Ads 468x60px

Thursday, August 20, 2015

இலக்கை நோக்கி!


இலக்கணமில்லா மொழியில்லை
இலக்கில்லா வாழ்வில்லை
இலக்கது அறிந்ததாய் நினைத்து
அறியாததாய் ஓர்  ஓட்டம்!

பெற்றவர் பிள்ளைக்கு
வைக்கும் இலக்கு
பொது விதியில்லை!
பிள்ளைகள் பெற்றோரின்
இலக்கை எட்டிப்பிடிப்பின்
அதுவே இலக்கணப் பிழையின்றி
வாழும் பெருவாழ்வு!

புள்ளிகள் கோலங்கள் ஆகவேண்டும்
பொது விதி -ஆனால்
புள்ளிகள் புள்ளிகளாகவே கரையும்
பலர் வாழ்வில் அதுவும் இலக்கின்றியே!

உயர்வென்பது வாழ்வில்
கனவின் இலக்கு!
கனவு நனவாவதோ அவரவர்
கையின் உழைப்பு!

உழைப்பை மட்டும் அணிந்தவர்
இலக்கை அடைந்தாரா?
முன்னும் பின்னும் முரண்பாடுகள்
இலக்கடையப் பணச்சீர்கேடுகள்
பணமிருந்தால் இலக்குண்டா!
அதுவும் கேள்வியாய்!

நிம்மதி மட்டும் இலக்கென்றால்
உண்ண உணவு, உடுக்க உடை
இருக்க நிழல் போதுமென்ற
மனம் வேண்டும்!

மற்ற இலக்கெல்லாம் தானாய்
இலக்கியமாய்த் தேடி வரும்!
அதுவே இலக்கணம்
வாழ்வில் வளர
இலக்கு மட்டும் போதுமா?

அன்பு வேண்டும்
அறிவு வேண்டும்
பண்பு வேண்டும்
உழைப்பு வேண்டும்
அப்துல் கலாம் சொன்னதைப்போல்
வெற்றிக் கனவு வேண்டும்!

28 comments:

  1. எதையாவது சாதிக்கவேண்டும் என்ற மனத் திண்மையும், முடியும் என்ற உணர்வும் இருந்தால் அதுவே வெற்றிக்கனவுக்கு வழிவகுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாகச் சொன்னீர்கள் நன்றிங்க ஐயா.

      Delete
  2. இலக்கினை நோக்கி இயக்கிடும் வாழ்வில்
    துலக்கமே! என்றும் தொடர்!

    வாழ்வில் இலக்கினைக் குறித்து இலக்குத்தவறாமல் தந்த
    அருமையான கவிதை தோழி!

    எல்லாவகையிலும் கலக்குகின்றீர்கள்!
    சொல்லிச் சென்றவிதமும் கவிவடிவமும்
    கருத்துச் சுவையும் அபாரம்!

    வாழ்த்துக்கள் தோழி!
    த ம +

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி! வாழ்த்தினாலேயே வசயப்படுத்த கற்றவர் நீங்கள் உங்களை விடவா நான் எழுதிவிடப்போகிறேன்.
      நன்றிங்க தோழி.

      Delete
  3. வேண்டும்,வேண்டும் இதுபோல் நிறையவேண்டும் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா நற்சிந்தை விதைக்கும் யாவும் இன்னும் நிறைய வேண்டும்.
      நன்றிங்க ஐயா.

      Delete
  4. வேண்டும்,வேண்டும் இதுபோல் நிறையவேண்டும் சசிகலா.

    ReplyDelete
  5. புள்ளிகள் கோலங்கள் ஆகவேண்டும்
    பொது விதி ஆனால்
    புள்ளிகள் புள்ளிகளாகவே கரையும்
    பலர் வாழ்வில் அதுவும் இலக்கின்றியே

    மீண்டும், மீண்டும் ரசித்தேன் சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. நன்றியும்.

      Delete
  6. இலக்கு மட்டும் போதுமா?லக்கும் வேண்டும் என்கிறார்கள் சரியாக முயற்சி செய்யாதவர்கள் :)

    உங்களுக்கு ஒருதகவல் >>>http://www.jokkaali.in/2015/08/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அப்படியும் இருக்கிறார்கள்.
      நன்றிங்க.

      Delete
  7. நிச்சயமாய் ஒரு வெற்றிக் கனவு வேண்டும்
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ அனைவருக்கும் ஒரு வெற்றிக்கனவு வேண்டுமே.
      நன்றிங்க சகோ.

      Delete
  8. சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  9. அருமையான சிந்தனை ! வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

      Delete
  10. நல்ல சிந்தனைக் கவிதை தோழி
    உழைப்பும் தனிமனித மற்றும் சமூக ஒழுங்கும் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர்கள் தனிமனித ஒழுங்கும் அவசியம்.
      நன்றிங்க தோழி.

      Delete
  11. //புள்ளிகள் கோலங்கள் ஆகவேண்டும்
    பொது விதி ஆனால்
    புள்ளிகள் புள்ளிகளாகவே கரையும்
    பலர் வாழ்வில் அதுவும் இலக்கின்றியே//

    அருமையான ரசனை மிகுந்த வரிகள். இலக்கு இல்லையென்றால் வாழ்க்கை தடுமாறும் என்பதை விளக்கிய கவிதை.
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete


  12. வணக்கம்!

    இலக்குக் கருத்துக்குள் இன்றேன் அமுதைக்
    கலக்கும் கவித்தென்றல் கண்டேன் - சலக்கென
    ஓடும் நதியழகாய்ப் பாடும் திறங்கண்டேன்!
    ஆடும் மயில்சீர் அணிந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வெண்பா வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  13. அன்பு வேண்டும்
    அறிவு வேண்டும்
    பண்பு வேண்டும்
    உழைப்பு வேண்டும்
    அப்துல் கலாம் சொன்னதைப்போல்
    வெற்றிக் கனவு வேண்டும்!

    -------------

    ஆம் வெற்றிக் கனவு வேண்டும்...
    அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  14. உயர்வென்பது வாழ்வில்
    கனவின் இலக்கு!
    கனவு நனவாவதோ அவரவர்
    கையின் உழைப்பு! இலக்கைப் பற்றிய அருமையான கவிதை. பாராட்டுக்கள் சசிகலா!

    ReplyDelete
  15. புள்ளிகள் கோலங்கள் ஆகவேண்டும்
    பொது விதி -ஆனால்
    புள்ளிகள் புள்ளிகளாகவே கரையும்
    பலர் வாழ்வில் அதுவும் இலக்கின்றியே!/// அருமை! இந்த வரிகள் மிகவும் கவர்ந்தன தோழி!

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி