Ads 468x60px

Saturday, September 26, 2015

இருவிழா அழைப்பிதழ்! இனித்திடும் நிகழ்வுகள்!


சின்னச் சிட்டாய் ராசாத்தி
நீயும் சீவி முடிச்சி வாயேன்டி..
வண்ண வண்ண மாக்கோலம்
வாச மல்லிப் பூவழகும்..
அவை நிறைந்த தமிழ்ப்பூக்கள்
ஆடல் பாடல் கலைகளுடன்
அழகாய் மிளிரும் கம்பன் விழா...
காணக் கண்கோடி வேண்டிடுமடி கட்டழகே
கண்கள் நிலைத்து நிற்குமடி  காவியமே!

அருமைத் தொண்டர் பாரதிதாசன்
ஆற்றும் பணிகோடி தமிழிற்கே!
பெருமை கூறும் கம்பன்விழாவில்
பெண்ணிவள் வணங்கி வாழ்த்துகிறேன்!

ஆண்டிற்கு ஒரு முறை எதாவது விழா ஏற்பாடு செய்வதென்றாலே என்ன பாடுபடுவோம் நாம் ஆனால் இங்கு பாருங்க கம்பன் விழா (பதினான்காம் ஆண்டு) அழைப்பிதழையே ஆச்சரியமாகக் காணும் படி வடிவமைத்து ஆடல் பாடல் பாட்டரங்கம் பட்டிமன்றம் இப்படி இன்னும் பல அசத்தல் நிகழ்வுகளை அயராது உற்சாகமுடன் ஏற்பாடு செய்து இரண்டு நாள் விழாவாக கொண்டாடும் எங்கள் ஆசானை நேரில் கண்டு வணங்கி  பாவலர் பட்டம் பெற நினைத்தேன். செல்ல இயலவில்லை அந்த வாட்டத்தைப் போக்கிய அற்புதமான நம் பதிவர் சந்திப்பு விழாவிற்காக காத்திருக்கிறேன்.கவிமழையில் நனைந்திருக்க
கட்டுரைகள் முகந்துடைக்கும்
ஆர்வமுடன் வலைதனிலே
அவரவர் பங்கீட்டை
அழகுடனே ஒன்றாக்கி
அன்புடனே முகங்காண
அனைவருமே வந்திடுவீர்..
புத்தம் புதுச் சோலையென
பூத்திருக்கும் புதுக்கோட்டைக்கே...

அனைவரும் கம்பன் விழாவினைக் கண்டு களித்து அப்படியே புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கும் மறக்காம வந்துடுங்க அதுக்கு முன்னாடி பதிவர் கையேட்டிற்கு உண்டான தகவல்களை கொடுத்திட்டிங்களா? இன்னும் நண்பர்களுக்கும் தகவல் சொல்லி கொடுக்கச்சொல்லுங்க அவங்களுக்கு நேரமில்லையா நீங்களே நண்பர்கள் உறவினர் தகவல்களை கொடுத்துடுங்க. அதுக்காக வலையில்லாதவங்க தகவல்களைக் கொடுக்காதிங்க சரியா?


42 comments:

 1. ஆஹா இருவிழா..மனம் நிறையும் விழாக்கள்...அழைப்புக்கவிதை அருமைமா ..வாழ்த்துகளும் நன்றியும்..

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாகச் சொன்னீர்கள் மனம் நிறையும் விழாக்கள் தான் தோழி. நன்றி எதற்கு நமக்குள்?

   Delete
 2. வணக்கம் சகோ! இரு விழாவும் திருவிழா தான்! சிறக்கட்டும்! கவிதை அருவி அருமை! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. புதுக்கோட்டை வாங்க சகோ.

   Delete
 3. கம்பன் விழா சிறக்க வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழி.

   Delete
 4. விறுவிறுவென விரையும் நாட்களுடன்
  விழாக்களின் வரிசையும் அணிவகுத்து வருகின்றன.
  அருமையாகப் பாடி விழா அறிவிப்புச் செய்தீர்கள்!

  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. கம்பன் விழாப்பற்றி தங்களிடமிருந்து வரும் செய்திகளுக்கான காத்திருக்கிறேன்.தோழி.

   Delete
 5. அருமை
  விழாக்கள் சிறக்கட்டும்

  ReplyDelete
 6. நீ்ங்கள் இந்நேரம் பிரான்சில் இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன் :(

  பாடல் அருமை.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அங்கு தான் இருந்தேனுங்க (மனதால்)ஹஹ . வெகுநாட்கள் ஆகிவிட்டதே தங்களை இணையத்தில் பார்த்து சீக்கிரம் இயக்கியப்பதிவுகளைத் தாருங்கள் ஆசிரியரே.

   Delete
 7. விழாக்கள் சிறப்புறட்டும்...

  ReplyDelete
 8. இரண்டு விழாக்களும் சிறக்க எனது வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தா புதுக்கோட்டை வாங்க குடும்பத்துடன்.

   Delete
 9. கவிதைகள் அருமை.பாரிஸ் செல்லாவிட்டால் என்ன,புதுகை சென்று கண்டு,களித்து,வென்று வாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையையும் எதிர்பார்க்கிறோம் ஐயா.

   Delete
 10. வலையுலகில் அன்று முதல் இன்றுவரை அருமையான கவிதைகளைத் தந்து வரும் சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்களுக்கு.

   Delete
 11. அன்புள்ள சகோதரி,

  இருவிழா அழைப்பு இனிய கவிகளுடன் இருக்கக் கண்டு மகிழ்ந்தோம்.

  த.ம. 8

  ReplyDelete
  Replies
  1. இப்போது நலம் தானே சகோதரரே?
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சகோ.

   Delete
 12. பாரிசுக்கு போகலாம் புதுகைக்கும் போகலாம். ..

  புதுகைலேந்து ஒரு ப்ளேன் ஏற்பாடு செய்தால், புதுகைக்கு வரும் பதிவர் எல்லாம்
  சேர்ந்து பாரிசுக்கு போகலாம்.

  ஆனால், அங்கே போனால்,தேமா, புளிமா , என்பார்கள்.
  அதையும் கற்றுக்கொண்டு போனால் வெண்பா இலக்கணம் வேறு அதைக் கூறு என்பார்கள்.
  எனக்குத் தெரிந்ததெல்லாம் மைசூர் பா ஒன்று தான்.

  அந்த மைசூர் பா தான் எனக்கு இந்த வலைப்பதிவு கவிதைகளிலே கிடைக்கிறதே.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஹஹ மைசூர் பாகென்ன புதுக்கோட்டை விருந்தே காத்திருக்கிறது தங்களுக்கு வாங்க ஐயா.

   Delete
 13. பாவலர் பட்டம் தர அழைத்தவர்கள் ,பயணச் சீட்டையும் அனுப்பி இருக்க வேண்டாமா :)ஆசானிடம் என் ஆலோசனையை வைக்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. அப்படி போடுங்க.
   எனக்கும் சேர்த்து.
   எனக்கு பயணச் சீட்டு மட்டும் போதும்.
   விசா வாங்கிவிடறேன். நானே/

   சுப்பு தாத்தா.

   Delete
  2. ஆசான் பயணச்சீட்டும் சென்று வர அனைத்து ஏற்பாடும் செய்வதாகவே சொன்னார்கள் எனக்குத் தான் இல்லத்தில் அனுமதியில்லை.(உஸ்....சத்தமா படிக்காதிங்க)

   Delete
 14. இரு விழா அழைப்பு அருமை சகோதரி...
  விழாக்கள் சிறக்கட்டும்.

  ReplyDelete
 15. அக்கா,
  உங்கள் பதிவு என்றுமே அற்புதம்.
  .

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சிங்க சகோ.

   Delete
 16. இரு பெரும் விழாக்கள் சிறக்கட்டும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறேன்.

   Delete
 17. அருமையான இரண்டு விழாவுக்கும் அற்புதமான இரண்டு கவிதைகள். நயமான இரு கவிதை அழைப்புகளுக்கும் நன்றி சகோ!
  த ம 10

  ReplyDelete
  Replies
  1. வாங்க! வாங்க! நன்றிங்க சகோ.

   Delete
 18. இரு விழாக்களும் சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துகள் சசி.

  ReplyDelete
  Replies
  1. இனிய தங்கள் வாழ்த்துடன் இனிக்குமே நிகழ்வும் நன்றிங்க கீதா.

   Delete
 19. வாழ்த்துகள் மகளே! மேலும் வளர வேண்டும்!

  ReplyDelete
 20. நான் தான் கடைசியா?
  மன்னித்துக்கொள்ளுங்கள்,,,,, அருமையான அழைப்பு,,, இல்லம் எப்பவும் இப்படி தான்,,,(மெதுவாக),
  வாழ்த்துக்களம்மா,,

  ReplyDelete
 21. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

  இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

  நன்றி...

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி