Ads 468x60px

Monday, June 22, 2015

காதல் குயில்கள்!
குயில்பாட்டுக் கேட்டிடவே    குதித்தோடி வாவென்றான்
                 குழந்தை போலே
மயிலாடும் தோப்போரம் மனமொன்றிப் பேசிடவே
                வாவா என்றான்
முயலோடிப் பிடிப்போமா? முகிலாடப் பார்ப்போமா?
                என்றே சொல்லி
வயலோரம் கரம்பற்றி வரப்பினிலே நடக்கின்றான்
                மயங்கிப் போனேன்!.                 
                     
கீதங்கள் கேட்குமந்தக் கிணற்றோரப் படிக்கட்டில்
                        கீற்றாய்  என்னைப்
பாதங்கள் தாம்நோக்கப்  பாரென்னை என்றேதான்
                          பாட்டும் சொன்னான்!
நாதத்தில் தான்மயங்க  நானென்ன  செய்வேனோ
                      நாணம் மோதும்
ஓதுகின்ற வேதமென உயிர்வருடும் பாட்டாக
                        உலவும் காற்றே!.

தேனுருகும் அவன்பாட்டில் நானுருகி நின்றிடவே
                    தேவி என்றே
ஏனுருகிப் போகின்றாய் என்னவளே என்றழைக்க
                  எங்கே நானும்
ஊனுருக உயிருருக உளமிழந்து வசமானேன்
                   உன்றன் கண்ணில்
வானோடும் மேகமென வட்டமிடும் விழிகண்டே

                  வாழ்கின் றேனே.

57 comments:

 1. கற்பனையின் நதிபாய்ந்து கட்டறுத்துப் போகுமுங்கள் கவிதை ஓடம்!
  சொற்புதையல்! செந்தமிழாள் சிக்குகின்ற சிறுகண்ணி! எமக்குப் பாடம்!
  அற்புதத்தில் வழிவிரியும், அகம்விதிர்ந்து போகுதுங்கள் விருத்தம் என்றே
  உற்றுலவி உயிர்தரிக்கும் உள்ளங்கள் பலவுண்டு எனதும் ஒன்றே!

  அருமை கவிஞரே!

  ReplyDelete
  Replies
  1. வருக ஆசிரியரே முதல் வருகையும் விருத்தப்பாவும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஆசிரியரே.

   Delete
 2. அருமையான அழகான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 3. இனிய பாடல் தோழி, வசமிழந்து உன்பாட்டில் எனை மறந்தேன்.
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தேன்மதுரத்தமிழையே வசமிழக்கச் செய்தேனா ? ஹஹ நன்றிப்பா.

   Delete
 4. அற்புதம்
  கண்ணனின் கோகுலம் நினைவு வந்தது
  கற்பனை வளமும் சொற்திறனும்
  பிரமிப்பூட்டுகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு அகமகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 5. மயக்க வைக்கும் வரிகள் இனிமையோ இனிமை...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ. வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 6. இனிமையோ இனிமை
  அருமை
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ. வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 7. மனதை வருடும் படம். அதற்கேற்ற கவிதை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. இந்த முறை கவிதைக்காக படத்தை தேடினேன். நன்றிங்க ஐயா.

   Delete
 8. ஆஹா... சாண்டில்யனின் ராஜதிலகம் கதைக்கு லதா வரைந்த ஓவியத்துடன் அழகுத் தமிழில் சிறப்பான ஒரு கவிதை. சூப்பர் தென்றல்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க! வாங்க! ராஜதிலகம் மறுபடி படித்துக்கொண்டிருக்கிறேன். லதா வரைந்த ஓவியம் என்பது தாங்கள் சொல்லித்தான் தெரியும். ஒரு வழியாக வலைக்கு வந்தாகிவிட்டதா..? வரவேற்கிறோம்.

   Delete
 9. கவிதை அருமை சகோ வாழ்த்துகள்
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. நன்றியும்.

   Delete
 10. #முயலோடிப் பிடிப்போமா? முகிலாடப் பார்ப்போமா?#
  என்னை மிகவும் யோசிக்க வைத்தது இந்த வரிகள்தான் :)

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ?
   யோசனையின் முடிவு...?

   Delete
 11. ஊனுருக உயிருருக உளமிழந்து வசமானேன்
  உன்றன் கண்ணில்
  அனைத்து வரிகளும் அருமை தோழி,

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 12. அருமையான கவிதையும் படங்களும்..!
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 13. அருமையான கவிதை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete

 14. வணக்கம்!

  காதல் குயில்களின் கன்னல் கவிகண்டேன்!
  ஊதல் இசையமுதை உண்டுவந்தேன்! - வேதமெனச்
  சொன்ன அடிகளைச் சூடி மகிழ்கின்றேன்!
  இன்னும் தருவீர் இனித்து!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   தங்கள் வருகையும் இனிமையான வெண்பா வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 15. வணக்கம்
  படித்து அகம் மகிழ்ந்தேன்.. சகோதரி. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 16. த.ம11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 17. சாண்டில்யன் நாவலை
  கவிதையாக் படிக்கிறோமோ என்ற
  பிரமை ஏற்பட்டது.

  அன்று சாண்டில்யன்
  இன்று சசிகலா

  இருவருமே
  இலக்கியத்தில், தமிழ்
  இயல் இசை சரித்திரத்தில்
  மைல் கல்கள் .
  வாழ்த்துக்கள்.


  சந்தங்கள் ஆங்காங்கே
  வசந்தமாக ஒலிக்கின்றன.
  வந்தெனைப் பாடுங்களேன
  அந்தக் காதலர் ஜோடியோ
  அழைக்கிறதோ !!


  அழைத்தாலும் அழையாடினும்
  அமுதேனத் தெரிந்தபின் ஒருவனதை
  பருகாமல் இருக்க இயலுமா ?

  ஒரு ரஹ்மானோ இளைய ராஜாவோ
  ஒரு தரம் இக்கவிதையை ப் பார்த்தாலே
  ஓராயிரம் ட்யூன் மனதிற்குள் இசைப்பர்.

  ஒரு கிழவன் சும்மா இருக்க இயலுமா !!
  ஒரு ஓரமாக உட்கார்ந்து பாடுகிறேன்.
  ஒரு கிணற்றடி படிக்கட்டில்.

  வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. வருக! வருக!
   சாண்டில்யன் வர்ணனைக்கு முன்னால் நான் தவமிருக்க வேண்டுமே என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேசும் தங்கள் வாழ்த்து எனை சங்கடப்படுத்தியது.
   தாங்கள் பாடி மகிழ்விப்பதே எங்களுக்கு மகிழ்ச்சி.

   Delete
  2. தமிழகத்தின் சரோஜினி நாயுடு ஆக த்திகழும்
   சசிகலா அவர்களுக்கு நன்றி

   இதோ..இன்னும் சற்று நேரத்தில்
   எனது வலையில் உங்கள் பாடல்
   தொடர்புக் கோடு ( லிங்க்) தருகிறேன்.

   நடுவில் நிறுத்தி விடாமல்,
   சுற்றம் உற்றம் எல்லாம் கூட,
   உங்கள் வீடு தோட்டத்திலோ,
   முற்றத்திலோ,
   முன் நின்று
   முழுவதும் கேளுங்கள்.
   ஏன் எனின்,
   உங்கள் அன்புக்குரியவரும் சேர்ந்து பாடுவார்.
   உள்ளே வீட்டுக்குள் ஓடி விடாதீர்கள்.

   சுப்பு தாத்தா.
   www.subbuthathacomments.blogspot.com

   Delete
  3. என்ன இது ஐயாவும் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்.

   Delete
  4. என் வார்த்தைகளில் கிண்டல் இருக்கிறதா ? ! !

   என் மனதில் கண்டிப்பாக இல்லை.

   வார்த்தைகளில் தவறுதல் இருந்தால்
   வருந்துகிறேன்.

   Delete
  5. ஐயா தமிழகத்தின் சரோஜினி என்று சொல்வதெல்லாம் கிண்டலாகத்தானே இருக்கிறது. அதைத்தான் கிண்டல் என்று சொன்னேன். தாத்தாவுக்கு பேத்தியை கிண்டலடிக்க உரிமை உண்டே பிறகு ஏன் வருத்தம்?

   Delete
 18. குயிலின் இசை போல இனிமை

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

   Delete
 19. ஒவ்வொரு வரியும் அழகு! அருமையான படைப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 20. வணக்கம் சகோ !

  இன்னிசையில் நல்விருத்தம் இயம்புகின்ற சகோதரியே ! உன்றன் ஆற்றல்
  இன்றமிழை எழிலாக்கும் இடரறுத்துப் புகழ்சேர்க்கும்! நல்லோர் சிந்தை
  சென்னியிலே குடிகொள்ளும் செந்தேனைப் போல்சுரக்கும் கவிதை பாடிப்
  பொன்கொழிக்கும் பூமியிதைப் பூந்தமிழால் புலர்விப்பாய் வாழ்த்து கின்றேன் !

  அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
  தமிழ்மணம் +1

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. தங்கள் வெண்பா கண்டு வியந்து நிற்பவள் நான்..
   தங்களின் வாழ்த்தையும் மகிழ்வுடன் ஏற்கிறேன்.

   Delete
 21. அற்புதம் இந்த அறுசீர் விருத்த வகையை அதிகம் படித்ததில்லை .சந்தம் அப்படியே காந்தம் போல் கவர்கிறது சொல்லழகும் பொருளழகும் வியக்க வைக்கிறது.
  கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் இருந்து எப்படி இவ்வளவு விரைவாக கற்றுக் கொண்டீர்கள். ஆசானுக்கு வணக்கங்கள்

  ReplyDelete
  Replies
  1. யாப்பிலணகத்தில் நான் இன்னும் முதல் வகுப்பையும் முடிக்கவில்லைங்க.
   என்னைப்போன்றவர்களுக்கு சொல்லித்தரும் ஐயாவிற்கு எனது வணக்கமும். தங்களுக்கு எனது நன்றியும்.

   Delete
 22. சிறந்த ஆக்கம் பாராட்டுகள்

  ReplyDelete
 23. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிப்பா.

  ReplyDelete
 24. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (27/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
  Replies
  1. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிங்க.

   Delete
 25. அன்புள்ள சகோதரி திருமதி. தென்றல் சசிகலா அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள (தமிழ்மணம்) வாசகர்களில் நானும் ஒருவ்ன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

  நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (27.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

  நினைவில் நிற்போர் - 27ம் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/06/27.html

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க சகோ.

   Delete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. உன்பாட்டுக் கேட்கக் குதித்தோடி வருவேனே
  என்னாச்சு என்றெனக்கு இன்னும் தெரியேலை
  பண்ணோடு பாட்டுமக்கு பின்னூட்டம் இட்டிடவே
  சென்றுபின்விட் டேனோ மறந்து !

  எப்படி தவறிற்று ம்..ம் பின்னூட்டம் இட்டு விட்டேன் என்றல்லவா எண்ணி விட்டேன்மா இனிமேல் இப்படி தப்பு நடக்காது ok வா இம்முறை மன்னிசுக்கடா ok வா

  செந்தமிழில் சிந்துகிறாய் சீராய் விருத்தங்கள்
  சிந்தைக்கு நல்விருந்தாய்! அந்திக்கு- முந்தும்
  அழகான வெண்ணிலவாய் நின்றொளிர என்றும்
  எழட்டும்நின் பாடல் நிதம்!


  அழகு அழகு விருத்தங்கள் அனைத்தும் மேலும் ஒளிர என் வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. வெண்பா பாடியே அசத்தும் உங்கள் வாழ்த்திற்கு நன்றி கூற சொற்கள் தேடி சோர்ந்தேன் தோழி..
   நன்றிப்பா.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி