Ads 468x60px

Friday, August 28, 2015

நினைவே இனிக்கும் கனவு!


நினைவே இனிக்கும் கனவு!
 (பதினைந்து மண்டிலம்)
1
நினைவே இனிக்கும் கனவு!  மனதில்
புனையும் கனிவு! பனிபோல் - தினமும்
இனிது! நனிசீர் அனைத்தும் இனிப்பு!
வனம்போல் கனிசேர் மனத்து!
2
இனிக்கும் கனவு!  மனதில் புனையும்
கனிவு! பனிபோல் தினமும்- இனிது!
நனிசீர் அனைத்தும் இனிப்பு! வனம்போல்
கனிசேர் மனத்துநினை வே! 
3
கனவு  மனதில் புனையும் கனிவு!
பனிபோல் தினமும் இனிது!- நனிசீர்
அனைத்தும் இனிப்பு! வனம்போல் கனிசேர்
மனத்துநினை வேஇனிக் கும்!
4
மனதில் புனையும் கனிவு! பனிபோல்
தினமும் இனிது! நனிசீர்- அனைத்தும்
இனிப்பு! வனம்போல் கனிசேர் மனத்து!
நினைவே இனிக்கும் கனவு!
5.
புனையும் கனிவு! பனிபோல் தினமும்
இனிது! நனிசீர் அனைத்தும்- இனிப்பு!
வனம்போல் கனிசேர் மனத்து நினைவே
இனிக்கும் கனவுமன தில்!
6.
கனிவு பனிபோல் தினமும் இனிது!
நனிசீர் அனைத்தும் இனிப்பு!- வனம்போல்
கனிசேர் மனத்து நினைவே இனிக்கும்
கனவுமன தில்புனை  யும்!
7.
பனிபோல் தினமும் இனிது! நனிசீர்
அனைத்தும் இனிப்பு! வனம்போல் -கனிசேர்
மனத்து நினைவே இனிக்கும் கனவு
மனதில் புனையும் கனிவு!
8.
தினமும் இனிது! நனிசீர் அனைத்தும்
இனிப்பு! வனம்போல் கனிசேர் -மனத்து
நினைவே இனிக்கும் கனவு மனதில்
புனையும் கனிவுபனி போல்!
9.
இனிது நனிசீர் அனைத்தும் இனிப்பு!
வனம்போல் கனிசேர் மனத்து நினைவே
இனிக்கும் கனவு மனதில் புனையும்
கனிவுபனி போல்தின மும்!
10.
நனிசீர் அனைத்தும் இனிப்பு! வனம்போல்
கனிசேர் மனத்து நினைவே - இனிக்கும்
கனவு மனதில் புனையும் கனிவு
பனிபோல் தினமும் இனிது!
11.
அனைத்தும் இனிப்பு! வனம்போல் கனிசேர்
மனத்து  நினைவே இனிக்கும் -கனவு
மனதில் புனையும் கனிவு பனிபோல்
தினமும் இனிதுநனி சீர்!
12.
இனிப்பு வனம்போல் கனிசேர் மனத்து
நினைவே இனிக்கும் கனவு - மனதில்
புனையும் கனிவு பனிபோல் தினமும்
இனிதுநனி சீர்அனைத் தும்!
13.
வனம்போல் கனிசேர் மனத்து நினைவே
இனிக்கும் கனவு மனதில் - புனையும்
கனிவு பனிபோல் தினமும் இனிது
நனிசீர் அனைத்தும் இனிப்பு!
14.
கனிசேர் மனத்து நினைவே இனிக்கும்!
கனவு மனதில் புனையும்!- கனிவு
பனிபோல் தினமும் இனிது! நனிசீர்
அனைத்தும் இனிப்புவனம் போல்!
15.
மனத்து நினைவே இனிக்கும்! கனவு
மனதில் புனையும் கனிவு! - பனிபோல்
தினமும் இனிது நனிசீர் அனைத்தும்
இனிப்புவனம் போல்கனி சேர்!
இலக்கணக் குறிப்பு

பதினைந்து மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினைந்து சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
இந்தப் பதினைந்து மண்டில வெண்பாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள  எங்கள் ஆசானின் பதிவில் காணலாம்!

19 comments:

  1. அருமையான சொல்லாடல் ரசித்தேன் சகோ

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ! தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.

      Delete
  2. தங்களின் ஆசானுக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆசானால் எங்களுக்கு பெருமை ஐயா.
      நன்றிங்க ஐயா.

      Delete
  3. மண்டிலப் பாடல் தமிழ்மயில் ஆடல்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

      Delete
  4. அப்பாடா ...........பதினைந்து மண்டிலமும் பார்த்ததில் என்னுடைய
    கண்ணே பட்டிடும் போல் உள்ளதே திருஷ்டி சுத்திப் போடுங்கள் என்
    அன்புத் தோழியே !அருமை ! அருமை !வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. ஹஹ வாங்க தோழி. தங்கள் அன்பு வாழ்த்தில் அகமகிழ்ந்தேன்.

      Delete
  5. அன்புத் தோழியே!

    வளமாகச் சீரடுக்கி மண்டிலமாய்ப் பாடி
    தெளிவாக யாத்தகவி தேனே! - உளமார
    வாழ்த்தினேன் தோழியே! மாண்பு பெருகிடச்
    சூழும் புகழுனைத் தொட்டு!

    அற்புதம் தோழி! மிகவும் ரசித்துப் படித்தேன்!
    திறமை கண்டு வியந்து நிற்கின்றேன்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அடடா! என்ன இது நானல்லவா தங்களைக் கண்டு வியந்து நிற்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் வெண்பா வாழ்த்திற்கும் நன்றிங்க தோழி.

      Delete
  6. அருமை
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  7. நல்ல சொல் புலமை இருந்தால்தான் இப்படி எழுத முடியும்! வாழ்த்துக்கள்! இது போல நிறைய எழுதி பழகுகிறீர்கள் போல! உங்களின் பழைய கிராமிய பாடல்களையும் அவ்வப்போது எழுதுங்கள்! எங்களைப்போன்றவர்கள் ரசிக்க உதவும்!

    ReplyDelete
    Replies
    1. ரசிப்பதற்கு தங்களைப்போன்றவர்கள் இருக்க எழுத கசக்குமா என்ன?
      நன்றிங்க.

      Delete
  8. அட அட அட ! என் அன்புத் தோழியே என்ன சொல்ல நான் ....... என்னம்மா இதையெல்லாம் பார்க்கும் அருகதை கூட எனக்கு இல்லைம்மா சொக்கி நிற்கிறேன் தங்கள் புலமை கண்டு. சுந்தரத் தமிழில் சும்மா சுழட்டி அடிக்கிறீர்கள். ரசித்தேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ! மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது தங்களுக்கு வெண்பா வசமாகும் போது இதெல்லாம் பெரிய விடயமேயில்லையே. எழுதுங்க தோழி சிறப்பாக எழுதுவிங்க.
      தங்கள் அன்பில் நான் தான் பேச்சிழந்து நிற்கிறேன்.
      நன்றிப்பா.

      Delete
  9. ஆஹா....
    அற்புதம்...
    ரசித்தேன்....

    ReplyDelete
  10. ஆசானின் புகழ் வளரட்டும்... வாழ்க...

    ReplyDelete
  11. அடேயப்பா... மலைப்புடன் வாழ்த்துகிறேன்.. வாழி நலம்சூழ!

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி