Ads 468x60px

Monday, September 21, 2015

இளைஞனே நீஏந்திடவே வெற்றிக்கனி!


கற்றுத் தெளிவைப் பெற்றிடுக
       கடமை உணர்ந்தே நடந்திடுக!
வெற்றி இலக்கை எதிர்நோக்கி
        வேங்கை போலே விரைந்திடுக!
சுற்றுச் சூழல் காத்திடுக
        சோலைப் பூவாய்ச் சிரித்திடுக!
சுற்றம் சூழ வாழ்ந்திடுக
           சுடரும் தமிழைப் போற்றிடுக!

நாளும் வேண்டும் நம்பிக்கை
           நமக்கும் அதுவே தும்பிக்கை!
காளை போலே நடைபோடு
          கண்ணி யத்தின் துணையோடு!
காலைத் தென்றல் காற்றாகும்
           கனிகள் கொண்ட சுவையாகும்!
சோலை யுற்ற எழிலாகும்
          தூய தொண்டின் பெருநலமே!

ஆண வத்தை அகற்றிடுக
       ஆற்றல் தன்னை வளர்த்திடுக!
ஆணும் பெண்ணும் சமமென்றே
       அன்பாய் இணைந்து செயல்படுக!
தூணாய் நின்றே உயர்ந்திடுக
        துன்பம் துரத்தி வென்றிடுக!
கேணி நீரின் ஊற்றாகக்
        கேளிர்க் கெல்லாம் உதவிடுக!

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.

வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை.
 
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் - அ. சசிகலா.

48 comments:

 1. வணக்கம் சகோ! இளைஞர்களுக்கு மிக தேவையான கவிதைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி!! ஆ

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ! தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 2. ஆஹா அருமையாக இருக்குமா,
  தூணாய் நின்றே உயர்ந்திடுக
  துன்பம் துரத்தி வென்றிடுக!
  அழகாக சொன்னீர்,,,,,,,,,,, வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க தோழி.

   Delete
 3. அருமை! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 4. நல்லதொரு கவிதை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. மிகச் சிறப்பான கவிதை
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 6. ஸூப்பர் சகோ மாற்றமே இல்லை பரிசு உங்களுக்குத்தான் நான்தான் தேவையில்லாமல் கவிதைனு சொல்லி விட்டுப்புட்டேன் பரிசு எனக்கு இல்லை எனக்கு இல்லை அய்யோ சொக்கா....

  ReplyDelete
  Replies
  1. பெண்கள் முன்னேற்றம் குறித்த தங்கள் கவிதையும் சிறப்பாக இருந்தது சகோ. நன்றிங்க சகோ.

   Delete
 7. கவிதை அருமையாக வந்துள்ளது வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 8. சிறப்பான கவிதை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 9. வணக்கம்
  சகோதரி
  கவிதை அற்புதம் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் த.ம7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 10. கேணி நீரின் ஊற்றாகக்
  கேளிர்க் கெல்லாம் உதவிடுக!//

  அழகாய் சொன்னீர்கள் கவிதையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 11. ஆஹா அருமை கடுமையான போட்டிகள் தான்..வாழ்த்துகள்மா..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 12. சுற்றுச் சூழல் காத்திடுக
  சோலைப் பூவாய்ச் சிரித்திடுக!
  சுற்றம் சூழ வாழ்ந்திடுக
  சுடரும் தமிழைப் போற்றிடுக! மிகவும் ரசித்த வரிகள் இவை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சசிகலா! தொடர்ந்து அசத்துங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 13. நல்ல கவிதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 14. ஆகா அருமை
  இப்படி எழுத ஆட்கள் நிறைய வேண்டும் என்கிற ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது

  ReplyDelete
  Replies
  1. வருக வணக்கம்! தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டிப்பாக இன்னும் பலரை உற்சாகப்படுத்தும். (தாங்களும் ஆசிரியர் தானே?)
   நன்றிங்க.

   Delete
 15. ஆகா!.. அருமை தோழி!

  பொருட்சுவை உள்ளத்தை நிறைக்கின்றது!
  நிச்சயம் உங்கள் படைப்பு வெற்றியை ஈட்டித்தரும்! சந்தேகமே இல்லை!
  உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  நலக்குன்றல் வேகத்தடை! வலைக்கு வரத்தாமதம் செய்துவிட்டேன்!
  பொறுத்துக் கொள்ளுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி! தங்கள் வருகையே எனக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருக்க பொறுத்துக்கொள் என்று தாங்கள் சொல்வதும ;ஏனோ?
   நன்றிங்க தோழி.

   Delete
 16. வெற்றி இலக்கை எதிர்நோக்கி வேங்கை போல பாய்ந்துள்ள.. அறுசீர் விருத்தக் கவிதை வெற்றிக் கனியினைக் கொய்ய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பாவலரின் வாழ்த்தே எனக்கு மிகப்பெரியப் பரிசாயிற்றே. நன்றிங்க ஐயா.

   Delete
 17. வெற்றி பெற வாழ்த்துகள்! சகோ சசி!!!

  உங்கள் த்ளத்தில் ஒரு மெயில் சன்ஸ்க்ரிப்ஷன் கொடுக்கறீங்களா சகோ. எங்கள் மெயில் பெட்டிக்கு வந்து விடும். பலசமயங்களில் பலரது இடுகைகளும் தவறிவிடுகின்றன அதனால் தான்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகாஸ் வாழ்த்திற்கு நன்றியும்.இந்த மெயில் சப்ஸ்கிரிப்ஷன் தான் எப்படியெனத்தெரியவில்லை.

   Delete
 18. மிக அழகான கருத்தும் கவிச்சந்தமும் அமைந்து ரசிக்கவைத்த கவிதைக்குப் பாராட்டுகள். வெற்றி பெற இனிய வாழ்த்துகள் சசி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா! தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 19. வணக்கம் !
  அருமையான படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி ! காலில் அறுவைச் சிகிச்சை செய்து இரண்டே வாரங்கள் தான் ஆகின்றது இரண்டு கால்களிலும் இருந்து
  தகடுகளை ஒன்றாக நீக்கிய காரணத்தால் எழுந்து இருந்து செயால்ற முடியாது ஆதலால் என்னுடைய வரவும் பிந்தி விட்டது பொருத்தருள வேண்டும் தோழி நன்றி .

  ReplyDelete
  Replies
  1. வாங்க! அடடா அப்படியா உடல் நலனை முதலில் கவனியுங்கப்பா. எப்போது வேண்டுமானாலும் வருகை தரலாம் இதில் என்ன இருக்கிறது. மிக்க நன்றிங்க தோழி.

   Delete
 20. இனிய கவிதை சகோதரி. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் மா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 21. அருமை இனிமையான சந்தம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

   Delete
 22. சசி ரொம்ப பிசியா?
  பதிவுகள் காணோமே!

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் இல்லைங்க ஐயா. எழுதனும்.

   Delete
 23. நெஞ்சைக் கவரும் பாட்டிற்கு
  நிழலும் கூட வாய்பிளக்கும்!
  விஞ்சும் தமிழில்வாழ்மரபில்
  விளக்காய் நிற்கும் விருத்தங்கள்!
  எஞ்சும் பொருளில் இருக்கின்ற
  எழிலார் அழகை யார்மறப்பார்!
  கொஞ்சம் எனக்கும் கடன்கொடுப்பீர்!
  கோடி நன்றி நானுரைப்பேன்!

  வாழ்த்துகள் பாவலரே!

  முன்பே பார்த்திருந்தால் நான் போட்டியில் கலந்து கொள்ளாமலே இருந்திருப்பேன். :(

  அருமை.

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசிரியரே! இப்படிச் சொன்னா எப்படி தாங்கள் ஆசிரியர் தங்களோடு நான் போட்டியிட முடியுமா?
   தங்கள் வாழ்த்து ஒன்று போதுமே எனக்கு.

   Delete
 24. வாழ்த்துக்கள்!,
  மரியாதைக்குரிய அம்மையீர்,வணக்கம்.தங்களது கவிதை ''தென்றலின் கனவு'' என்ற பெயரில் புத்தகமாக சென்னை வலைப்பதிவர் திருவிழா நிகழ்ச்சியில் திருமிகு.பட்டுக்கோட்டை பிரபாகரன் ஐயா அவர்களால் வெளியிடப்பட்டு அதன் ஒரு பிரதியை எனக்கும் வழங்கியமை நினைவு கூர்ந்து அகமகிழ்வு கொள்கிறேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்தும் அன்பன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம் 638402

  ReplyDelete
  Replies
  1. தென்றலின் கனவை நினைவுபடுத்தி மகிழ்ந்ததோடு இங்கு வருகை தந்து மறுபடி என்னை வாழ்த்தியதற்கும் எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி