Ads 468x60px

Saturday, September 19, 2015

அன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு!


அக்கினித் தீயில் உழன்றும் ஆதவன் வழிமாறவில்லை!
அமாவாசை அணிந்தும் நிலவதுவும் நிலையாய் நின்றபடி!

ஆண்டவன் படைப்பென்று பறவை மிருகங்களும் மாறாதிருக்க!
ஆசைக் கனவேந்தி மாறும் மானுடம் அழிவை அணிந்து!

இன்றவர் சுமையேந்தி என்னாளும் கண்ணீர் கடல் மீனாய்!
இறப்பும் பிறப்பும் மட்டுமே உண்மை பிறயாவும் இப்புவிதனில்!

ஈகையாய் நாம் கொண்டு கொடுக்கும் கடன் விடையறியாமலே!
ஈரமிலா இதயமணிந்தோர் இசைபாட்டதுவும் துன்பமேந்தியே!

உள்ளத்தால் உயர்ந்தவரென்றே உறவுகளின் நம்பிக்கையாய்!
உணர்வதோ பாலைக்கானல் நீர்கண்ட மானாய்!

ஊடலும் கூடலும் பொய்யணிந்து பயணம் செய்தபடி!
ஊனமாயுறவும் பகையேந்திய மனமும் பண்பதை இழந்தே!

எண்ணமும் வாழ்வும் அலைந்தோடும் மேகமாய் சிதறிப்போக!
எங்கேபோய் தேடுவது நிம்மதியெனும் மெய் நீர் ஊற்றதனை?

ஏர்பூட்டிய மாடாய் ஏனிந்த சுமை வாழ்வோ யாவுமிருந்தும்?
ஏறாத மலையேறி ஆடாத ஆட்டமாடும் ஆசை அழிவணிந்து!

ஐந்தில் கற்றதை வாழ்விலணிந்து வாழ்ந்திருப்பின் துன்பமது!
ஐயமின்றி அழிந்திருக்கும் ஐம்பதிலும் தீமையணிந்தே நாம்நமை!

ஒருநாளும் அழியாத தீமைக்கு ஒப்புக் கொடுத்ததினால்!
ஒவ்வாத பாதையில் ஒழுகும் நீர்குடமாய்த் தத்தித் தடுமாறியே!

ஓரினம் காரணமென்றாயினது மனிதகுலமன்றி வேறில்லை!
ஓங்கிவளர்ந்த தீமையிடம் நன்மையது தோற்று நிற்பதற்கு!

ஔடதம் அன்பென்ற அறம்மறந்ததைப் புறம் தள்ளியதாலின்று!
அஃதே கதியென்றாகி தினம்தீமையின் புத்திரராய் ஜனனம்முதல்!
இஃதே வாழ்வெனில் பதரேநாம் மெய்யணியின் நன்மை நாடிவரும்!

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை.
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் - அ. சசிகலா.

35 comments:

 1. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையும் முத்தான வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 2. படமும், கவிதையும் அருமை.

  ReplyDelete
 3. அருமை சகோ அ, ஆ, இ, ஈ யில் கவிதை மிகவும் அருமை வெற்றி நிச்சயம் சகோ...

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்திற்கு நன்றிங்க சகோ.

   Delete
 4. ஒரு உயிர் எழுத்தில் ஈரடி கவிதையாக உயிரெழுத்துக்கள் அத்தனையும் கொண்டு வடித்த கவிதை அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

   Delete
 5. அகர வரிசையில் அழகான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 6. வணக்கம் சகோ!!! அழகான அகர வரிசை கவிதை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

  நேரமிருப்பின் "என் கவிதைக்கும் கருத்து தாருங்கள்! நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 7. உண்மைதான் அக்கா! உயிர்கள் அனைத்தும் இயல்பாய் இருக்க, மனித இனம் தான் அத்தனையையும் கலைத்துக்கொண்டிருக்கிறது!! அருமையாக சொன்னீங்க! ஒரு டாபிக் ரெண்டாவது கவிதையா!!!! சசி அக்கா கலக்குறேள் போங்கோ:) செல்ல அக்கா வெற்றிபெற வாழ்த்துகள்!!

  ReplyDelete
  Replies
  1. ஹாய் குட்டிம்மா! வாங்க! நன்றி டாம்மா.

   Delete
 8. அருமை
  அருமை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 9. //ஓரினம் காரணமென்றாயினது மனிதகுலமன்றி வேறில்லை!// இதே இதே தான்!!
  அகர வரிசையில் அசத்திட்டீங்களே சசி..அருமை!
  வெற்றிபெற வாழ்த்துகள் தோழி

  ReplyDelete
  Replies
  1. வாங்கப்பா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும்.

   Delete
 10. உயிர் எழுத்தில் உறுதிமிக்க கவிதை வாழ்த்துக்கள் போடியில் வெற்றி கிடைக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழா.

   Delete
 11. கலக்குறேள் போங்கோ....வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 12. தொடரட்டும் கவிதை மழை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

   Delete
 13. வித்தியாசமாய் ஓர் கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 14. ஏர்பூட்டிய மாடாய் ஏனிந்த சுமை வாழ்வோ யாவுமிருந்தும்?
  ஏறாத மலையேறி ஆடாத ஆட்டமாடும் ஆசை அழிவணிந்து! அகரவரிசையில் கவிதை பாடி அசத்திவிட்டீர்கள் சசிகலா! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க! வாங்க! தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிப்பா.

   Delete
 15. Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 16. அற்புதம் தோழி! அசத்தல் கவிதை!
  தினமொரு கவிதை பாடித் திக்குமுக்காட வைக்கின்றீர்கள்!

  வெற்றியீட்ட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பினால் வந்த வாழ்த்து எனக்கு சற்று மிகையாகவே இருக்கிறது.
   நன்றிங்க தோழி.

   Delete
 17. வெற்றி பெற வாழ்த்துகள்!!

  ReplyDelete
 18. அருமையான படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி !

  ReplyDelete
 19. அருமை அருமை தோழி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...! ஆமா என் பக்கம் காணலையே ம்..ம் ....

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி