Ads 468x60px

Wednesday, September 2, 2015

பொற்செய்தி என்பேன் புகழ்ந்து!



அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.
27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.

கம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளைக் படைத்து, செந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில் பாவலர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம் .
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர் கம்பன் கழகம் பிரான்சு.
                                ---------------------------------

பாவலர் பட்டமதைப் பாங்குடனே என்ஆசான்
காவியக் கம்பன் விழாவினில் - நாவினிக்க
நற்றமிழில் நல்கிடும் நற்பேரும் பெற்றேனே
பொற்செய்தி என்பேன் புகழ்ந்து!


பள்ளியில் பயிலும் பிள்ளையாய் நானும்
      பைந்தமிழ் மொழியினைக் கற்க!
துள்ளியே நாளும் தொடர்ந்திடச் செய்யச்
     சூட்சமம் கவியினில் வைத்தாய்!
அள்ளியே பருக அமுதெனப் பாக்கள்
       அருளிடும் அருங்கவிக் கடலே! 
உள்ளமே தங்கி உவகையில் பூத்தே
       உங்களைத் தொழுதிடும் நெஞ்சே!

அவைதனைக் கூட்டி அழகுடன் யாப்பை
        அன்புடன் பயிற்றிடும் ஆசான்!
கவிமணம் வீசிக் கலந்திட நாளும்
      கனிதமிழ்ப் பாடிடும் விந்தை!
செவிதனில் கேட்கும் செந்தமிழ் மொழியே
        தேனுடன் ஊறிடும் மொந்தை!
புவிதனில் புலவன் பாரதி தாசன்
        போலவே யாரினும் உண்டோ?

இன்று மின்னஞ்சல் மூலம் வந்த "பாவலர் பட்டம்" அழைப்பிதழைக் கண்டதும் மிகவும் மகிழ்வில் ஆழ்ந்தேன். அந்த மகிழ்வினை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆசானுக்கு   என் மகிழ்வான வணக்கத்தையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய இந்த மகிழ்வினை என் வளர்ச்சியில் பங்குடைய உங்களுடன் பகிர்ந்து கொள்வதை எண்ணி மகிழ்கிறேன். தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.

   நேற்றுவரைப் பிறை நிலவு,
   இன்று வளர் பிறையாய்!
   பௌர்ணமியாய் வளர்கவென,
   வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
   பாதம் தொழுது வளர்கின்றேன்,
   பயணத்தைத் தொடர்கின்றேன்!

54 comments:

  1. அன்புத்தோழி!
    என்ன விந்தையிது!.. நானும் இதே விடயத்தைப் பதிவிட்டு
    இப்போதான் வருகிறேன்! நீங்களும் அதே விடயம் இட்டுள்ளீர்கள்!

    மிக்க மிக்க மகிழ்ச்சியா இருக்கின்றது தோழி!
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க மகிழ்ச்சியாக என்று திருத்தமுடன்...
      நன்றி!

      Delete
    2. வாங்க தோழி! முதலாவதாக வந்து முத்தான வாழ்த்தை தந்தீர்கள் தங்களுக்கும் எனது மனம்நிறைந்த வாழ்த்துகள் தோழி.

      Delete
  2. நல் வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  3. வாழ்த்துகள் சசிகலா.தொடரட்டும் தமிழ்ப் பயணம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  4. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நன்றியும்.

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete

  6. வணக்கம்!

    பொற்செய்தி என்பேன் புகழ்ந்தெனும் வெண்பாவைக்
    கற்றோதி நானும் களிப்புற்றேன்! - நற்சோதி
    நல்கும் நறுந்தமிழை நாளும் நவில்கின்றீர்!
    பல்கும் நலங்கள் படர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. பாட்டரசரே வந்து பாட்டினை ரசித்து வெண்பா வாழ்த்திடும் போது வேறென்ன வேண்டும் எனக்கு...
      வணங்கித்தொடர்கிறேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  7. வணக்கம் கவிஞரே மிக்க மகிழ்ச்சி மென்மேலும் இதுபோன்ற பல உயர்நிலை அடைய எமது உள்ளப்பூர்வமான வாழ்த்துகள்.

    தமிழ் ம.... அய்யய்யோ போன மாசமே கரண்டு பில்லு கூடிப்போச்சு

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. வாழ்த்திற்கு எனது நன்றி!
      ஆமா ஆமா மின்சார சிக்கனம் தேவையே...ஹஹ

      Delete
  8. Replies
    1. தங்கள் ஆசியுடன் தொடர்கிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  9. அட! சகோதரி! தங்களுக்கும் விருது கிட்டியுள்ளது கண்டு மிகவும் மகிழ்கின்றோம்!

    மனமார்ந்த வாழ்த்துகள்! அது சரி நீங்கள் இப்படி எல்லாம் கவி எழுதி எழுதி எங்கள் காதில் புகை வரச் செய்கின்றீர்கள். நாங்கள் எல்லாம் எங்கு செல்ல எங்கள் தமிழைக் கொண்டு...ஹஹஹ

    ஹும்...எங்களுக்கும் ஆசைதான் ஆனால் எழுத வர மாட்டெங்குதே.....ஹஹாஹ்ஹ ரசிக்கத் தெரியும் ஆனால் விமர்சிக்கத் தெரியாது கவிதைகளை....!!
    தொடர்கின்றோம்....ரசிகர்களாய்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க! தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.நண்பர்கள் வலையில் தங்கள் பின்னூட்டம் கண்டே வியப்பவள் நான் தங்களுக்கு கைவராததும் உண்டோ?
      மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

      Delete
  10. அடடா கவிஞர் தென்றல் ஆஹா ஆஹா......... வாழ்த்துக்கள் மா .....இனிய செய்திகள் தொடர்ந்து காலையில் மிக்க மகிழ்ச்சிம்மா தொடர்ந்து அசத்துங்கள்.. நானும் இயன்றவரை பின் பற்றுகிறேன் ஹா ஹா ....இசை மழையில் நனையத் தான். ... நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி இனிய நல்வாழ்த்தைக் கண்டு இதயம் நிறைந்த நன்றியை சொன்னேன்.

      Delete
  11. தமிழ் பயணத்துடன் பிரான்ஸ் பயணம் மேற்கொள்ள வாழ்த்துகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. இங்கு இருக்கும் மதுரை பதிவர் சந்திப்புக்கே போக முடியவில்லை இதில் நான் எங்கே பிரான்சு போவது?
      தங்கள் வாழ்த்திற்கு நன்றிங்க.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  12. பாவலர் பட்டம் பெற்றமைக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க.

      Delete
  13. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க சகோ.

      Delete
  14. வணக்கம்
    சகோதரி.

    வாழ்த்துக்கள்... மேலும் சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க.

      Delete
  15. இனிய வாழ்த்துகள் சசி. மென்மேலும் தங்கள் பாத்திறம் பெருகி எங்களை மகிழ்விக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க தோழி.

      Delete
  16. வணக்கம் !
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழி !கவிஞர் .சசிகலா என்று அழைக்கும் போதெல்லாம் இன்பத் தேன் வந்து பாயட்டும் காதினிலே தங்களின் புகழ்
    இந்த உலகத்தை அழகட்டும் !வாழிய வாழிய பல்லாண்டு இப் பெயரோடும்
    புகழோடும்!மிக்க மகிச்சி தோழி .

    ReplyDelete
    Replies
    1. வாங்க! வாங்க! தோழி ஒன்றாக கைகோர்த்து பள்ளிக்குச் சென்ற தோழிகள் அல்லவா நாம் உங்களுக்கும் பாவலர் பட்டம் அழைப்பிதழ் வந்திருக்குமே தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் தோழி.
      தங்கள் அன்பின் வாழ்த்தை அகமகிழ்வோடு ஏற்கிறேன். நன்றிப்பா.

      Delete
  17. விருது பெறுவதறிந்து மகிழ்ச்சி. மென்மேலும் சாதனை புரிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  18. கவிதாயினி சசிகலா அவர்கள் மேலும் பல பட்டங்கள் பெற்று பலவகையான பா கவிதைகளை புனைந்து உயர உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்தினை மகிழ்வோடு ஏற்கிறேன். நன்றிங்க சகோ.

      Delete
  19. இப்போது தான் இளமதியின் பதிவு பார்த்துவிட்டு இங்கு வந்தேன் இங்கும் அதே செய்தி! மரபுக்கவிதையில் அசத்தும் நீங்கள் பாவலர் பட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவர் சசிகலா! இன்னும் பல பட்டங்கள் கிடைத்து சிகரம் தொட வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  20. வணக்கம் சகோ !

    இனிமையான தருணம் இது தாங்கள் பாவலர் பட்டம் பெறுவதை இட்டு மிகமகிழ்ந்து நிற்கின்றேன் மென்மேலும் பட்டங்கள் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இதை விட வேறென்ன இருக்கு நமக்கு மகிழ்வான செய்தி.
      நன்றிங்க.

      Delete
  21. வணக்கம் சகோ !

    இனிமையான தருணம் இது தாங்கள் பாவலர் பட்டம் பெறுவதை இட்டு மிகமகிழ்ந்து நிற்கின்றேன் மென்மேலும் பட்டங்கள் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் எனது மனம்நிறைந்த வாழ்த்துகள்.

      Delete
  22. பாவலர் சசி அக்காவிற்கு வாழ்த்துகள்:)

    ReplyDelete
    Replies
    1. அதற்குள் பாவலர் என்று அழைத்து விட்டீர்களா?ஹஹ
      மகிழ்ச்சிப்பா. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றியும் பா.

      Delete
  23. ஆஹா! மகிழ்ச்சி தோழி! மனம் நிறைந்த வாழ்த்துகள்! இன்னும் பல பட்டங்கள் உங்களை வந்து சேரட்டும் :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  24. வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  25. வணக்கம் பாவலரே,,,,, வாழ்த்துக்கள்.
    தாமதமாக வந்தெம்மை மன்னிக்க,,,,,,
    பட்டங்கள் பலஇன்னும் வந்துசேரட்டும்
    பாபல பாரில் இயற்றுங்கள் புகழ்பல
    பெற்று வாழ்க நாளும்
    வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  26. வாழ்த்துகள்மா...
    வலைப்பதிவர் விழாக்குழு உங்களை அன்புடன் வரவேற்கிறது.நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருக! தோழி! விழா ஏற்பாடுகள் நடைபெறும் இந்த அவசர நிலையிலும் என்னை நினைவு வைத்து வந்தமைக்கு நன்றிங்க தோழி.

      Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி