Ads 468x60px

Friday, September 18, 2015

நடைபோடு! நல்லாரின் துணையோடு!
ஆடை குறையுது!
ஆணவம் பெருகுது
அம்மா சொல்வதைக் கேளு!
இல்லையே வருமே கேடு!

ஆளும் வளர்ந்திட்ட அறிவோ வளரல
அப்பாவின் ஏக்கத்தப் பாரு!
ஐயோ உனைத்தூற்றுமே ஊரு!

வணங்கிடத் தெரியல
வார்த்தையில் தெளிவில!
வளர்க்கணும் ஆற்றலை நீயும்!
வளத்தினை வழங்கிட நாளும்!

முன்னேறி நடைபோடு!
முன்னோரின் துணையோடு!
நல்லறிவை நாடிச் செல்வாய்!
வெல்லறிவைச் சூடிக்கொள்வாய்!

திருந்தி நீயும் வாழ்ந்திடத்தான்
தினம்தினம் படிப்பாய் திருக்குறளே!
அகமும் புறமும் தெளிவாகும்!
அதுவே வாழ்வை நெறியாக்கும்!

கொட்டும் மழையைக் கொஞ்சம் நேசி
கொடுக்கும் வள்ளல் பண்பை வாசி...
இயற்கையோடு இணைந்த வாழ்வே
இன்பம் தங்கும் சோலை!
இன்பத் தமிழை என்றும் காத்தால்
ஏற்பாய் புகழின் மாலை!இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை.
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் - அ. சசிகலா.  


படம் உதவிக்கு தோழி இளமதிக்கும் இணைத்திற்கும் நன்றி. 


47 comments:

 1. அருமை சகோ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி நிச்சயம்

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையும் முத்தான வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 2. அட புதுக் கவிதையில் புத்திமதி அருமை அருமை ! இப்படிச் சொன்ன தான் சமத்தா கேட்பாங்க இல்ல ..ஹா ஹா வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க! தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 3. நல்ல பொருளும் நடையும் சிறப்பான கவிதை!
  போட்டியில் வெற்றிபெற வேண்டி வாழ்த்துகிறேன் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி! தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 4. https://plus.google.com/u/0/107759285475612324039/posts/3vHEsSAxop4?gpinv=AMIXal8TgLTfu-1ia4wtuOSADUH76lXKqhvadCTGxelm7L72si2iTyGjViC2r7VkteWWsXVYGAmRGYXewGdYYOs5CwO5z5Tz7Fb1pIoGV9fXd32kgej7DWU&cfem=1

  வலைஉலகப்பாடகர் பாடியிருப்பதையும் கேளுங்க.
  சுப்புத்தாத்தாவிற்கு எனது மனமார்ந்த நன்றியும்.

  ReplyDelete
 5. நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துகள் சசி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா உங்க கட்டுரைக்காண இதோ வந்து கொண்டே இருக்கேன். நன்றிங்க தோழி.

   Delete
 6. வாழ்த்துக்கள்,,,வாழ்த்துக்கள்,,, அருமையாக இருக்ககுமா,

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க தோழி.

   Delete
 7. இந்த மாதிரி எல்லாம் என்னால் முடியாதுங்கோ
  அப்படின்னு தான்
  என்னைப்போல் இருப்பவங்களுக்கு
  ஒரு தனி போட்டி
  வச்சு இருக்கோம்ல்

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. சரியான போட்டி தான் ஐயா அதுவும். அங்கு பின்னூட்டம்இட இயலவில்லை.

   Delete
 8. நல்ல பதிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 9. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 10. அருமையான அறிவுரை வழிகாட்டி! கவிதை ரசித்தேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழா.

   Delete
 11. ஆஹா!! அருமையா பாடலாம் போலவே அக்கா! அதான் பார்த்ததும் நம்ம சுப்புத்தாத்தா பாடீட்டாரா!!!! வெற்றி பெற வாழ்த்துகள் அக்கா!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சுப்புத்தாத்தா அழகாக பாடி அசத்திவிட்டார் இனியென்ன வேண்டும் நன்றி குட்டிம்மா.

   Delete
 12. ஆஹா! அருமை தோழி! வெற்றிபெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் வாழ்த்துக்கள் பா.

   Delete
 13. பரிசைப் பெற்றுக் கொள்ள புதுகைக்கு தயார் ஆகுங்கள் !

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! கேட்கவே இனிமையா இருக்குங்க. மிக்க நன்றி.

   Delete
 14. அருமை அருமை
  வெற்றி பெறவாழ்த்துக்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 15. வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 16. ஆஹா போட்டிக்கடுமையா இருக்குதேம்மா...அருமையான அறிவுரைக்கவிதைக்கு வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள்மா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி. தங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழி

   Delete
 17. வணக்கம்
  சகோதரி
  பொருள் புரியும் படி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம+1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 18. அருமை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

   Delete
 19. நல்ல கருத்துள்ள கவிதை. வெற்றிபெற.வாழ்த்துக்குள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 20. இயற்கையோடு இணைந்த வாழ்வே
  இன்பம் தங்கும் சோலை!
  இன்பத் தமிழை என்றும் காத்தால்
  ஏற்பாய் புகழின் மாலை! அருமை சசிகலா! எளிய வார்த்தைகளில் கருத்துள்ள கவிதை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 21. எளிமையான வரிகள். ஏற்கத் தகுந்த கருத்துகள். வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

   Delete
 22. சொல்லிலும் நடையிலும் பாரதியின் எளிமை.
  சுவைகுன்றா தமைவதுவே கவிதையின் வலிமை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 23. மரியாதைக்குரிய அம்மையீர், வணக்கம். நடைபோடு நல்லாரின் துணையோடு என்ற தலைப்பில் அருமையான பதிவு இட்டுள்ளீர்.கடந்த 2012ஆகஸ்டு 26 ந் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் திருவிழாவின்போது திருமிகு.பட்டுக்கோட்டை பிரபாகரன் ஐயா அவர்களால் வெளியிடப்பட்ட தங்களது படைப்பான ''தென்றலின் கனவு'' கவிதைப்புத்தகம் இன்றும் என்னிடம் பொக்கிஷமாக உள்ளது. தாங்கள் பெற்றோருக்கு முதலிடமாக முதல் அட்டையிலும் தன் குடும்பத்திற்கு தகுந்த இடமாக அட்டையின் இறுதியிலும் நிழற்படங்களை பதிவிட்டு பெருமைப்படுத்தியிருக்கும் விதம் சமூகத்திற்கே வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.தற்போது நல்லாரின் துணையும் வேண்டும் என கவிதையிட்டு அருமையாக உணர்த்தியுள்ளீர்.வாழ்த்துக்கள்
  என அன்பன்,
  c.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம் 638402

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 24. கொட்டும் மழையைக் கொஞ்சம் நேசி
  கொடுக்கும் வள்ளல் பண்பை வாசி...
  இயற்கையோடு இணைந்த வாழ்வே
  இன்பம் தங்கும் சோலை!


  nice

  ReplyDelete
 25. அருமையான கவிதை வெற்றுபெற வாழ்த்துக்கள்-சரஸ்வதிராசேந்திரன்

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி