Ads 468x60px

Thursday, September 10, 2015

புதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க!

உறவுகள் அனைவருக்கும் எனது வணக்கம். நம்ம வீட்டில் ஒரு பிறந்த நாள் விழா அல்லது ஏதேனும் ஒரு விழா செய்வதாக இருந்தாலே எத்தனை இடையூறுகளை சந்திக்க நேரிடும் அப்படியிருக்க  நம் வலையுலகில் ஒரு நிகழ்வை சிறப்பாக செய்து முடிப்பதென்பது அத்தனை எளிதான செயல் அல்ல. விழா நடத்த ஏற்பாடுகள் அனைவரையும் ஒருங்கிணைப்பது இது போன்ற செயல்களுக்கு ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் நேரமும் நேர்த்தியும் காண போவோம் வாங்க! வாங்க!

சித்தன்ன வாசல் ஓவியம்
பார்க்கப் போறேன்...
சிறப்பான பதிவர்களையும்
சந்திக்கப் போறேன்..
ம் அவ்வளவு தானா?
என்ன அவசரம் இன்னும் இருக்கே
அருங்காட்சியகம் இருக்கு அங்கே
அகழிகள் பலகொண்ட
மலைக்கோட்டையும் உண்டங்கே...
மயில்கள் நிறைந்த
விராலி மலை உண்டு..
இசைபாடும் தூண்கள் உண்டு..

தனி மனிதரின் அறிவுப்புதையல்
ஞானாலயா நூலகம்.
முந்தி வரும் உறவை நோக்கி
முன்னேற்பாடுகள் நடக்குது பாரு!
அதென்ன விழா ஏற்பாடு?
 அதென்ன அப்படி கேட்டுட்டிங்க?
புதுப்புதுப் சிந்தனைகள்
புதுமைகளைப் படைக்கும் முயற்சி
விழாக்குழுவினர் முயற்சியே
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
1)    நிதி விளம்பரக் குழு
(2)    கவிதை-கண்காட்சிக் குழு
(3)    உணவுக் குழு
(4)    வலைப்பதிவர் கையேட்டுக் குழு
(5)    பங்கேற்போர் பட்டியல் தயாரிப்புக்குழு
(6)    விழா அன்று வருவோர் பதிவுக்குழு
(7)    நூல்-குறும்பட வெளியீட்டுக் குழு
(8)    மேடை நிர்வாகக் குழு
(9)    தங்குமிடம் வாகன உதவிக் குழு
(10)நேரலை ஒளிபரப்புக் குழு
(11)அழைப்பிதழ் தயாரித்து அனுப்பும் குழு
(12)நினைவுப்பரிசுக் குழு
(13)விருதுகள் கேடயம் தயாரிப்புக் குழு
(14)தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு
  குழுவே இத்தன இருந்தா ஒவ்வொரு குழுவிலும் எத்தனை! எத்தனை! பதிவர்களின் பங்கிருக்கும்
திருமிகு - 
1.     முத்துநிலவன் நா.
2.     கருப்பையா பொன்.
3.     கீதா மு.
4.     கஸ்தூரிரெங்கன் எஸ்.
5.     ஜெயலட்சுமி இரா.
6.     செல்வக்குமார் மீரா.
7.     பன்னீர்செல்வன் ராசி.
8.     வைகறை
9.     மைதிலி சோ.
10. பாண்டியன் அ.
11. செல்வா புதுகை
12. ஸ்ரீமலையப்பன்
13. சுந்தர் மகா.
14. மாலதி கா.
15. ரேவதி த.
16. நீலா  ஆர்.
17. ஸ்டாலின் சரவணன் வை.மா.
18. சுரேஷ்மான்யா
19. தூயன்
20. சிவாமேகலைவன்
21. செல்லத்துரை  மா.
22. இளங்கோ ச.
23. அண்டனூர் சுரா.
24. மீனாட்சி சுந்தரம் இ.
25. முனைவர் துரைக்குமரன் சு.
26. முனைவர் ரவி
27. முனைவர் மாதவன் சு.
28. கருணைச் செல்வி து.
29. திருப்பதி கு.ம.
30. குருநாதசுந்தரம் சி.
31. கருப்பையா எஸ்.ஏ.
32. மதியழகன்  சு.
33. ராமநாதன் ரமா.
34. ஈழபாரதி
35. சோலச்சி
36. பசீர்அலி எஸ்.டி.
37. முத்துப்பாண்டியன் ப.
38. அந்தோணி பி.
39. கார்த்தி ப.
40. நண்பாகார்த்தி
41. பாலாஜி
42. புனிதா
43. மல்லிகா மு.
44. சூர்யா சுரேஷ்
45. பாபு ராஜேந்திரன் சு.
46. வள்ளியப்பன் கோ.
47. பாலசுப்பிரமணிய பாரதி ச.
48. சுதந்திர ராஜன் ச.
49. புதுகைப் புதல்வன்
50. நாகநாதன் மா.
51. ஜலீல் முகமது மு.
   இவர்களின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகும் என்பதில் ஐயமில்லை. 

விழாக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும். என்ன இவர்கள் அனைவரையும் ஒன்றாகத் திரட்டி விழாக்குழுவினர் புகைப்படம் எடுக்கத்தான் ஒரு நாள் ஆகும் போல...

சரி சரி சீக்கிரம் கிளம்புங்க நாமும் இவர்களைச் சந்திக்கப் போவோம்.அதற்கு முன்பு வருகைப்பதிவேட்டில் பதிந்துவிட்டீர்களா...?

மேலும் தகவல்களுக்கு இந்த வலைப்பக்கம் பாருங்கள்.

44 comments:

 1. Replies
  1. அப்பப்பா விழாப்பணிக்கு நடுவிலும் தங்கள் முதல் வருகை இன்னும் ஆச்சரியம் தருகிறது தோழி. நன்றி நான் தான் சொல்ல வேண்டும்.

   Delete
 2. நன்றி சசி. நீங்களும் விழாக்குழு தான்!
  இன்றைய பதிவோடு வந்திருக்கும் விழா வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து சேர்க்க வேண்டுகிறேன். வருக வருக..

  ReplyDelete
  Replies
  1. சேர்த்து விட்டேன் அண்ணா.

   Delete
  2. நன்றிம்மா.
   விழாவுக்குத் தங்கள் இஷ்ட மித்திர பந்துக்களுடன் முன்னதாகவே வந்திருந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

   Delete
  3. அண்ணா நாங்கள் எல்லாம் அழைக்காமலே வருபவர்கள்..

   Delete
 3. புதுக்கோட்டை நமக்காகக் காத்திருககிறது. சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஐயா.

   Delete
 4. Replies
  1. பதிவுப் படிவத்தில் பதிவு செய்தவுடன் அனைவரையும் பதிவில் விரைவில் இணைத்து விடலாம்... நன்றி சகோதரி...

   Delete
  2. தங்களுக்கு நன்றியோ பாராட்டோ எல்லாம் சொல்ல சொற்கள் தேட வேண்டும் சகோ அன்பெனும் அகராதியில்..
   நன்றிங்க சகோ.

   Delete
 5. ஆஹா! கண்ணைக் கட்டுதே! இதோ கிளம்பிட்டே இருக்கேன்!

  ReplyDelete
  Replies
  1. ஹஹ ஆமாங்க. கலக்கப்போறாங்க.

   Delete
 6. அடேயப்பா இவ்வளவு குழுக்களா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க ஐயா! ஆச்சரியப்படும் படி நண்பர்கள் ஆர்வமுடன் விழாப்பணியைச் செய்கிறார்கள்.

   Delete
 7. அப்பப்பா!.. அசத்திட்டீங்க தோழி!

  வலைப்பதிவர் விழா ஆரவாரம்
  வானம்வரை அதிருது!.. மிக்க மகிழ்ச்சி!

  நானும் பங்குபற்ற எப்போ கிடைக்கும் தருணம்
  என்று மனம் ஏங்குகிறது...:(

  விழா வெற்றி விழாவாக அமைய
  அனைத்துத் தொண்டருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க தோழி. சும்மா பதிவர் உலகமே அதிருதில்ல...ஹஹ

   Delete
 8. Replies
  1. ஆமா சகோ போன சந்திப்பில் தான் உங்களைக் காண முடியவில்லை. புதுக்கோட்டை வாங்க சகோ.

   Delete
 9. //தங்குமிடம் வாகன உதவிக் குழு//

  இந்தக் குழு எங்கு இயங்குகிறது, அவர்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்று சொன்னால் என்னைப் போன்ற வெளியூர் ஆட்களுக்கு மிகவும் உதவியாயிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் அதைப் பற்றி தகவல் வரும் ஐயா... நன்றி...

   Delete
  2. தங்கையே! வணக்கம். உங்களின் தனியான விளக்கமான பதிவிற்கு நன்றி சொல்லப்போவதில்லைம்மா நீங்களும் நம் விழாக்குழு -பதிவர் குடும்ப உறுப்பினர்தானே? முன்னதாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

   Delete
  3. நன்றிங்க ஐயா.

   அண்ணாவிற்கும் எனது நன்றி.

   Delete
 10. சென்று வாருங்கள் சசிகலா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறேன் வாங்க ஐயா!

   Delete
 11. அடடா கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மனம் ஏங்குகிறது தங்கள் அனைவரையும் காண்பதற்காய். என்ன செய்வது. இருந்தாலும் நீங்கள் அனைவரும் கலந்து கொள்வதால் மேலும் சிறப்புறும். அதைப் பார்த்தும் கேட்டும் நான் நிச்சயம் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வேன். விழா சிறப்புடன் நடந்தேற என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. தங்களைக் காண நாங்களும் ஆவலுடன் இருக்கிறோம் இந்தியா வந்து போங்க தோழி.

   Delete
 12. வர முடியாத ஏக்கம் உண்டெனினும் நீங்கள் அனைவரும் இணைவதில் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியே... விழா சிறப்புற வாழ்த்துக்கள் தோழி! உங்களிடம் இரண்டு வலைப்பூக்கள் இருப்பது இப்போது தான் தெரியும் தோழி! மற்றைய தளத்தில் போய்ப் பார்த்து எதுவும் பதியவில்லையே என்று யோசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? தாங்கள் எங்கு இருக்கிங்க தோழி?
   முடிந்தால் கண்டிப்பாக வரவும்.
   ஆமாம் தோழி அது பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று ஆரம்பித்தது.
   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நனறிங்க தோழி.

   Delete
  2. நோர்வே நாட்டில் வசிக்கிறேன்மா!

   Delete
  3. அப்படியா மகிழ்ச்சிங்க தோழி. தங்களை எல்லாம் நாங்கள் எப்படிப் பார்ப்பது?

   Delete
 13. புதுக்கோட்டையில் சந்திப்போம் சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஆகட்டும் சகோ.

   Delete
 14. விழாவிற்கான ஆர்வம் தங்களின் பதிவைக் கண்டதும் மேலும் கூடியது. அருமையான பதிவு!
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களையும் விழாவில் சந்திக்கிறேன் சகோ.

   Delete
 15. அருமையான பதிவின் மூலம் விழாக்குழுவுக்கு உதவி செய்திருக்கிறீர்கள். தங்களை நேரில் சந்திக்க ஆவலாயிருக்கிறேன். புதுகையில் சந்திப்போம்! நன்றி சசிகலா!

  ReplyDelete
  Replies
  1. தங்களைச் சந்திக்கும் ஆவலுடன் இருக்கிறேன் நன்றிங்க தோழி.

   Delete
 16. சூப்பர் சகோதரி! தங்கள் தொகுப்பு......சந்திப்போம்!

  ஒரு இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் விட்கெட் ஒண்ணு ஆட் பண்ணுங்களேன்...நாங்கள் மின் அஞ்சலைப் பதிந்தால் உங்கள் பதிவு வெளியாகும் போது அது எங்கள் பெட்டியை வந்தடையுமே...வெளியாவதும் தெரியும்...இல்லை என்றால் நாங்கள் வரும் போது அது கீழே சென்று விடும் டேஷ்போர்டில், எங்கள் தளத்தில்.....அதனால்தான்...
  மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
  Replies
  1. இந்த சப்ஸ்கிரிப்ஷன் என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியவில்லையே என்ன செய்வது சகோ?

   Delete
  2. சசி அக்கா! lay out பகுதியில் add gadget என்ற பொத்தானை சொடுக்கினால் இந்த ஈமெயில் சப்ஸ்க்ரிப்சன் option கிடைக்கும்.

   Delete
  3. சப்ஸ்க்ரிப்சன் -ன்னு இருந்தது அதை வைத்தேன். இது என்ன இப்படி இருக்கே சரியா இது ?

   Delete
 17. அக்கா! மிக அருமையான அழைப்பு அக்கா!! மிக்க நன்றி!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி