Ads 468x60px

Monday, August 24, 2015

பதினான்கு மண்டிலம்!


1.
தென்றலருள்  இன்றுமெனை இன்பமுறும்! அன்புமொழி
என்றனுளம் என்றுமிணை! மின்னுமெழில் - என்தமிழே
கன்னலென அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை?
என்றனுயிர்  வென்றது வே!

2.
இன்றுமெனை இன்பமுறும்!அன்புமொழி! என்றனுளம்
என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே! - கன்னலென
அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை? என்றனுயிர் 
வென்றதுவே! தென்ற லருள்!

3.
இன்பமுறும் அன்புமொழி என்றனுளம் என்றுமிணை!
மின்னுமெழில் என்தமிழே! கன்னலென - அன்னைமொழி!
என்னசுவை? என்னசுவை? என்றனுயிர்  வென்றதுவே!
தென்றலருள்! இன்று மெனை!

4.
அன்புமொழி என்றனுளம் என்றுமிணை! மின்னுமெழில்
என்தமிழே! கன்னலென அன்னைமொழி! - என்னசுவை?
என்னசுவை? என்றனுயிர்  வென்றதுவே!  தென்றலருள்!
இன்றுமெனை! இன்ப முறும்!

5.
என்றனுளம் என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே!
கன்னலென அன்னைமொழி! என்னசுவை? - என்னசுவை?
என்றனுயிர்  வென்றதுவே!  தென்றலருள்! இன்றுமெனை
இன்பமுறும்! அன்பு மொழி!

6.
என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே! கன்னலென
அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை? - என்றனுயிர் 
வென்றதுவே!  தென்றலருள் இன்றுமெனை இன்பமுறும்!
அன்புமொழி! என்ற னுளம்!

7.
மின்னுமெழில் என்தமிழே! கன்னலென அன்னைமொழி!
என்னசுவை? என்னசுவை? என்றனுயிர்  - வென்றதுவே! 
தென்றலருள் இன்றுமெனை இன்பமுறும்! அன்புமொழி!
என்றனுளம்! என்று மிணை!

8.
என்தமிழே! கன்னலென அன்னைமொழி! என்னசுவை?
என்னசுவை? என்றனுயிர்  வென்றதுவே!  - தென்றலருள்
இன்றுமெனை இன்பமுறும்! அன்புமொழி என்றனுளம்!
என்றுமிணை! மின்னு மெழில்!

9.
கன்னலென அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை?
என்றனுயிர்  வென்றதுவே!  தென்றலருள் - இன்றுமெனை
இன்பமுறும்! அன்புமொழி என்றனுளம்! என்றுமிணை!
மின்னுமெழில்! என்தமி ழே!

10.
அன்னைமொழி! என்னசுவை? என்னசுவை? என்றனுயிர் 
வென்றதுவே!  தென்றலருள் இன்றுமெனை - இன்பமுறும்!
அன்புமொழி என்றனுளம்! என்றுமிணை மின்னுமெழில்
என்தமிழே கன்ன லென!

11.
என்னசுவை? என்னசுவை? என்றனுயிர் வென்றதுவே! 
தென்றலருள் இன்றுமெனை இன்பமுறும்! - அன்புமொழி
என்றனுளம்! என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே!
கன்னலென அன்னை மொழி!

12
என்னசுவை? என்றனுயிர் வென்றதுவே!  தென்றலருள்
இன்றுமெனை இன்பமுறும்! அன்புமொழி - என்றனுளம்!
என்றுமிணை மின்னுமெழில் என்தமிழே! கன்னலென
அன்னைமொழி! என்ன சுவை?

13.
என்றனுயிர் வென்றதுவே!  தென்றலருள் இன்றுமெனை
இன்பமுறும்! அன்புமொழி என்றனுளம்! - என்றுமிணை
மின்னுமெழில் என்தமிழே! கன்னலென அன்னைமொழி!
என்னசுவை? என்ன சுவை?

14.
வென்றதுவே!  தென்றலருள் இன்றுமெனை! இன்பமுறும்
அன்புமொழி என்றனுளம்! என்றுமிணை மின்னுமெழில்
என்தமிழே! கன்னலென அன்னைமொழி என்னசுவை?
என்னசுவை?  என்ற னுயிர்!



இலக்கணக் குறிப்பு

பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
 

29 comments:

  1. தமிழ்ப் புயல் சசிகலா!

    ReplyDelete
    Replies
    1. இலக்கணப் புயல் என்று சொல்லுங்கள் ஐயா
      பொருத்தமாக இருக்கும்
      வாழ்த்துக்கள் சகோதரியாரே
      தம +1

      Delete
    2. வணக்கம் ஐயா!
      எங்கள் ஆசான் திரு.கி.பாரதிதாசன் ஊக்கமும் பயிற்சியுமே எங்களை எழுதவைக்கிறது வேறொன்றுமில்லை.
      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க ஐயா.

      Delete
    3. கரந்தை சகோ இலக்கணத்தில் நான் இன்னும் பள்ளி செல்லும் மழலையே.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சகோ.

      Delete
  2. தென்றல் (கவிதைப்) புயலாக மாறியது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!
      புயலென மாறவில்லை அதே தென்றல் சசியாகத்தானே இருக்கிறேன்.
      நன்றிங்க ஐயா.

      Delete
  3. பதினான்கு மண்டிலம் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. ஆஹா என்ன ஒரு தமிழ்ப்புலமை கவி ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா!.. தென்றல் பதினான்கு மண்டிலத்திலும்
      இதமாக வருடிச் சென்றுள்ளதே!

      என்றுமுள அன்னைமொழி உன்றனிடம் இன்பமுறும்!
      தென்றலிடம் அன்புமிக என்றறிக! - பொன்மலரே!
      மின்னலொளி! குன்றுநிகர்! உன்றனுளம்! நன்மைபல
      இன்பமுடன் பின்வரு மே!

      உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!

      த ம +

      Delete
    2. இன்முகமாய் என்றும் இளையநிலா என்னையும்
      அன்பில் அணைக்கும் அழகு.
      வாருங்கள் தோழி!
      தங்கள் வருகையும் வெண்பா வாழ்த்திலும்அகமகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  6. கவிதையில் பெரிதாக நாட்டம் இல்லாத என்னையும் இந்த பதினான்கு மண்டிலம் வெண்பா கவர்ந்து விட்டது.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! எழுதுங்க சகோ.
      நன்றிங்க சகோ.

      Delete
  7. தள்ளி நின்று ரசித்தேன் தமிழருவியை சகோ அருமை.தமிழ் மணம் ஐந்தருவி

    ReplyDelete
  8. மகளே சமத்து! அப்பாவின் வாழ்த்து!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!
      தங்கள் ஆசி வணங்குகிறேன் ஐயா.

      Delete

  9. வணக்கம்!

    சூட்டிய வெண்பா சுரக்கும் தமிழமுதை
    ஊட்டிய வெண்பா! உவக்கின்றேன்! - நாட்டிய
    நங்கைபோல் சொற்கள் நடைபயிலும்! நற்குளிர்
    நுங்கைப்போல் இன்பம் நுவன்று!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!
      மண்டிலம் எல்லாம் எங்கே எழுதப்போகிறோம் என்று நினைத்த எனக்கும் மண்டிலம் வசமானது தங்கள் ஆசியால் தான் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கும் தமிழ் மரபாய் மணம் வீச தங்கள் பணி தொடரட்டும்.
      அன்னை மொழியமுதம் அன்புடனே எங்களுக்கு
      உண்ணக் கொடுத்தீர் உவந்து

      Delete
  10. உங்க திறமையில் கொஞ்சம் எனக்குக் குடுங்களேன் தோழி :)
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கப்பா. இதென்ன பார்த்திங்களா என்னை கிண்டல் செய்றிங்க.
      உங்க திறமைக்கு முன் நானெல்லாம் எங்கே?

      Delete
  11. அன்புள்ள சகோதரி,

    தென்றல் தமிழே தெளிவாய்ப் பதினான்கு

    மண்டிலம் பாடியே மண்ணிலே - கண்ணாக

    கண்ணிகளை வைத்துக் கவிதைப் பறவைகளைப்

    எண்ணிப் பிடித்தாயே தாய்!


    தங்களுக்கு பாராட்டும் வாழ்த்தும்.

    நன்றி.
    த.ம. 9.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வணக்கம் வாங்க!
      தென்றலில் தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  12. அருமை !மனம் மகிழ்ந்து பாராட்டுகின்றேன் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  13. தென்றலாய் வீசுகிறாய் தென்றலே தேன்தமிழை
    மின்னலே இன்னும் எழுது !

    அப்படியே அசத்துகிறீர்களே தினம் தினம் வாய் பிளந்து நிற்கின்றேன் தோழி ! வாழ்த்துக்கள்மா...!

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் பயிற்சியே எல்லாம்.
      இதில் நீங்கள் வியக்க வேண்டியது ஐயாவைப்பார்த்து தான் தோழி.
      நன்றிங்க தோழி.

      Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி