Ads 468x60px

Saturday, May 30, 2015

வாசமில்லாத் தேடல்களாய்!


கரைபுரண்டோடும் நீரும்
கடலைத்தேடி...

சிறகுவிரிந்த மேகமும்
மலையாழம் பார்த்து...

முட்டைவிரிந்த குஞ்சும்
இரை தேடி...

வாழ்வுதேடி சுழல்நீரில்
எதிர் நீச்சலிடும் மீனும்...


மலர் வருடும் வண்டும்
மண்ணுக்கு உயிராய் புழுவும்.

எல்லாம்வழங்கும் காலமும்
அறிவைத்தேடும் ஞானமும்
அணையாத மெய்யன்பும்
சுகமென்று சுமைதாங்கும்!

எண்ணம்தேடும் கவிஞனும்
வம்பாய் முடியும் நல்லுறவும்
ஆசை துறந்த மனப்பாட்டும்.

நீ நான் அவன் அவள் அதுஇது
எனது உனது நமதுபிரிவுகளும்

வாசமில்லாத் தேடல்களாய்
கொடுத்ததெது தெரியாது
கொண்டதெது அதுநினைவாய்
வருவதெதுவோ அறியோம்நாம்
ஆயினுமெல்லாம் நமக்காக.

நானென்ற நம்ஆசைக்காய்
பிரபஞ்சத்தில் மாயத்தேடல்கள்.
எல்லாமே ஏதோபிரதிபலனை
எதிர்நோக்கியே நன்மையும் ஏன்?
தீமையுமிணைந்த பயணங்கள்!!

31 comments:

 1. //நானென்ற நம் ஆசைக்காய் பிரபஞ்சத்தில் மாயத்தேடல்கள்.
  எல்லாமே ஏதோ பிரதிபலனை எதிர்நோக்கியே//

  மிகச்சரியான கூற்று.

  //வாசமில்லாத் தேடல்களாய்!//

  தலைப்பு அருமை. படத்தேர்வும் வெகு பொருத்தம். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 2. தேடல்கள் குறித்த நல்ல கவிதை.
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

   Delete
 3. தேடல் புதுமையான கவி வாழ்த்துகள்
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

   Delete
 4. உள்ளம் துளைத்தெழுந்த ஊதற் பறவையொலி
  எள்ளும் பரிகசிக்கும் ஏளனத்தின் - முள்பதித்த
  மோனப் பெருவெளிக்குள் மூழ்கி மனம்வெடிக்கும்
  கானம்! கரைகிறதென் கண்!

  கவியின் ஆழம் சென்றேன் கவிஞரே!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மாயை எனத்தெரிந்தும் மன்றாடும் நெஞ்சமதும்
   நோயை வரவேற்கும் நொந்து.
   வெண்பா வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி ஆசிரியரே.

   Delete
 5. நானென்ற நம்ஆசைக்காய்
  பிரபஞ்சத்தில் மாயத்தேடல்கள்.
  எல்லாமே ஏதோபிரதிபலனை
  எதிர்நோக்கியே நன்மையும் ஏன்?
  தீமையுமிணைந்த பயணங்கள்!!

  மேடு பள்ளங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை
  அருமை சகோதரியாரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 6. அருமையான கவிதை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 7. Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 8. வெறும் மாயை என்றுணராமல் மல்லுக்கு நிற்கிறோம் இல்லையா.ம்..ம்..ம் அழகான ஆழமான சிந்தனை. அருமை அருமை !தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

   Delete
 9. அனைத்தும் மாயத்தேடல்கள்தான் மிகச் சரி.. ஹ்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

   Delete
 10. நானென்ற நம்ஆசைக்காய்
  பிரபஞ்சத்தில் மாயத்தேடல்கள்......
  This is the life....

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

   Delete
 11. தேடல்கள் என்றும் வீணாவதில்லை என்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன். தேடல் நம்மை மேம்படுத்துகிறது, பக்குவப்படுத்துகிறது.
  நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
  http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

  ReplyDelete
 12. எல்லாமும் நிறைவானதாக இருந்தால் விட்டால் தேடலுக்கு வழியேது ?
  ஆதலால் தேடல் இருக்கும் வரையே வாழ்வும் சிறக்கும் என்பதை அழகாகச் சொன்னீர்கள் நன்றிங்க.
  தங்கள் பகிர்வையும் காணக்கொடுத்தமைக்கு நன்றிங்க. தொடரட்டும் தங்கள் ஆய்வு.

  ReplyDelete

 13. வணக்கம்!

  தீமை வினையகலச் செய்யும் செயலொளிர
  ஆமை யெனமெய் அடக்கிடுக! - ஊமையென
  உள்ளம் இருந்தால் உனக்குள் உயர்ஞான
  வெள்ளம் பெருகும் விரைந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. தங்கள் வருகையும் மனத்தெளிவைத் தந்த வெண்பாவும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 14. Replies
  1. வணக்கம் ஐயா. வருக! வருக!
   வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 15. நானென்ற நம்ஆசைக்காய்
  பிரபஞ்சத்தில் மாயத்தேடல்கள்.
  உண்மை தான் தோழி, அருமையான கவி. வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 16. ஞானத்தேடல்... அழகுப்பாவாய் மிளிர்ந்ததே இங்கே.. பாராட்டுகள் சசி.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி