Ads 468x60px

Monday, July 27, 2015

சின்னவிழிப் பார்த்ததுமே சிறையெடுத்த தென்ன?

அல்லிமலர்க் கொடியசைந்து அருகில்வரக் கண்டு
     ஆசையுடன் மனந்தாவி அல்லலுறும் நின்று!
தள்ளிவிட எண்ணமின்றித் தவிக்குமிரு கைகள்
    தாவியதைப் பறித்திடவே துடித்திடுமே நெஞ்சும்!
கள்ளவிழிப் பார்வையினால் களவெடுக்கத் துள்ளும்!
    கண்டவுடன் காதலினால் ஊனுறக்கம் தள்ளும்!
அள்ளிமனக் கோவிலிலே ஆவல்மிகக் கொஞ்சும்
 
    இல்லையெனச் சொல்லுமந்த இடைகாணக் கெஞ்சும்!

சின்னவிழிப் பார்த்ததுமே சிறையெடுத்த தென்ன?

     சேதிசொல்ல மறந்துவிட்டுத் திசைநோக்கும் கண்ணே!
மின்னலென  தீப்பொறியாய்க் காதலீந்த பெண்ணும்
     மேகமென ஓட்டமிட வீழ்த்துதடி நோயும்

 என்றுமுனை ஏந்திடவே  ஏங்குதடி  உள்ளம்!
     எழிலரசி உன்முகமே மதுநிறைந்த கிண்ணம்!
என்னிலுனைத் தேக்கிடவே இனிக்குதடி பொழுதும்
    இந்நிலையை எழுதிடவே எங்குமிலை மொழியும்!

34 comments:

 1. மின்னலெனப் தீப்பொறியாய்க் காதலீந்தப் பெண்ணும்
  மேகமென ஓட்டமிட வீழ்த்துதடி நோயும் //


  அனைத்து வரிகளும் அருமை சகோ

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி! தங்களின் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 2. // என்னிலுனைக் தேக்கிடவே இனிக்குதடி பொழுதும்
  இந்நிலையை எழுதிடவே எங்குமிலை மொழியும்! //

  ஆகா...!

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ! வருகைக்கு எனது நன்றி.

   Delete
 3. அன்புத் தோழியே!

  அள்ளி அளித்தனை அற்புதப் பாவின்று!
  துள்ளிக் களிக்கிறேன் தோழிநான்! - வெள்ளமெனப்
  பாயட்டும் வித்தகம் பாரெங்கும்! வாழ்த்துகிறேன்!
  நேயம் உளத்தில் நிறைத்து!

  மிக மிக அருமை! ஓங்கட்டும் உங்கள் திறமை!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழியே அகமகிழ்ந்தேன். தங்களைப்போல சட்டென வெண்பா எழுதப் பழக வேண்டும் .
   நன்றிங்க தோழி.

   Delete
 4. மிக மிக அருமை! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி! நன்றி! நன்றி!

   Delete
 5. இந்நிலையை எழுதிடவே எங்குமிலை மொழியும்! //
  அருமை
  அருமை
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 6. எண்சீர் விருத்தத்தில் அமைந்த இனிய பாடல்.!

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்த ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றி.

   Delete
 7. ரசிக்க வைத்த கவிதை! அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றிங்க.

   Delete
 8. //எங்குமிலை மொழியும்!///
  ஃபிரெஞ்ச் மொழியில் முயற்சி செய்யலாமே ? உலக மொழிகளில் ஜொள்ளுக்கு அதுதான் நம்பர் 1 :)

  ReplyDelete
  Replies
  1. அப்படியா?
   தங்களுக்கு எல்லா மொழியும் தெரியுமோ?

   Delete
 9. பெண்ணழகில் மூழ்கிதமிழ் பண்ணழகைக் கொண்டு
  பித்தாக்கப் பாடுகிறாய் போய்வரவா என்னும்
  கண்ணழகு ஆயிரமாய் கவிதையுரு வாக்கக்
  கடலலைபோல் மனமரித்து காண்பவரைத் தாக்க
  உண்ணபெரு விருந்தெனவே உன்னழகுப் பாடல்
  உவக்கின்றேன் சிலிர்க்கின்றேன் என்னவொரு தேடல்
  எண்ணவலை பின்னுகின்ற எழுத்துமனம் ஆழ்த்தும்
  ஏற்றிடுக இங்குரைக்கும் என்தமிழின் வாழ்த்தும்!

  ஆஹா அருமை அருமை தோழி !கலக்குங்கள் கலக்குங்கள் !


  ReplyDelete
  Replies
  1. சொற்கொண்டு சூட்டிய வாழ்த்துப்பாமாலை கண்டு சொக்கித்தான் போகிறேன். அகமகிழ்ந்தேன் என்ன சொல்ல!
   நன்றிங்க தோழி.

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. வணக்கம்
  சகோதரி

  அடா..அடா.. என்ன வரிகள் அருவி கொட்டுவது போல உள்ளது வார்த்தைகள். த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. நல்ல ரசனையுள்ள கவிதை. தம+1

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

   Delete

 13. வெல்லப் பாகாய் ஒரு கவிதை.
  த.ம.11


  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் இனிக்கும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 14. Replies
  1. வணக்கம் ஐயா! தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete

 15. வணக்கம்!

  இல்லையெனச் சொல்லும் இடைகாண நெஞ்சேங்கும்!
  முல்லையெனத் தந்த மொழிமணக்கும்! - கொல்லையெனப்
  பூத்து மணக்கும் பொழிலாக உன்வலைப்பூ
  காத்து மணக்கும் கலை!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா! தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி