Ads 468x60px

Tuesday, May 19, 2015

மீனுரு வாழ்வோ?


கட்டி வைத்த மாலையெனக்
கனவுகளைக் கோர்த்தெடுத்துக்
கண்டு விட்ட லாபமென்ன?

இன்பமும் துன்பமும்
மாயையெனத் தெரிந்திருந்தும்
மன்றாடும் நெஞ்சமதைக்
காவலிடத் துணிவுமில்லை...

வெள்ளாடை தனையுடுத்தி
வீதிவழி மேகமென
விதிப்பயண ஆற்றினிலே
கரைதேடும் உள்ளங்கள்!

நினைவலையில்
சிக்கி மாயும்
மீனுரு வாழ்வோ
நமது வாழ்க்கை?

13 comments:

  1. //நினைவலையில் சிக்கி மாயும் மீனுரு வாழ்வோ நமது?//

    நினைவலைகளில் சிக்காமல் மீள்வது என்பது மிகவும் கஷ்டமாச்சே !

    இந்தக் கவிதையில் மனவலைகள் சிக்கி விட்டதால் மேலேயுள்ள வரிகளை எழுதத்தோன்றிவிட்டது :)

    ReplyDelete
    Replies
    1. மிகவும் கஷ்டம் தான் ஐயா. வருகைக்கு நன்றிங்க ஐயா.

      Delete
  2. வெள்ளாடை தனையுடுத்தி
    வீதிவழி மேகங்களாய்

    நல்லதொரு கற்பனை வரிகள் நானும்தான் யோசிகின்றேன் இப்படி வார்த்தைகளை அவை எம்மை யாசிக்கின்றனவே... வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. சகோ தங்கள் யோசனைக்கு முன்பு நானெல்லாம் என்ன செய்ய முடியும்... சகலகலா வல்லவர் அல்லவா தாங்கள்.

      Delete
  3. Replies
    1. வணக்கம் ஐயா. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete


  4. வணக்கம்!

    மீனுறு வாழ்வென மீட்டிய சொல்லெல்லாம்
    ஊனுறு வண்ணம் ஒளிர்ந்தனவே! - தேனுறு
    பாக்கள் படைக்கின்ற பாவை சசிகலா
    ஆக்கம் அனைத்தும் அமுது!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  5. அப்படித்தான்...! (அன்பு எனும் வலை...!)

    ReplyDelete
  6. நல்ல கற்பனை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்
    தம +1

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி