Ads 468x60px

Wednesday, July 22, 2015

குறள் வெண்பா!


துள்ளிக் குதித்தோடு தூரம் இலக்கில்லை
அள்ளி அணிவாய் அறிவு.

ஒழுக்க நெறிகளை ஓதிப் பழகு
பழுக்கும் பழமாய்ப்  பயன்.


சோம்பல் துணையிருக்கச் சொர்க்கம் தெரிவதில்லை
சாம்பல் உரமாகும் சான்று!
     
அஞ்சி நடப்பதினால் ஆற்றல் பெருகாது
பிஞ்சில் பழுத்தல் பிணி!

எண்ணம் சிறந்திருக்க எல்லாமே கைகூடும்
கண்காணும் காட்சி கவின்.


துணிவைத் துணைகொண்டால் துன்பம் நெருங்கா!
பணிவில் உயர்ந்திடப் பார்.

பகிர்ந்துண்டு வாழப் பழகுதலே நன்று

அகமதில் தூய்மை அழகு.
கொண்டாட ஆளின்றிக் கோடி இருந்தாலும்
உண்டோ பயனும் உனக்கு?

பகையென்றே எண்ணாதே பாசத்தைக் காட்டு!
தகையுடன் நட்பைத்தா லாட்டு!.

கூடியே கெட்டவர் கோடியிலும் உண்டோசொல்

நாடியே நட்பை நவில்.

22 comments:

  1. ஆகா...! அனைத்தும் அருமை சகோதரி...

    இது போல் மேலும் தொடர்க... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. லேடி திருவள்ளுவர்...

    ReplyDelete
  3. வணக்கம் தோழி!

    குறள்வெண்பா பத்தும் கொடுத்தாய் அருமையே!
    நிறைகவி ஆனாய் நிறைத்து!

    அத்தனையும் முத்துக்கள்! மிக அருமை! வாழ்த்துக்கள்!

    த ம +

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தோழியே!

      மேலுள்ள குறளைத் திருத்திப் பதிவிட்டுள்ளேன்! நன்றி!

      குறள்வெண்பா பத்தும் கொடுத்தாய் அருமை!
      நிறைகவி ஆனாய் நிலைத்து!

      Delete
  4. வள்ளுவரும் அவ்வையும் கலந்த சசி!

    ReplyDelete
  5. வணக்கம்
    சகோதரி.

    அனைத்தும் சிறப்பாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.. த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. எண்ணம் சிறந்திருக்க எல்லாமே கைக்கூடும்
    கண்காணும் காட்சி கவின்.

    துணிவைத் துணைகொண்டால் துன்பம் நெருங்கா!
    பணிவில் உயர்ந்திடப் பார்.

    good

    ReplyDelete
  7. கலக்கல் ,குறள் tenபா :)

    ReplyDelete
  8. கலக்கல் ,குறள் tenபா :)

    ReplyDelete
  9. வணக்கம்!

    தென்றல் குறள்பத்தும் தேனாய் இனித்தன!
    என்றும் இவைபோல் எழுது!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  10. அருமையான குறள் வெண்பாக்கள்! அசத்துகின்றீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அருமையான குறட்பா. அழகான கருத்துக்கள். நன்றி.

    ReplyDelete
  12. அழகிய குறட்பா சகோ...தொடருங்கள்..வாழ்த்துக்கள்.

    10

    ReplyDelete
  13. குறள் வெண்பா.....

    பத்தும் முத்து!

    தொடருங்கள்.

    ReplyDelete
  14. ஆஹா! அனைத்தும் அருமை தோழி

    ReplyDelete
  15. பத்துக் குறளும் தொடுத்தாய் பசும்பொன்னாய்
    நித்தம் கவிதையில் பேசு !

    குறள் வெண்பா அத்தனையும் அழகும்மா நன்றி வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  16. Replies
    1. நூறா யிரங்கடந்த நும்பக்கப் பார்வைகள்
      பேறாங் குறள்கொண்ட பீடு!

      கைக்கூடும் என்பதைச் சரிபார்க்க வேண்டுகிறேன்.

      அனைததும் அருமை.

      ஒருலட்சம் பார்வையாளர்களைக் கடந்து வீசு தென்றலுக்கு என வாழ்த்துகள்.

      நன்றி.

      Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி