Ads 468x60px

Tuesday, September 8, 2015

வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!


வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
(ஒன்றில் நான்கு)
பஃறொடை வெண்பா
வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
செந்தேன் மலரே! செழுந்தமிழே! - சந்தமதில்
விந்தை புரியும் வியன்மொழியே! என்னுயிரே!
சிந்தை மணக்கின்ற தென்மொழியே! - எந்நாளும்!
தந்துவப்பாய் பாக்கள் தழைத்து!

நேரிசை வெண்பா
வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
செந்தேன் மலரே! செழுந்தமிழே! - சந்தமதில்
விந்தை புரியும் வியன்மொழியே! என்னுயிரே!
தந்துவப்பாய் பாக்கள் தழைத்து!

சிந்தியல் நேரிசை வெண்பா
வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
செந்தேன் மலரே! செழுந்தமிழே! - சந்தமதில்
 தந்துவப்பாய் பாக்கள் தழைத்து!

 குறள் வெண்பா
வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
 தந்துவப்பாய் பாக்கள் தழைத்து!

இலக்கணக் குறிப்பு!
பஃறொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை வெண்பா வரவேண்டும்!
நேரிகை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை சிந்தியல் வெண்பா வரவேண்டும்!
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்கக்
குறள் வெண்பா வரவேண்டும்!
 மேலும் தகவலுக்கு எனது ஆசான் வலைப்பதிவில் காண்க.

படம் உதவிக்கு தோழி இளமதிக்கு நன்றி!

34 comments:

  1. ஆஹா ..அருமை ! அருமை ! வாழ்த்துக்கள் தோழி தமிழ்த் தாய் தங்களுக்கு வேண்டும் வரத்தை ஏற்கனவே நல்கி விட்டார் இருப்பினும் மென் மேலும் சாதனை புரிய அவள் அருள் தங்களுக்கு என்றென்றும் கிட்டட்டும் !

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி! தங்கள் முதல் வருகையும் முத்தான வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி. தங்களுடைய ஒன்றில் நான்கும் வெகு சிறப்பு.

      Delete
  2. வந்துன் மனக்கூட்டில் வாழ்கின்றாள் அன்புமகள்!
    தந்திடுவாள் தண்ணருளைத் தான்!

    அழகு மகள் அந்தமிழாள் அருள் என்றும் உங்களுக்கு
    உண்டு தோழி! அருமையான வெண்பாக்கள்!

    அட... நம்ம கைவேலைக்கும் கிடைத்த பெருமை பாருங்கள்!..:)
    நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி! தங்கள் ஒன்றில் நான்கு படித்ததும் எனக்கும் எழுதும் ஆவல் வந்து விட்டது எழுதிவிட்டு படம் தேடினேன் உங்கள் கைவண்ணத்தில் உருவான படமே கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி. நன்றிங்க தோழி.

      Delete
  3. சத்தியமா? நான் படிச்சப்ப எந்த தமிழ் ஆசிரியரும் இதையொல்லாம் இப்படியொல்லாம் கற்று தந்ததில்லை? அதனால் வாழ்த்துக்கள் அக்கா!!!

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன நீங்களும் எழுதுங்க சகோ.

      Delete
  4. வாசிப்பை ரசனையாக்கும் தங்களது எழுத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க ஐயா.

      Delete
  5. பாவலர்கள் எல்லோரும் பதிவுலகை இனிய பாக்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்!
    பாவம் நாங்கள் ,பார்ப்பது,ரசிப்பது ,புகழ்வது தவிர வேறென்ன செய்ய முடியும்!
    கலக்குங்க சசி!

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்களுக்கு வராதது எதுவும் உண்டா? மரபில் எழுதுங்கள் வெகுசிறப்பாக எழுதுவீர்கள் தாங்கள்.
      நன்றிங்க ஐயா.

      Delete

  6. வணக்கம்!

    பஃறொடை வெண்பா!

    தந்துவந்த பாட்டின் தரங்கண்டேன்! இன்பத்தை
    வந்துவந்த தென்றல் வளங்கண்டேன்! - செந்தேன்சீர்
    சொந்தமெனப் பெற்றுச் சுடரும் அடிகண்டேன்!
    பந்தமென என்னுள் படரும் சுவைகண்டேன்!
    முந்தும் கவிதை மொழி!

    நேரிசை வெண்பா

    தந்துவந்த பாட்டின் தரங்கண்டேன்! இன்பத்தை
    வந்துவந்த தென்றல் வளங்கண்டேன்! - செந்தேன்சீர்
    சொந்தமெனப் பெற்றுச் சுடரும் அடிகண்டேன்!
    முந்தும் கவிதை மொழி!

    சிந்தியல் நேரிசை வெண்பா

    தந்துவந்த பாட்டின் தரங்கண்டேன்! இன்பத்தை
    வந்துவந்த தென்றல் வளங்கண்டேன்! - செந்தேன்சீர்
    முந்தும் கவிதை மொழி!

    குறள் வெண்பா

    தந்துவந்த பாட்டின் தரங்கண்டேன்! இன்பத்தை
    முந்தும் கவிதை மொழி!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! பாட்டுக்கு பாட்டெழுதும் பாவேந்தே என்ன சொல்ல நான் தங்கள் வலையில் புதுப்புது பாவடிவம் கண்டு நாங்கள் எழுதிப்பழகுகிறோம். ஒவ்வொரு நாளும் தங்கள் புலமையைக் கண்டு வியந்து நிற்பதைத்தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை என்னால் . தங்களை வணங்கித்தொடர்கிறேன். வழிநடத்துங்கள் ஐயா.

      Delete
  7. அருமை தென்றல் சசி சகோதரி! கலக்குறீங்கப்பா...எங்களால் ரசிக்கத்தான் முடியும்...வேறு என்ன செய்ய...ஹஹஹ் அருமை!

    ReplyDelete
    Replies
    1. அறிவியல் ஆன்மீகம் சமூகம் இப்படி எதுவானலும் சிறப்பாக பின்னூட்டத்திலே கலக்கும் பின்னூட்டப் புயலான தாங்களே இப்படி சொன்னால் எப்படி?
      தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிங்க.

      Delete
  8. ஆஹா அருமை அருமை என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா, வாழ்த்துக்கள்.
    பிறகு நானும் முயற்சித்து வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் சொல்லுங்க எங்கும் வெண்பா எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விட்டதில் பெருமகிழ்வு எனக்கும். எழுதுங்க தோழி! வாழ்த்துக்கள்.

      Delete
  9. வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே! ஆஹா...... அருமையான சொல்லாற்றல் கண்டுவந்தேன் தோழி தமிழின் இனிமை பெருகட்டும் நின்கரம் பட்டு மேலும் நன்றி! வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி! ரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிப்பா.

      Delete
  10. Replies
    1. வாங்க சகோ. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  11. எழுதும் திறமை இல்லாவிடினும் இந்தவகை பாக்களை ரசிக்கும் தன்மையையாவது இறைவன் கொஞ்சம் எனக்கு கொடுத்து இருக்கின்றான் அருமை சகோ...
    எனது பதிவு இரண்டு கடந்து விட்டது....ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு திறமை இல்லையென்பதை நான் ஏற்க மாட்டேன். எழுத முயற்சி செய்யுங்க.

      Delete
  12. மிக அருமை தோழி
    உங்கள் மனக்கூட்டில் தங்கிய தமிழ்த்தாய் பாக்கள் தந்து எங்களை எல்லாம் உவகையில் ஆழ்த்துகிறாள். கலக்குங்க :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி. நன்றியும்.

      Delete
  13. ஒரு பாடலில் நான்கு வெண்பாக்கள் என
    இனியா காவியக்கவி துவங்க,
    தங்கள் வலையிலும் ஒரு
    தங்கம் போல் ஒளிருகிறது.
    ஒரு பாடலில் பாரீர் நான்கு வெண்பா.

    இலக்கிய வானில் ஒரு விண் மீனாக
    பா பளிச் பளிச் என மின்னுகிறது.
    தங்கள் படைப்புகள்.

    புலவர் பாரதி தாசன் அவர்களின் மாணவர்கள் எல்லோருமே
    ஒவ்வொருவரும் ஒரு கவிதை வெண்பா வடிவிலோ அல்லது வடிவிலோ இட்டு ஒரு நூலாக , புதுகை மாநாட்டில் வெளியிட்டால்
    நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா நன்றாகத்தான் இருக்கும். என்ன செய்வது இப்போது என்னால் இயலாது.
      நன்றிங்க ஐயா.

      Delete
  14. அன்புள்ள சகோதரி,

    வெண்பாவைப் பஃறொடையில் வித்திட்டு நேரிசை

    வெண்பா வளர்த்திட்டே சிந்தியல் நேரிசை

    வெண்பா கிளைத்திடச் செய்து குறளினில்

    வெண்பா கனிசுவைத்திட் டாய்!

    பாராட்டுடன் வாழ்த்துகள்.

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. அருமை வெண்பா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அவ்வளவுதானா ,ஒரு வரி பா எதுவும் இல்லையா:)

    ReplyDelete
  17. அருமை சகோதரியாரே
    அருமை
    தம+1

    ReplyDelete
  18. அழகு வெண்பாக்கள் சகோதரி! உங்கள் எல்லோரது திறமைகளைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.. வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி