ்த்துக்கள்
  தொடருங்கள்.

  ReplyDelete
 4. நவராத்திரி திருவிழா .
  நித்தமும் நித்தமும் ஓர்
  நாத விழா.

  இன்று சசி கலா அந்த மங்கள கீதத்தின்
  ஒளி ஏற்றுகிறார்.

  அற்புதமான படைப்பு.
  படிக்கும்போதே இந்தோள ராகத்தில் தான் படித்தேன்.

  இப்போது பாடுகிறேன்.

  உங்களை நேரிலே சந்தித்து எனது வாழ்த்துக்களைத தெரிவிக்கலாம்
  என எண்ணியிருந்தேன். இயலவில்லை.

  மங்கள நாதம் போல ,
  மாண்புறும் தங்கள் கவிதை
  மாங்காடு அம்மன் தந்த
  மணிகள் சூழ் தங்க மாலை.

  சுப்பு தாத்தா.
  www.subbuthathacomments.blogspot.com
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நானும் தங்களை எதிர்பார்த்தேன் ஐயா.
   தாங்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் எங்களை மேலும் அதிக உற்சாகத்துடன் எழுத வைக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
  2. https://www.youtube.com/watch?v=0tYQu45C9PY

   subbu thatha.
   www.vazhvuneri.blogspot.com

   Delete
 5. Replies
  1. மறுபடி போட்டியா? கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.

   Delete
 6. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. இந்தக் கவிதையில் வரும் வரிகள் உண்மை உணர்வுகளா இல்லை சந்தம் பொங்க எழுதும் வரிகள் தங்களது திறமையை காட்டவா

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. ஐயா ஒவ்வொரு வகையையும் கற்க எதாவது எழுதிக்கொண்டேயிருக்க வேண்டுமே ஆதலால் எழுதியது. நன்றிங்க ஐயா.

   Delete
 8. அருமை அருமை
  வார்த்தைகள் மிகச் சரளமாய்..
  ஆயினும் கரு விலகாது எழுதினால்
  இன்னும் சிறப்பாக இருக்குமே

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா சரியாகச்சொன்னீர்கள் இதெல்லாம் நான் முன்பு எழுதிப்பார்த்தது. இனி கவனமுடன் எழுதுகிறேன் நன்றிங்க ஐயா.

   Delete
 9. இந்த பாடலை நீங்களே பாடி யூ டியூப்பில் போட்டு ,,மதுரைத் தமிழன் உங்களைக் கலாய்த்து எழுதி இருப்பதை பொய்யாக்கலாமே :)

  ReplyDelete
  Replies
  1. எல்லோருமே சீரியசா எழுதினா எப்படி அப்படி எழுதவும் அதைக் கண்டு சிரிக்கவும் இப்படியான நண்பர்கள் வேண்டுமே. நீங்களும் எழுதுங்க.

   Delete
 10. அருமை தோழி..தமிழ் இப்பொழுது போல் எப்பொழுதும் உங்களுள் இருந்து எங்களுக்கு இனிமையான பாக்கள் பல தரட்டும்.
  உங்களை நேரலையில் கண்டு மகிழ்ந்தேன், மின்னலெனச் சென்றாலும் :)

  ReplyDelete

 11. வணக்கம்!

  ஒன்றே குலமென் றுரைத்த சிறப்புணர்ந்து,
  நன்றே குறளின் நலமுணர்ந்து, - அன்பேந்தி
  எங்குமே இன்றமிழை ஏந்தும் வழிசெய்தால்
  பொங்குமே இன்பம் பொலிந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. தங்கு தடையின்றி வரும் ஆற்றுவெள்ளமென தங்கள் தமிழ் ஆர்வம் எங்களையும் வளம்பெறச்செய்யும் என்ற நம்பிக்கையில் வணங்கித்தொடர்கிறேன் நன்றிங்க ஐயா.

   Delete
 12. பொங்கிடும் இன்பம் பொலியும் தமிழால்
  சங்கே முழங்கிநீ சாற்று !

  அருமைம்மா வாழ்க தமிழ் ! நன்றி வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்தினால் மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 13. சசி சசோ! அருமையான கவிதை வரிகள்...கொஞ்சம் விலகிச் சென்று மீண்டும் வந்து முடிகின்றதோ என்று தோன்றியது.....ஆனால் பா அருமை....உங்களைப் போல் எல்லாம் எங்களுக்கு எழுத வருமா என்று தெரியவில்லை...

  ReplyDelete
  Replies
  1. நான் உங்க எழுத்துக்களைப்பார்த்து அடடா! இவர்களைப்போல எழுத வருமா என்று நினைப்பேன். தாங்கள் இப்படி நினைத்தால் என்ன சொல்ல?ஹஹ.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி