Ads 468x60px

Wednesday, May 13, 2015

உள்ளாடும் உயிரே !


மடிமீது எனையேந்தி வளம்பாடி தினம்கொஞ்சி
      மகிழ்வோடு வளர்த்த அன்னை!
  மண்ணாற்றில் எனைவிட்டு மறைந்தோடிப் போனாயே
      மனமேங்கிச் சாடும் என்னை!

வடிவத்தில் தினம்மூழ்கி வடிக்கின்ற பாட்டெல்லாம்
     வாழ்த்தாகி மணத்தைக் கூட்டும்!
   வடிவாகி என்னுள்ளே வரமான தமிழாகி
        மகிழ்ந்தாடி என்னை மீட்டும்!

அடித்தாலும் அணைத்திட்ட அன்பான உருவத்தை
      எங்கோடித் தேட நானும்!
   அழுதாலும் புரண்டாலும் அணைக்கின்ற ஆளில்லை
        அறிவாயோ அன்னை நீயும்!

தடிகொண்டு நடந்திட்ட தள்ளாடும் பருவத்தில்
      தாயுன்னைப் பார்க்க வில்லை!
   தவறென்ன செய்தோமோ தவிக்கின்ற துன்பத்தைத்
        தாங்கத்தான் யாரும் இல்லை!

25 comments:

 1. அன்னையாய் சுமையேந்த அவனியில் யாருமுண்டோ?
  ஆசையாயக் கூடுகட்டி முட்டைதனை அடையுங்காத்து,
  இரவுபகலாயதற் குணவூட்டி,வெயில் மழை தானுண்டு,
  ஈனக்கழுகதன் கண்மறைத்து கண்ணெனக் காப்பதுவும்,
  உண்மையுணர்ந்தோர்நாள் பறக்கக் கற்றுக் கொடுத்தே,
  ஊரறிய,தன்காலில் தான் நிற்க கண்கலங்கி யனுப்பல்,
  எவனெழுதிய நாடகமோ?அதில் நடித்தல்நம் விதியோ?
  ஏக்கங்களும்ஂ,தாக்கங்களும் எழுத்தாணி முனையாயின்,
  ஐம்புலனும் தேடித்தேடி கவிதைமழைப் பொழியாதோ,
  ஒருநாளும் அழியாத உறவது நிழலாகித் தொடராதோ,
  ஓங்கிவளரும் ஆலதில் ஆயிரமாயிரம் உயிர் வாழும்,
  ஔவழியே அன்பும் ஆனாலதிலேதும் நிரந்தரமின்றியே
  அஃதே சொல்ல உண்டு யாவும் கரையும் பனியுருவே..

  ReplyDelete
  Replies
  1. உயிர் கொடுத்த தாய்க்கு உயிர்எழுத்தில் தந்த மறுமொழிக்கு நன்றிங்க.

   Delete
 2. வணக்கம்
  சகோதரி

  தாய் மீது சேய் இன்புறும் கண்கலங்கும்
  நிலையதனை. சங்கிலி பின்னல் போல்
  சரம் கோர்த் த விதம்கண்டு மகிழ்தேன்.

  அருமையா வரிகள்...பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க சகோ.

   Delete
 3. அன்னை ஓர் ஆலயம்
  அருமை சகோதரியாரே
  நன்றி
  தம 2

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தமிழ்மண ஓட்டிற்கும் நன்றிங்க சகோ.

   Delete
 4. டிகொண்டு நடந்திட்ட தள்ளாடும் பருவத்தில்
  தாயுன்னைப் பார்க்க வில்லை!
  தவறென்ன செய்தோமோ ....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க தோழி.

   Delete
 5. உள்ளாடும் உயிரே !

  உயிரையே உள்ளாட வைக்கும் உணர்ச்சிமிக்கக் கவிதைக்கு முதலில் என் பாராட்டுகள்.

  எத்தனை வயதானால் என்ன? தாயின் நினைவுகள் என்றும் இனிமையானவை தான். தாய்க்குச்சமம் தாய் மட்டுமே தான்.

  வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தாய்க்குச்சமம் தாய் மட்டுமே மிகச்சரியாகச் சொன்னீர்கள். நன்றிங்க ஐயா.

   Delete
 6. "அடித்தாலும் அணைத்திட்ட அன்பான உருவத்தை
  தடிகொண்டு நடந்திட்ட தள்ளாடும் பருவத்தில்
  தாயுன்னைப் பார்க்க வில்லை!"

  வடிக்கின்ற கண்ணீரை வார்க்குதே கண்கள்
  துடிக்கின்ற இதயத்தின் தூய்மை சத்தம்
  படிக்கின்ற போதே கேட்டேன் பா வரியில்
  உள்ளாடும் உயிரே! தாயே !
  த ம 3
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. துடிக்கின்ற இதயத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்ததாய் அமைந்த வரிகள் ஆறுதல் அளித்தன. மனமார்ந்த நன்றிங்க.

   Delete
 7. ஏங்க வைக்கும் வரிகள் கலங்க வைத்தன..

  ReplyDelete
  Replies
  1. கலங்க வைத்து விட்டேனா ? மன்னிக்கவும் சகோ.

   Delete
 8. அருமை அருமை அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நன்றி! நன்றி!

   Delete
 9. இடிவந்து தாக்கிடினும் இன்னல்பல ஏற்படினும்
  இமைகொண்ட விழியாய்க் காப்பேன்
  இரவில்சேர் பனிபோலே இழைத்திட்ட வன்மங்கள்
  இருகாமல் கனலால் தீய்ப்பேன்

  பதினான்கு சீர் செய்யுள் இயற்றிட கற்றுத் தந்த தமிழ் அன்னைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. பனிபோல வன்மங்கள் தீய்க்க தாங்கள் சொல்வது போல் தமிழன்னை தான் வருகிறாள். நன்றிங்க.

   Delete
 10. அருமை அருமை !

  தடிகொண்டு நடந்திட்ட தள்ளாடும் பருவத்தில்
  தாயுன்னைப் பார்க்க வில்லை!
  தவறென்ன செய்தோமோ தவிக்கின்ற துன்பத்தைத்
  தாங்கத்தான் யாரும் இல்லை!

  தவிப்போடு எழுதிய தாயின் கவிதை சூப்பர் மா.
  ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 11. மனதைப் பிசையும் வரிகள்..தாயை யாரும் எதுவும் நிகர் செய்ய முடியாது..
  அருமையான கவிதைக்கு வாழ்த்துகள் தோழி
  த.ம.+1

  ReplyDelete
 12. மனம் கணக்க வைத்து விட்டது கவி அன்னயைப் போற்றிய கவி.
  தமிழ் மணம் 8

  ReplyDelete
 13. நெஞ்சம் கனத்துப் போனது தங்கள் கவியில். கண்கள் பனிக்க அருமை சகோ, நன்றி.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி