Ads 468x60px

Tuesday, October 20, 2015

ஜோடிக்கிளிகள்!


வெள்ளரிக்கா தோட்டத்துல
வேலியில்ல காவலுக்கும்
வெரசாத்தான் வாருமய்யா
விடியும் வரை பேசிடுவோம்.

மஞ்சள் மணக்குதடி
மரிக்கொழுந்து வாசக்காரி
வெள்ள மனத்தவளே
விரைந்தோடி வாரேன் புள்ள.

கத்தரிக்கா தோட்டத்துல
கணக்கெடுக்க ஆளுமில்ல
கண்ணழகா வாருமய்யா.
கதை கதையா பேசிடுவோம்.

முத்துப்பல் பேச்சுக்காரி
மூக்கு நீண்ட சின்னதாயி
அச்சு வெல்லமா இனிக்கும்
அத்த மக ரத்தினமே 
அணைச்சுக்க வாரேன் புள்ள.

அறுவடைக்கும் நாளிருக்கு
அதுக்குள்ள ஒளிஞ்சிருப்போம்
ஆசையோட வாருமய்யா
அரைநாழி பேசிடுவோம்.

ஒய்யாரக் கொண்டக்காரி
ஒடிசான தேகக்காரி
ஓடித்தான் வாரேன் நானும்
ஒரு முத்தம் தாயேன் புள்ள.

அடிக்கரும்பு இனிப்பாட்டம்
அழகாக பேசும் மச்சான்
அடுத்தெங்கே போயிடுவோம்
அதையும் அங்கே சொல்லுமய்யா.

காடுகர தோப்பெங்கும்
கைகோர்த்து போவோம்புள்ள
கண்ணசைவில் நூறு கதை
கலந்து பேசி வாழ்வோம் புள்ள.


 சென்ற பதிவில் மதுரைத்தமிழன் கேட்டபடி இந்தப்பதிவை பெண் எழுதுவதாக நானும் ஆண் எழுதுவதாக இளமதியும் எழுதியிருக்கிறோம். தோழி இனியாவைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. தொடர்பு கொண்டதும் அடுத்து இந்தமாதிரிப் பகிர்வுத் தொடரும்.. இளமதிக்கும் மதுரைத்தமிழனுக்கும் எனது நன்றி.

39 comments:

 1. ரசித்தேன்...

  (தொடர் பதிவு இப்படி எல்லாம் ஆரம்பமா...?)

  ReplyDelete
  Replies
  1. ஹஹ தொடரலாம்....அல்லது..?
   அப்படி சகோ.

   Delete
 2. அடி ஆத்தீ சசிகலா!... சும்மா போன என்னை
  சுகமா இருக்கியளான்னு கேட்டு
  வலிய வாயைக்கிளறிப் பாடவச்சது இதுக்கா.:)..

  வலையேத்துவீங்கன்னு தெரிஞ்சிருந்தா
  இன்னும் நல்லா பாடியிருக்கலாம்..:)

  நன்றியுடன் வாழ்த்துக்கள் மா!

  ReplyDelete
  Replies
  1. இப்பவே நீங்க மிக அருமையாகத்தான் பாடி இருக்கீங்க..பாராட்டுக்கள்

   Delete
  2. இதுவும் நன்றாகத்தானே இருக்கு. பாடுங்கம்மா.

   Delete
 3. நடக்கட்டும் நடக்கட்டும்...!!!

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ஆசிரியரே.

   Delete
 4. ஆஹா ஸூப்பர் சகோ கிராமிய நடை மிகவும் இரசித்தேன் நானும் இதுபோல 1 எழுதனும்னு மனசுல தோன்றிடுச்சு பார்ப்போம் இந்த மா3 இல்லாவிட்டாலும் பக்கத்தில் நிற்குமா ? என்று பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க எப்படி எழுதினாலும் நன்றாக இருக்கும் சகோ. எழுதுங்க.

   Delete
 5. அருமை கிராமிய நடையில்,

  தொடரட்டும்! நன்றி

  ReplyDelete
 6. தங்கள் பாணியில் அருமையான கவிதையும் அதற்குப் பொருத்தமாக ஒரு படமும்.... சூப்பர்...

  ReplyDelete
 7. விரசமற்று
  இரசிக்கும்படியாய்
  சரளமாக ஒரு
  சரசக் கவிதை
  எப்போதும் போல அருமையாக
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 8. // கண்ணசைவில் நூறு கதை
  கலந்து பேசி வாழ்வோம் புள்ள.//
  ஆகா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 9. வணக்கம்
  சகோதரி

  காதல் மனம் வீசும் கவிதை அருமையாக உள்ளது த.ம7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க சகோ.

   Delete
 10. வித்தியாசமாக இரண்டு பேரும் சேர்ந்து எழுதியது நன்று.

  ரசித்தேன் சகோ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க மதுரைத்தமிழன் ஐடியா.

   Delete
 11. அருமையா பாடிப் புட்டீங்களே அசத்தல் மா ரொம்பவே ரசித்தேன் ....என்னோடு தொடர்பு கொள்ளமுடியலையா நீங்க தான் தொடர்பு கொல்லனும் தெரியுமில்ல. ம்..ம் எதோ புரிஞ்சா சரி ....சரி இல்லேன்னா delete பண்ணிடலாம் ok வா ...

  \\\அவள் பறந்து போனாளே
  என்னை மறந்து போனாளே ///
  வலையினில் வந்தெனை
  சிறை செய்தாயென்
  சிறகினை ஏன் உடைத்தாய்
  என் உயிரையும் ஏன் பறித்தாய் ////

  \\\\எங்கிருந்தாலும் வாழ்க இணை பிரியாமல் வாழ்க
  கடலும் வானமும் கலங்கி நின்றாலும்
  கண்மணியே நீ வாழ்க //// ஹா ஹா இது எப்படி .....

  வண்ணக் கிழி பறந்து போச்சுதே - ஐயோ
  வைச்ச குறி தப்பிப் போச்சுதே
  எண்ணக் குழி தீஞ்சு போச்சுதே- என்
  கட்டை வேக காலம் குறிச்சதே

  வக்கணையா பேசிப்பிட்டு
  வாய்ப் பேச்சில் வீழ்த்திவிட்டு – உன்
  வித்தையைநீ காட்டிவிட்டாயே - என்
  காலையே நீ வாரிவிட்டாயே

  என்வசந்த காலம்
  தொலைஞ்சு போச்சுதே
  நெஞ்சில் வாரி முள்ளை
  இறைத்து விட்டாயே
  வண்ணக் கோலம்
  இட்ட பின்னாலே- இனி
  என்மிச்சக் காலம்
  நெருப்புக் கடலிலே தான்
  நின்னு நானும்
  வெந்து போறேனே .

  என்ன பார்கிறீங்க.... பார்த்தீர்களா என் நிலையை தென்றலா வந்து என் வாழ்வை புயலா க்கிட்டாங்கப்பா.... ஹா ஹா .....
  ஐயோ எப்படி இருக்கோ தெரியலையே அப்பிடியே வெளியிடுகிறது ஒருபக்கம் எல்லாம் இந்த மதுரை தா தமிழரால வந்தது சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்து விட்டாரே இப்படி என்னை புலம்ப வைத்து விட்டாரே ஹா ஹா .... நன்றி ஐயா நன்றி !....

  ReplyDelete
  Replies
  1. யாரு இங்க வந்து சோக கவிதை பாடி மதுரைத்தமிழனை வம்புக்கிழுக்கிறது... மதுரைத்தமிழனை வம்புக்கிழுத்தற்காக உங்களுக்கு ஒரு பனிஷ்மென்ட் நீங்களும் கவிஞர் இளமதி போல ஒரு கவிதையை சோக கவிதை அல்ல எழுதனும் என்று தீர்ப்பு அளிக்கிறேன்

   Delete
  2. ஆமாங்க உங்க ஐடி எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தாமதம் வேறொன்றுமில்லை. அதனால் என்ன இப்போது எழுதிவிடுவோம்.
   மதுரைத்தமிழன் சொல்வது போல சோகக்கவிதை வேண்டாம்.ஹஹ

   Delete
 12. மிகவும் அருமையான கவிதை...
  தாங்கள் இருவரின் கை வண்ணத்தில்...
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 13. அருமையான கிராமக் கவிதை

  ReplyDelete
 14. எனது வேண்டுகோளுக்கிணங்க ஒரு அருமையான மற்றும் இனிமையான கிராமிய மணம் கவிழும்கவிதையை படைத்த உங்களுக்கு மிகவும் நன்றி & பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. இப்படி எழுதுவதும் ஒரு புது உற்சாகத்தைத் தந்ததுங்க. தங்களுக்கு மிகவும் நன்றி.
   (நீங்களும் எழுதுங்க நான் ரெடி....)ஹஹ

   Delete
 15. வழக்கம் போலவே அசத்தல் சகோ
  தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 16. தொடரும் கவிதை. எங்களுக்கு தொடரும் ரசனை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 17. சசிக்கும் இளமதிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி. பாராட்டுக்கள். ஒருவர் பாட மற்றவர் பாட எப்படி எப்படி...?

  ReplyDelete
  Replies
  1. அது தான் சொல்லிவிட்டீர்களே எங்களுக்குள் நல்ல நட்பு ஆதலால் சாத்தியமானது.
   நன்றிங்க ஐயா.

   Delete
 18. இங்கு வந்து வாழ்த்திய அன்பு உறவுகள் எல்லோருக்கும்
  உளமார்ந்த நன்றி!

  தோழி சசிகலாவுக்கு ஈடு கொடுத்துப் பாடிட முடியாது என்னால்.
  ஆயினும் முயன்று பார்த்தேன். உங்கள் அனைவரின் ரசனையும் வாழ்த்தும்
  இப்படியும் மண்மணம் கமழப் பாட்டெழுத எனக்கு
  நல் ஊக்கமாக அமைந்துள்ளது. மிக்க நன்றி!

  எழுதத் தூண்டிய தோழி சசி கலா!.. உங்களுக்கும்
  என் வாழ்த்துக்களும் உளமார்ந்த நன்றியும்!

  ReplyDelete
 19. கிராமிய மெட்டு! தாளம் கொட்டு! மேளம் தட்டு! கவிதை பட்டு!

  ReplyDelete
 20. அட! சசி அண்ட் இளமதி சகோக்களே!!! ஒரு 5 நாள் வலைக்கு வரலைனா அந்த இடைவெளியில....மதுரைத் தமிழன் கேட்க எல்லாருமே சேர்ந்து இப்படிக் கலக்கிப்புட்டீங்களே!!

  அருமையான கிராமீய மணம் தவழ ...ரசித்தோம் ரசித்தோம்...

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி