Ads 468x60px

Thursday, July 2, 2015

தென்றலைப் பழிக்கும் தலைவி!



நிலாவரும் நேரம் நினைவுகள் கூடி
      நெடுந்துயர் தந்தெனை வாட்டும்!
கலைந்திடும் உறக்கம் கனவினில் மிதந்து  
      கரைசேரத் துடித்திடும் அலையாய்!
உலாவரும் போதும் உளத்தினில் கேட்கும்  
       உருகிடும் மெல்லிசைப் பாடல்!
கலையெனத் தெரிந்தும் கடந்திட முடியாக்
     கவலையில் மூழ்கிடும் நெஞ்சம்!

தினமிது தொடரும் திகட்டிடா தெனினும்
     திசையினை இருவிழி தேடும்!
மனமதை ஏற்று மகிழ்ந்திடும் கூட்டில்
     வந்தடைந் திடும்பல ஏக்கம்!
சினத்தினை உடைய தலைவனின் மடலைத்
    தாங்கியே வந்திடாத் தென்றல்
குணத்தினை ஏனோ குறையெனக் கூறிக்
      கொதித்திடும் செய்கையும் தகுமோ?

16 comments:

  1. சினத்தினை உடைய தலைவனின் மடலைத்
    தாங்கியே வந்திடாத் தென்றல்
    குணத்தினை ஏனோ குறையெனக் கூறிக்
    கொதித்திடும் செய்கையும் தகுமோ? /// நியாயமான கோபம்தான்! கற்பனை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமை சகோதரி...

    தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்...
    கண்கள் உறங்கிடுமா...? காதல் கண்கள் உறங்கிடுமா...?
    காதல் கண்கள் உறங்கிடுமா...?

    ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்...
    கண்கள் உறங்கிடுமா...? காதல் கண்கள் உறங்கிடுமா...?
    காதல் கண்கள் உறங்கிடுமா...?

    ReplyDelete
  3. வணக்கம் சகோ !

    தலைப்பைப் பார்த்து அசந்துட்டேன் யாரடா தென்றல் சசிகலாவைப் பழித்த தோழி என்று இங்கு வந்து பார்த்தால் கவிதை அஹா !

    அருமை சகோ
    தொடர வாழ்த்துக்கள்
    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

    ReplyDelete

  4. வணக்கம் கவிஞரே!


    நினைவுகள் பேசும் நாடகம் இன்ப
    நெஞ்சினில் நிழற்பட ஆட்டம்.
    புனைவினில் உண்மை புதையுறும் வித்தாய்ப்
    புறப்படும் செந்தமிழ்ப் பாட்டும்,
    நனைவுறும் கண்கள்! நறுந்தமிழ் வந்து
    நானுளேன் என்றுயிர் ஊட்டும்!
    வனைந்தவன் செய்கை! வதையுமே இன்பம்
    விதியிதே யென்றுகை காட்டும்!

    அருமை.


    நன்றி

    ReplyDelete
  5. வணக்கம், தோழி,
    வாழ்த்துக்கள் அழகிய பாவிற்கு,
    நன்றி.

    ReplyDelete
  6. தினமிது தொடரும் திகட்டிடா தெனினும்
    திசையினை இருவிழி தேடும்!//


    அருமை

    ReplyDelete
  7. உதவாமல்,உபத்திரவம் செய்யும் தென்றலைப் பழித்தல் நியாயம்தானே

    ReplyDelete
  8. தென்றலைப் பழிக்கும் தலைவிக்கு நான் தரும் ஆறுதல் ...த ம 7:)

    ReplyDelete
  9. // சினத்தினை உடைய தலைவனின் மடலைத்
    தாங்கியே வந்திடாத் தென்றல்
    குணத்தினை ஏனோ குறையெனக் கூறிக்
    கொதித்திடும் செய்கையும் தகுமோ?// வாவ்

    ReplyDelete
  10. அழகான கவிதை, அருமையான ஓவியம். நன்றி. தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    ReplyDelete
  11. அட நான் சாக் ஆயிட்டேன்மா யாரது தென்றலைப் பழித்தது என்று ஹாஹா
    ஆஹா அழகோ அழகும்மா கவிதை சொற்கள் சும்மா மடை திறந்த வெள்ளம் போல் wow வனம் வசப்பட்டு விட்டது வாழ்த்துக்கள் ..! மிக்கநன்றி! அம்மாடி இம்முறையும் லேட் டா. ..அட தண்டனை ஏதும் உண்டா என்ன எஸ்கேப் ...

    ReplyDelete
    Replies
    1. இனியாவின் வரவிற்காக இங்கே காத்திருக்கிறேன் இதில் தண்டனை எதற்கு ...?
      நன்றிப்பா.

      Delete
  12. வணக்கம்

    அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி