Ads 468x60px

Tuesday, August 11, 2015

வண்ணம் கொண்டே வந்திடும் தூதே!


சின்னப் பூவாய்ச் சிரிக்கும் மொட்டாய்
மின்னல் கண்டே மிரண்ட பெண்ணும்
கன்னம் மிளிரக் கதைக்கக் கேட்டு
முன்னம் பார்த்த முகமோ என்றே
பின்னே மறைந்து பிரியம் கொண்டால்
 அன்றே அவனில் ஆழ்ந்த நினைவை
அழகாய்த் தொடுத்து அகத்தில் சூடிப்
பழகும் நிலவாய்ப் பவனி வந்தாள்
இனிய நிலவும் இதயம் நுழைந்து
கனவில் வருவேன் கவிதை கேட்பேன்
என்றே சொல்லி இமையைத் திறக்கும்.
உன்னை எழுப்பி உணர வைக்கும்
மலரின் மணமாய் மடலில் எழுத்தும்
மலர்ந்தே என்றன் மனதை இழுக்கும்
 காலைத் தென்றல் களிப்புடன் வருமோ?
சோலைப் பூவைச் சூடித் தருமோ?
ஆலைக் கரும்பாய் ஆனதென் உளமும்
ஓலை கண்டால் உயிர்க்கும் அதுவும்

கண்ணில் தெரியும் காதல் உருவாய்ப்
பெண்மை தன்னில் பிரியம் வளர்த்தாய்
எண்ணம் சுமந்தே என்னை நோக்கி
வண்ணம் கொண்டே வந்திடும் தூதே!


17 comments:

  1. எண்ணம் சுமந்து என்னை நோக்கி
    வண்ணம் கொண்டே வந்திடும் தூதே

    ஸூப்பர் வரிகள் முடிவில்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. உங்களின் வழக்கமான பாணியில் நீண்டநாளுக்கு பின் எழுதிய கவிதை! ரசித்தேன்! அருமை! தொடருங்கள்!

    ReplyDelete
  3. எண்ணம் சுமந்த எழிற்புறா தூதாக
    வண்ணமாயோ கண்டாய் மடல்!

    என்ன அழகு! என்ன சுவை!.. அற்புதம் தோழி!
    புறாவிடும் தூதால் அசத்திவிட்டீர்கள்!..:)

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. புத்தம் புது ஓலை வரும்..பாடல் நினைவு வந்தது.
    எப்பொழுதும் போல் உங்கள் பா அழகு தோழி

    ReplyDelete
  5. அழகான தூது அருமையான கவிதையாய். நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம்,
    நானும் உம் கவியில் மயங்கி நின்றேன்
    பதில் எழுத தெரியாமல்
    தூது சென்ற புறா சேர்ந்ததா
    பதில் வந்ததா அறியேனே தோழி
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அழகான வரிகள் சகோதரி... வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. விந்தை புரியும் வியன்மிகு செந்தமிழில்
    சந்தம் சிறக்கும் செழித்து !

    அருமை அருமை !அழகழகா அத்தனையும் அடுக்குகிறீர் அசந்து போகவே !நன்றி !புலமை பெறுக வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  9. அருமையான பா. ரசித்தேன்.

    ReplyDelete
  10. இடைவெளியின்றி நாளும் கவிதை தர வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. அழகு வரிகள் சகோதரியாரே
    நன்றி
    தம+1

    ReplyDelete
  12. அழகான கவிதை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வணக்கம்.

    வண்ணம்கொண் டேவந் திடுதூதே கண்வழியென்
    எண்ணங்கொண் டாயே இனிது

    அருமை கவிஞரே!

    நன்றி.

    ReplyDelete
  14. காலைத் தென்றல் களிப்புடன் வருமோ?
    சோலைப் பூவைச் சூடித் தருமோ?
    ஆலைக் கரும்பாய் ஆனதென் உளமும்
    ஓலை கண்டால் உயிர்க்கும் அதுவும் - அருமையான பாடல். மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள் சசிகலா!

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி