Ads 468x60px

Thursday, July 23, 2015

எது நலம்? எது சுயநலம்?


தன் சுயநலத்திற்காக
எதையும் அழிக்கத்
துணிந்தவர்கள் நாம்.
காடழித்து வீடமைப்போம்
கூட்டுக் குடித்தனமழித்து
தனிக்குடித்தனம் என்போம்!

தன் வீடு சுத்தமென்று
சாலையை அசுத்தப்படுத்தத்
தயங்க மாட்டோம்.

 வள்ளுவக் குறளென்போம்
வாய்மையே மூச்சென்போம்
எனினும்
எல்லோரும் செய்வதையே
நானும் செய்கிறேன்
எனச் சமாதானமாவோம்.

 அடுத்த வீட்டில்
திருட்டென்றால்
நமக்கென்ன...?

அடுத்த வீட்டில்
அடிதடி என்றால்
நமக்கென்ன...?

யாருக்குப் பசியென்றால்
நமக்கென்ன..?

இதோ இன்றைய
என் குடும்பம்
என் தேவை முடிந்தது
புறப்படும்..
நாளைய சேமிப்பிற்க்காய்க்
கடிவாளமிட்ட பயணங்கள்.

17 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    உண்மையான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பயணங்கள் முடிவதில்லை :)

    ReplyDelete
  3. சுயநலமிகள் அதிகரித்து விட்டார்கள்தான்! அருமை!

    ReplyDelete
  4. சுயநலமிகு மனிதர்களின்
    கூடாரம் ஆகிவிட்டது இவ்வுலகம்
    நன்று சொன்னீர் சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
  5. நாட்டு நடப்பை நன்றாகவே சொன்னீர்கள்.
    த.ம.4

    ReplyDelete
  6. சென்னையில் மிகவும் சகஜமாக இருக்கிறது....

    ReplyDelete
  7. மிக அருமையான சிந்தனை! உண்மை நூறுவீதம்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  8. இப்போது இந்த நிலமை தான்...
    தம 6

    ReplyDelete
  9. உள்ளது உள்ளபடி உணரும்படிச்
    சொல்லிச் சென்றவிதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இன்றைய தேவை...
    என் குடும்பம்...
    இதுதான் உண்மை...
    கவிதை அருமை அக்கா...

    ReplyDelete

  11. வணக்கம்!

    தன்னலப் போக்கில் தரணியைத் தாம்விழுங்கித்
    துன்னுளம் மேவித் துயரடைவார்! - என்னென்பேன்?
    ஆசைக் குளத்தில் அழுந்தும் அகத்தின்மேல்
    ஊசை அடிக்கும் உலுத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  12. தான்மட்டும் வாழத் தவித்திடும் ஆன்மாக்கள்
    தோன்றா திருந்தால் நலம் !

    அருமை அருமை தோழி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  13. யதார்த்தத்தை அழகாக வெளிப்படுத்தும் வரிகள். நன்றி.

    ReplyDelete
  14. நடைமுறை உண்மை இன்றைய நாட்டின் தன்மை!

    ReplyDelete
  15. வருத்தம் தரும் இன்றைய யதார்த்தம் ..
    நல்ல கவிதை தோழி

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி