Ads 468x60px

Thursday, June 18, 2015

மனிதம் கற்கப் பழகிடுவோம்!



சின்ன சின்ன பூக்களுமே
         சிரிக்கத் தினமும் மறப்பதில்லை!
உன்னைப் போலே சோகமுடன்
          உறவை வெறுத்துப் போவதில்லை!
என்ன இருக்கு வாழ்வினிலே
      என்றே என்றும் நினைப்பதில்லை!
மின்னல் கண்டும் சிரிக்குமந்த
       வீரம் ஏனோ நமக்குமில்லை!

அடைந்து கிடக்கும் நம்மைப்போல்
        அடைப்ப துண்டோ மணத்தையுமே?
உடைந்து போகச் சொற்களையும்
        உதிர்ப்ப தில்லை பூக்களுமே!
இடையே வாழும் பொழுதேனும்
         இழிவுச் செயலைச் செய்யாது
மடிந்தே போகும் மலரிடத்தில்
        மனிதம் கற்கப் பழகிடுவோம்!
       
எல்லாம் கடந்து போகுமென்றே
      என்றும் நினைந்து செயல்படுக!
கல்லாய் நாமும் அமர்ந்திடவோ
     கசந்த நினைவும் போகிடுமோ!
நில்லாது ஓடும் காலம்போல்
      நித்தம் ஓடப் பழகிவிட்டால்
இல்லை இங்கே துயரமதும்
       என்றும் இனிமை சேர்ந்திடுமே!

44 comments:

  1. ஆரம்ப வரிகளிலிருந்து கடைசி வரிகள் வரை, யோசிக்க வைக்கும் மிகவும் அருமையான அற்புதமான அசத்தலான ஆக்கம். படத்தேர்வும் வெகு அழகு. மனம் நிறைந்த பாராட்டுகள். நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகையும் உற்சாகம் தரும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  2. //இடையே வாழும் பொழுதேனும்
    இழிவுச் செயலைச் செய்யாது
    மடிந்தே போகும் இனத்தினின்று
    மனிதம் கற்கப் பழகிடுவோம்!//

    மிகவும் ரஸித்தேன் :))))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சிங்க ஐயா.

      Delete
  3. அற்புதமான கவிதை
    எதுகை மோனை போல
    இயைபுத் தொடையிலும்
    கொஞ்சம் கூடுதல் கவனம் கொண்டால்
    கவிதை நிச்சயம் சக்கரைப்பந்தலில்
    தேன்மாரி பொழிந்ததைப் போலாகும்
    என்பது என கருத்து

    ReplyDelete
    Replies
    1. கூடுதல் கவனம் தேவை தான் ஐயா. தங்கள் வருகைக்கும் தக்க ஆலோனையும் பகிர்ந்தமைக்கும் நன்றிங்க ஐயா.

      Delete
  4. நில்லாது ஓடும் காலம்போலே
    நித்தம் ஓடப் பழகிவிட்டால்
    இல்லை இங்கே துயரமதும்
    என்றும் இனிமை சேர்ந்திடுமே!

    உண்மைதான் மகளே! தேனென இனிக்கும் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  5. இயற்கை போல இனிய ஆசான் உண்டோ!மனிதம் கற்கவேண்டிய நிலைதான்!
    அருமை சசிகலா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  6. // இழிவுச் செயலைச் செய்யாது // அருமை... இது ஒன்றே போதும்...

    ReplyDelete
    Replies
    1. போதுமென்ற மனமும் வேண்டும் தான் சகோ.

      Delete
  7. ஒரு நல்ல ஆக்கத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்தேன் . உள்ளம் பூரிக்கிறது ...

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி. வெகுநாட்கள் ஆகிவிட்டதே தங்களைப் பார்த்து நலம் தானே ?
      அவ்வப்போது வருக. நன்றிங்க தோழி.

      Delete
  8. அருமை! என்றும் வாடி கிடக்காமல் உற்சாகத்துடன் செயலாற்றவேண்டும் என்று அருமையாக சொன்னது கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாகச் சொன்னீர்கள் நன்றிங்க.

      Delete
  9. மலர்கள்கள் போல் நாமும் இருப்போம், அருமையான கவிதை, வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு நான் தானே நன்றி கூற வேண்டும் தோழி.

      Delete
  10. கவிதை வரிகள் அருமை சகோ எனது இதயவலிகள் 7 இதற்க்கு மருந்து போலவே இருக்கிறதே....
    அதற்காக தமிழ் மணம் 7

    ReplyDelete
    Replies
    1. வலிக்கு மருந்தானதில் மகிழ்வே சகோ.

      Delete
  11. அருமையான வரிகள்........பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete

  12. வணக்கம்!

    அறுசீர் விருத்தத்தில் ஆன கவிக்குள்
    உறுசீர் அனைத்துமுயர் வூட்டும்! - அறஞ்சேர்
    இனிய தமிழ்மொழியை ஏந்திடுவீர்! பாரில்
    மனிதம் மணக்கும் மலர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. பாரில் எங்கும் மனிதம் மலரட்டும் ஐயா . தங்கள் வருகையும் வெண்பா வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  13. ஒவ்வொரு வரிகளும் அருமை அருமை சகோ

    மடிந்தே போகும் மலரிடத்தில்
    மனிதம் கற்கப் பழகிடுவோம்!//

    மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை....நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வருக வருக! தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  14. இழி செயலைச் செய்யாது
    மனிதம் கற்போம்
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  15. இனிமையான அறுசீர் விருத்ததில் அழகான பா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  16. நாம் தொலைத்துவிட்ட மனிதத்தை மீட்கும் உங்கள் வரிகள் ஆழமாகப் பதிந்தன. பாராட்டுகள்.
    அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
    http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றிங்க இதோ வருகிறேன்.

      Delete
  17. சின்ன சின்ன பூக்களுமே
    சிரிக்கத் தினமும் மறப்பதில்லை!
    உன்னைப் போலே சோகமுடன்
    உறவை வெறுத்துப் போவதில்லை!
    என்ன இருக்கு வாழ்வினிலே
    என்றே என்றும் நினைப்பதில்லை!
    மின்னல் கண்டும் சிரிக்குமந்த
    வீரம் ஏனோ நமக்குமில்லை!

    அட அட அருமையான விருத்தம் ரசித்தேன் ஒவ்வொன்றையும் தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். vacation னில நிற்பதால் தான் தாமதம். இன்று தான் வந்தேன்மா.

    ReplyDelete
    Replies
    1. தாமதமானால் என்ன வருகை தந்ததில் மகிழ்வே பா.
      தங்களுக்கு என் நன்றியும்.

      Delete
  18. அறுக்காத அறுசீர் விருத்தக் கவிதையை ரசித்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. அறுக்காமல் எழுதினேனா மகிழ்வே.
      வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  19. வணக்கம் சகோ !

    மின்னல் கண்டும் சிரிக்குமந்த
    வீரம் ஏனோ நமக்குமில்லை!

    வீரம் இருந்தது ஆனால் இப்போ இல்லை !

    அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  20. Replies
    1. மெல்லச் சுவைகூடும்! மென்மேலும் உண்கவெனச்
      சொல்ல அழகொருங்கே கூடிவரும்!! - வெல்லவொணா(து)
      இன்றமிழாள் வீற்றிருக்க எம்மிதயம் ஈர்த்தோடும்
      தென்றல் சசிகலாவின் தேர்!

      தங்கள் விருத்தம் கண்டு வேறென்ன சொல்ல கவிஞரே..!!!!!

      Delete
    2. வாருங்கள் ஆசிரியரே தங்கள் வருகையும் வெண்பா வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஆசிரியரே.

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி