Ads 468x60px

Sunday, August 2, 2015

மும்மண்டில வெண்பா!

 
இன்முகம் பூக்கும்..பூ! வட்டநிலா வந்துவிடும்!
கண்டவுடன் கூத்தாடிக் கட்டவிழும் - கொண்டாடும்
சூத்திரங்கள் கற்றறிந்து  தொட்டழைக்கும் காரிகையைக்
காத்திருந்து பொற்புடன் கட்டு.

பூக்கும்..பூ வட்டநிலா வந்துவிடும்! கண்டவுடன்
கூத்தாடிக் கட்டவிழும் கொண்டாடும் -சூத்திரங்கள்
கற்றறிந்து  தொட்டழைக்கும் காரிகையைக் காத்திருந்து
பொற்புடன் கட்டின் முகம்!

வட்டநிலா வந்துவிடும்! கண்டவுடன்கூத்தாடிக்
கட்டவிழும்! கொண்டாடும்! சூத்திரங்கள் - கற்றறிந்து 
தொட்டழைக்கும் காரிகையைக் காத்திருந்து பொற்புடன்
கட்டின் முகம்!பூக்கும் பூ!
 
இலக்கண விளக்கம்
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!
 

26 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. முத்தாகத் தந்தனை மும்மண் டிலவெண்பா!
      சொத்தான தேன்தமிழ் தோய்த்து!

      என்ன திறமை! எங்கோ போய்விட்டீர்கள் தோழி!
      வாழ்த்துக்கள்!
      தொடருங்கள்!..

      Delete
    2. வணக்கம் தோழி! வருக!
      தாங்களும் மும்மண்டிலம் எழுதி விட்டீர்கள் இதில் வியப்பென்ன?
      தாங்களாவது விரைவில் எழுதியிருப்பீர்கள் நான் எழுத நாட்கள் ஆனது முட்டி மோதி எழுதவேண்டியிருந்தது.

      Delete
  2. இதுவும் ரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு என்றால் தனி மகிழ்ச்சி தான் ஐயா.
      நன்றிங்க ஐயா.

      Delete
  3. மும்மண்டில வெண்பாவுக்கு பொருள் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மும்மண்டில இலக்கணம் தெரியவே எனக்கு நாள் ஆனதுங்க ஐயா.
      நன்றிங்க ஐயா.

      Delete
  4. அறிந்தேன்... ரசித்தேன்... வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  5. மும்மண்டில வெண்பா அறிந்தேன் சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  6. மும்மண்டில வெண்பா பற்றி அறிந்து கொண்டேன்! அருமையாக எழுதியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றிங்க.

      Delete
  7. அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  8. வணக்கம் சகோ அருமையான கவிதை வாழ்த்துகள்
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! தமிழில் வாழ்த்து பார்த்து எத்தனை நாள் ஆனது தங்களிடமிருந்து. நன்றிங்க சகோ.

      Delete

  9. வணக்கம்!

    மும்மண் டிலம்தந்தீர்! இம்மென்னும் முன்!உனக்கு
    எம்மண் டிலமும் எளிது!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா! வலைச்சர பணிக்கு நடுவிலும் வந்து வாழ்த்தியது கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
      மும்மண்டிலம் குறித்து தங்களிடம் எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் தயங்காது நேரம் ஒதுக்கி விளக்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.
      தங்களிடம் நேரில் பயிலும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

      Delete
  10. வணக்கம் தோழி !

    தங்களின் முயற்சி பாராட்டிற்குரியது !வாழ்த்துக்கள் தோழி மென் மேலும்
    வெற்றி காணுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. தாங்களும் எழுதியிருப்பீர்கள் தங்களுக்கு கைவராது எதுவும் உண்டோ?
      மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியது மும்மண்டிலம். நன்றிங்க தோழி.

      Delete
  11. பித்துப் பிடிக்கவைக்கும் பல்வண்ணப் பாக்களிலே
    முத்துக் குளிக்கிறாய் நீ !

    அருமை அம்மா ! எங்கோ போய் விட்டீர்கள் தோழி!

    கட்டுக் கடங்காத காரிகையை கைக்குள்ளே
    இட்டுக் கவியனைத்தும் ஈடின்றி - சட்டென்று
    பாடுகிறாய் கொட்டுமழை போல்குளிர்ந்(து) தென் நெஞ்சமினி
    தேடுமுன் பாவை தொடர்ந்து !

    தொடர வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. சட்டென்று பாடவில்லை தோழி.
      மும்மண்டிலத்தோடு பலமுறை சண்டையிட்டு போராடி பிறகு அந்த பலமுறையும் ஐயாவினை தொடர்பு கொண்டு அவரின் தெளிவான விளக்கவுரைக்குப் பின்னரே முடிந்தது.
      அப்போது நான் பட்ட அவஸ்தைகள் இப்போது தங்கள் அனைவரின் வாழ்த்தினால் இனிமையாகத்தெரிகிறது.
      நன்றிங்க தோழி.

      Delete
  12. Replies
    1. வருக! வருக! நலம் தானே?
      அவ்வப்போது எங்களையும் மறக்காமல் இருங்கள்.
      நன்றிங்க.

      Delete
  13. கலக்குகிறீர்கள் தோழி! மிக அருமை!

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி