Ads 468x60px

Saturday, May 16, 2015

நினைவூஞ்சல் !


நினைவாற்றில் நீந்தவிட்டு நீயெங்குப் போனாய்?
எனைவருத்தும் காதலதை ஈந்தே - உனைநோக்கிக்
காத்திருக்கும் கண்ணில் கனவுண்டு! காட்சியில்லை!
பூத்திருக்கும் பூவெடுத்துப் போ!

இன்பக் கடலில் இதமாக நீந்தவிட்டுத்
துன்பம் துடைக்கின்றாய்த் தூயவனே! - இன்றென்
இதயத்தில் நீங்கா இடம்பிடித்தாய் என்றும்
உதயமென ஆவாய் உவந்து!

அழைக்காத நேரம் அலைபாயும் எண்ணம்
மழையில்லாக் கோடை வனமாய்! - பிழையேதோ
என்றேதான் போராடி இன்னுயிர் வாடிடும்!
குன்றாத் துயரைக் குறை!

கண்ணடிதான் பட்டதுவோ காரிகையின் கையெழுதும்
எண்ணத்தில் நின்றாடும் என்னவனே? - வண்ணமுற
வான்வெளியில் நான்பாடி வந்திடுவேன்! உன்னுடைய
தேன்மொழியில் நெஞ்சம் திளைத்து!

நினைவினில் எந்நாளும் நின்றாடும் காதல்
எனைஏதோ செய்கிறது இன்று - கனவினிலும்
உன்னுருவம்! காற்றினிலும் உன்வாசம்! கள்வனே
என்னுயிர் தன்னையே ஏந்து!

15 comments:

  1. கனவினிலும் உன்னுருவம்!
    காற்றினிலும் உன்வாசம்!
    கள்வனேஎன்னுயிர் தன்னையே ஏந்து!

    அருமையான கற்பனை வரிகள் ஸூப்பர் சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. வெண்பா முத்துக்கள் அனைத்தும் அருமை!

    ReplyDelete
  3. வணக்கம்
    காதல் இரசம் சொட்டும் வெண்பா... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. காதல் பொங்கும் வெண்பாக்கள் அருமை ! மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்ல கற்பனை மா வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நல்ல கற்பனை மா வாழ்த்துகள்

    ReplyDelete
  7. நினைவூஞ்சல் ! கவிதை அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. கவிதை அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  9. அழகான நினைவூஞ்சல், ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  10. கண்ணாடி காட்டுமுன்னுரு முன்னாடி
    கவிதை காற்றாடி பாட்டெழுதி நிற்க
    கற்கண்டென தேடுவதேன் மாற்றுரு
    கயல்விழி கண்டதும் உண்டதுமிங்கே
    கருங்குயிலதின் ஒலியாயரங்கேற்றமோ?
    கனவுகளும்,கற்பனையும் ஆடையுடுத்தே.

    ReplyDelete
  11. அழைக்காத நேரம் அலைபாயும் எண்ணம்
    நினைவினில் எந்நாளும் நின்றாடும் காதல்
    எனையேதோ செய்கிறதே இன்று,,,
    இப்படி ஒவ்வொரு வரியும் காதல் சொட்டுகிறது.
    அருமை, நன்றி.

    ReplyDelete
  12. ஏந்தும் உயிரடுக்கில் ஏத்தும் அவன்வெண்பாச்
    சாந்தில் மனங்கவருஞ் சந்தமெழ - நீந்தும்
    நினைவலைகள் பூட்டும் நெடுங்குருதி உள்ளந்
    தனைக்கவர்நது கொண்ட தமிழ்!

    உள்ளங் கவரும் உங்கள் தமிழ்!

    வாழ்த்துகள் கவிஞரே!

    நன்றி.

    ReplyDelete
  13. நினைவூஞ்சலில் ஆடி மகிழ்ந்தேன்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  14. வணக்கம்!

    காற்றின் அவன்வாசம்! காதல் கவிபேசும்!
    ஊற்றின் குதிப்பாய் உயிர்துள்ளும்! - ஆற்றுநடை!
    பெண்ணாளும் ஏக்கத்தைப் பேணுகின்ற வெண்பா!என்
    கண்ணாளும் என்பேன் கமழ்ந்து!

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி