Ads 468x60px

Tuesday, July 7, 2015

தேடிடுதே நெஞ்சும் உன்னை!



சிட்டாட்டம் பறந்து வந்து
     சிக்கவைச்சான் கண்ணுக் குள்ள!
பொட்டெடுத்து வைக்கும் போதே
      பொதச்சிபுட்டான்  என்ன மெல்ல!
மெட்டெடுத்துப் பாடி வந்தே
     மெய்சிலிர்க்க வச்சான் மல்லி!
கட்டறுந்த காளை போலக்
       கதைத்திடுவான் நெஞ்சுக் குள்ளே.

பார்த்திருக்கும் போதே வந்து
       பதித்திடுவான் முத்தம் ஒன்னு!
கார்மேக ஓட்டம் கொண்டு
     கடந்திடுவான் என்னை இங்கு!
வார்த்தையில் வடம் பிடிச்சி
     மனவாசல் தேர் இழுத்தான்!
கூர்விழியால் தாக்கி என்னை
      கூப்பாடும் போட வச்சான்!

போனவழி பார்க்க விட்டுப்
      பூத்திருக்க  வச்சான் என்னை!
தேனெவே பேச்சி னிக்கத்
      தேடிடுதே நெஞ்சும் உன்னை!
கானகத்துக் காத்தா வந்து
   கலந்துபுட்டான் நெஞ்சுக் குள்ள!
ஊனுருகப்  பார்த்த பார்வை
    உயிர்உருகி ஓடும் மச்சான்!
படம் உதவி இணையம்

10 comments:

  1. வார்த்தைகளை ரசிக்குபடி அழகாக வடம் பிடிச்சிட்டீங்க சகோதரி...

    ReplyDelete
  2. பாவரிகள் அனைத்தும் அருமை தோழி,,,,,,

    ReplyDelete
  3. வார்த்தை கோர்ப்பை ரசித்தேன்

    ReplyDelete
  4. ரசிக்க வைத்த கவிதை அக்கா...

    ReplyDelete
  5. வணக்கம்
    சகோதரி

    வார்த்தைகள் விளையாடுகிறது... அருமை.....அருமை.. த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. சிட்டாட்டம் பறந்து வந்து
    சிக்கவைச்சான் கண்ணுக் குள்ள!

    அம்மாடி அவன் மட்டுமா சிக்க வச்சான் நீங்களும் தான் எங்களை இப்படி சிக்க வச்சிடீங்க. இப்படி அசத்துரீங்களேம்மா. ம்..ம்..ம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...! தொடர wow !

    ReplyDelete
  7. நெஞ்சுக்குள் கதைத்திடுவான் என்ற பயன்பாடு மிகவும் அருமை.

    ReplyDelete
  8. கலக்கிட்டீங்க சசிகலா இனிமை,அருமை ஒவ்வொரு வார்த்தையும்

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி