Ads 468x60px

Thursday, April 9, 2015

ஓடியே ஒளிவதும் தகுமோ?

தள்ளியே நின்று தன்னையே நோக்கிச்
        சாகசம் புரிந்தவன் யாரோ?
துள்ளியே ஓடும் மானினை ஒத்த
         சுந்தரி இவளது அகத்தை!
அள்ளியே அணைத்து அகத்தினில் சூடி
          அந்தியில் போனவன் பாதை
உள்ளமே நாட உறவினைத் தேட
         ஓடியே ஒளிவதும் தகுமோ?

 மனதினைக் கவர்ந்து மறைவினில் இருக்கும்
         மன்னவன் பெயரதும் அறியேன்!
கனவினைக் கொடுத்த கள்வனின் முகமே
         கரும்பென இனித்திடும் என்பேன்!
இனியென ஆகும் இவளது நிலையே
         எண்ணியே கனத்தது நெஞ்சும்!
நனித்திடும் நினைவால் நலிந்திடத் தேகம்
        நாணமும் தொலைத்தது பெண்மை!


விளம் மா விளம் மா
விளம் விளம் மா எழுசீர் விருத்தம்.

28 comments:

  1. அருமையான நடை... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

      Delete

  2. வணக்கம்!

    பெண்மையைப் போற்றி பேசிடும் பாடல்   
       பெருகிடும் இனிமையை நல்கும்!
    தண்மையை ஊட்டித் தந்திடும் சொற்கள்
       தழைத்துள ஆற்றலைக் காட்டும்!
    வண்மையை உடைய வள்ளலைப் போன்றே
       வண்டமிழ் வழங்கிடக் கண்டேன்!
    உண்மையைச் சொல்வேன்! உளத்தினைச் சொல்வேன்!
       உயர்கவி தென்றலே வாழ்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. உயர்கவி தென்றல் என்றெனை வாழ்த்த
      உள்ளமே உவகையில் பூக்க!
      இயம்பிய வார்த்தை இனிமையைக் கூட்டி
      என்னுயிர் கலந்துதான் நாளும்!
      அயர்வினைப் போக்கி ஆற்றலை ஊட்ட
      அகமது களிப்புடன் கற்கும்!
      உயர்ந்திட வழியை காட்டிய ஆசான்
      உயர்குணம் தொழுதிடு வேனே!

      தங்கள் வருகையும் விருத்தப்பா வாழ்த்தினையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  3. நாணத்தைத் தொலைத்த பெண்மை என்ற சொற்றொடரை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா! விருத்தப்பாவிற்காக எழுதிப்பார்த்தது அவ்வளவே. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  4. நாணத்தைத் தொலைத்த பெண்மை என்ற சொற்றொடரை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  5. கனவினைக் கொடுத்த கள்வனின் முகமே
    கரும்பென இனித்திடும் என்பேன்
    நான் ரசித்த வரிகள் அருமை சகோ
    தமிழ் மணம் 3
    சகோ, எனது பதிவுகள் தங்களது டேஷ்போர்டில் வரவில்லையோ ?

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ. மன்னிக்கவும் சகோ. சரியாக கவனிக்கவில்லை.

      Delete
    2. வணக்கம்
      ஜி

      ஆகா..ஆகா.. நல்ல கேள்வி......

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
    3. சகோ அலுவலகத்தில் இருந்தபடி வலைப்பக்கம் வருவதால் சில இடையூறுகள் .

      Delete
  6. வணக்கம்
    சகோதரி

    ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது பெண்மையை போற்றும் கவிப்பாவினை வடித்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ. வாழ்த்தியமைக்கு நன்றிங்க சகோ.

      Delete
  7. கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க சகோ.

      Delete
  9. உள்ளங் கவர் கள்வன் பற்றிய உயர்தமிழ்க்கவிதை!
    வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ. வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  10. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. //நனித்திடும் நினைவால் நலிந்திடத் தேகம்
    நாணமும் தொலைத்தது பெண்மை!///
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம 7

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  12. அன்புள்ள சகோதரி,

    சூடியே மாலை சுந்தரி நாளை...

       ஓடியே ஒளிவதும் வீணே...!

    ஆடியே இன்ப அன்பினில் கூடி

       ஆசையில் இசையுடன் வாழ்க!

    கவிதை அருமை...!

    நன்றி.
    த.ம. 8.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் விருத்தப்பா வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. படமும் படத்திற்கான உங்கள் கவிதையும் நன்று. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி