Ads 468x60px

Wednesday, August 26, 2015

அங்கம் துடிக்குதடி ஆருயிரே!


தங்கத்தை  தொட்டிலிட்டுத் தாலாட்டும் நான்பாட
அங்கம் துடிக்குதடி ஆருயிரே -இங்கோடும்
பந்தய ஓட்டத்தைப்  பார்த்தாயோ  நாமோடப்
பிந்திவிட்டால் நாடும்  பிணி!

கருவில் சுமந்தவுனைக் காலம் சுமக்கும்
வருகின்ற காலம் வளமே- தருவதற்கே
ஓடுகின்ற ஓட்டமடி ஒய்யாரி வானொலியில்
பாடுகின்ற தாலாட்டே பண்!

கங்காரு போலுன்னைக் காக்க வழியறியேன்
இங்குனக்குக் காவலுக்கே என்தாயும்-  அங்கம்
சுரந்திடும் பாலும் சுமையாகிப் போச்சே
உருளும் துயரில் உயிர்!

12 comments:

  1. இன்றைய சூழ்நிலையைப் படம் பிடித்து நிறுத்தி விட்டீர் தோழி உயிரோட்டம் மிக்க வெண்பாவில் !வாழ்த்துக்கள் தோழி நீ மென் மேலும் வளம் பெற வேண்டும் ..

    ReplyDelete
  2. அன்புத் தோழியே!

    தாலாட்டுப் பாட்டிலே தாயின் துயர்கண்டேன்!
    ஏலாமை சேர்த்த இடர்!

    மனம் கனத்துப் போனதம்மா உங்கள் வெண்பா கண்டு!
    இன்றைய தாய்மார்களின் கட்டாய வாழ்க்கைச் சூழலை
    அருமையாகப் படம்பிடித்துப் போட்ட வெண்பா!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  3. சூழலுக்கேற்ற கவிதையா, கவிதைக்கேற்ற சூழலா என யோசிக்குமளவு மிகப் பொருத்தம்.

    ReplyDelete
  4. அருமையான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அருமையான படத்திற்க்கேற்ற தாலாட்டு கவி வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  6. ஒரு எந்திர வாழ்க்கையாகி விட்டது இன்று.இதுவே பணிக்குச் செல்லும் பெண்களின் நிலை
    அருமை சசிகலா

    ReplyDelete
  7. வணக்கம்
    சகோதரி
    தாலாட்டு வெண்பா நன்று... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. உண்மையை படம் பிடித்து போட்டுள்ளீர்கள் இங்கு பாட்டில். தங்கள் வல்லமை கண்டு வியந்து கொண்டே இருக்கிறேன் நன்றி ! மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  9. இன்றைய யதார்த்தம்
    கவிதையில்
    அருமை சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  10. வேலைக்குப் போகும் பெண்கள் நிலை வேதனைக் குரியதே !

    ReplyDelete
  11. வேலைக்குப் போகும் பெண்கள் நிலை வேதனைக் குரியதே !

    ReplyDelete
  12. அன்புள்ள சகோதரி,

    ‘இங்குனக்குக் காவலுக்கே என்தாயும்- அங்கம்
    சுரந்திடும் பாலும் சுமையாகிப் போச்சே’

    கனத்த நெஞ்சின் விம்மல். தாயாகிப் போனவள் சேயை தன் தாயிடம் விட்டு விட்டு பாலும் சுரக்க பாழாகிப்போனதோ வாழ்க்கை!

    அருமை...!
    த.ம.9

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி