Ads 468x60px

Saturday, August 29, 2015

நாவினிக்க பேசும் மச்சான்!

தூர தேசம் போன மச்சான்
நெனப்பு மட்டும்
எனக்கு மிச்சம்!
தூக்கமில்லா கண்ணிரண்டும்
துணைக்கு வந்தே உன்ன சுத்தும்!

நீ ஏத்தி கட்டுன லுங்கி
என் ஏக்கம் சொல்லிடும் மிஞ்சி!

ஆத்தங்கர மேடுமில்ல
அருகமர நீயுமில்ல..
அடுக்கடுக்கா சேதி முட்ட
அனுப்ப ஒரு தூதுமில்ல...

தொலைபேசி அழைப்புவர
தொண்டக்குழி கண்ணீர் முட்ட...
தொட்டெழுப்பும் மூச்சுக்காத்தும்
சொல்லிடுமா நெனப்பமுட்டும்....

நாவினிக்க பேசும் மச்சான்
நாளு கெழம வந்தாயென்ன
நாட்டமில்ல எதுலுமிங்கே
நாடிவரும் நாளச்சொல்லு
நான்கிழிப்பேன் தேதியிங்கே!

29 comments:

  1. வாழ்த்துக்கள் தோழி,,,,,
    தொண்டக்குழி கண்ணீர் முட்ட...
    அருமை,அருமைம்மா,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

      Delete
  2. அருமை சகோ கிராமத்து வாசனையின் ஏக்கத்தின் அசல் பிரதிபலிப்பு மிகவும் ரசித்தேன் நானும் இதே ரீதியில்தான் ''துபாய் துணைவன் துரைச்சாமி'' என்ற கவிதை எழுதினேன்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சுட்டி தாங்க சகோ படித்து ரசிக்க..
      சரி நானே தேடிக்கொள்கிறேன்.
      நன்றிங்க சகோ.

      Delete
  3. ஹையோ!..
    தூர தேசம் போன மச்சான் இப்படிப் பாடும்
    சிட்டைக் காண கட்டாயம் ஓடி வருவான்!

    மண்ணின் மணத்தில் மெய் மறந்தேன் தோழி!
    அழகு!...
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சந்தத்தில் கலக்கும் உங்களின் வாழ்த்தே எனக்கு சர்க்கரை தான்.. நன்றிங்க தோழி.

      Delete
  4. அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

      Delete
  5. தமிழில் எனக்குப் பிடித்த சொற்களில் ஒன்று மச்சான். நல்ல கவிதை. கண்ணிரன்டும் என்பது கண்ணிரண்டும் என்றிருக்கவேண்டுமே. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மாற்றிவிட்டேன் நன்றிங்க ஐயா.

      Delete
  6. தொலைபேசி அழைப்புவர
    தொண்டக்குழி கண்ணீர் முட்ட...
    தொட்டெழுப்பும் மூச்சுக்காத்தும்
    சொல்லிடுமா நெனப்பமுட்டும்....

    உணர்ர்வுகளின் உண்மை வெளிப்பாடு
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
  7. அட டடா தேனா, தென்றாலா இப்படி அசத்துது இந்தப் பொண்ணு இதிலேயுமா சும்மா சொல்லக் கூடாது அசத்தல் கவிதான் கவிதாகினி ......

    நாட்டுப் புறப் பெண்ணே
    நீ நாடுகிறாய் கண்ணை
    தேடிஉனை தானடைந்தால்

    மேலும் அசத்த வாழ்த்துக்கள் ...!
    தேனடையே கண்ணே

    ReplyDelete
    Replies
    1. இனிப்பாக இப்படி தங்களின் வாழ்த்து கிடைக்குமென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம் பா.

      Delete
  8. //நாட்டமில்ல எதுலுமிங்கே
    நாடிவரும் நாளச்சொல்லு//

    yekkathin unarvai sollum kavidhai asathal thozhi! kalakuriinga! :)
    en kaniniyil tamizh font strike pannudhu :(

    ta.ma.7

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சில நேரங்களில் இப்படி ஆகும் தோழி.
      நன்றி தோழி.

      Delete
  9. தற்கால நாட்டுப்புறக் கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. மண்ணின் மணத்துடன் நாட்டுப்புறப் பாடல் மிக அருமை.
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

      Delete
  11. இதோ! வந்துவிட்டேன்! அக்கா! கவிதை அழகு அசத்தல்! அட்டகாசம்! நன்றி!!
    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!

    ReplyDelete
  12. உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் !..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. நாட்டுப் புற மெட்டு! கவிதை நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete

  14. வணக்கம்!

    மச்சான் நெனப்பு மதுவூட்டும்! இன்பத்தின்
    அச்சாரம் போட்டே அடம்பிடிக்கும்! - உச்சிமுதல்
    கால்வரையில் பாயும் களிப்பூட்டும்! வாழ்வெல்லை
    நாள்வரையுள் பாயும் நலம்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி