Ads 468x60px

Monday, April 27, 2015

நிலவுக்குந்தான் காத்திருக்கேன்..!


அழகழகா பூத்தொடுத்து
ஆசையெல்லாம் கோர்த்தெடுத்து
அந்தியில காத்திருந்தேன்
ஆச மச்சான் வரவுக்குத்தான்.

ஆத்தாடி வழியப் பாத்து
அங்கமெலாம் நோகுதடி
நேரத்தோட போனமச்சான்
நெனப்பென்ன வாட்டுதடி!

காத்தோட சேதிசொன்னேன்
காததூரம் போகலையே...
பூக்காதில் போட்டுவச்சேன்
பொழங்குதடி வாசமாத்தான்!

கருத்து வரும் மேகத்திடம்
கண்ணசைவில் சொல்லி விட்டேன்..
நிறுத்தி வழி கேட்டு வரும்
நிலவுக்குந்தான் காத்திருக்கேன்..
நெசமாவே ஆசவுண்டா
நெஞ்சோரம் சொல்லுமச்சான்!

30 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அழகான
    ஆசைக்கவிதை
    இதமாக
    ஈர்ப்புடன்
    உள்ளது
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ நலம் தானே ?

      Delete
  3. நேரத்தோட போனமச்சான்
    நெனப்பென்ன வாட்டுதடி!...mmmm
    ஆசை முகம் மறந்து போச்சோ அதை
    ஆரிடம் சொல்வேனடி தோழி!

    ReplyDelete
    Replies
    1. இனிமையான பாடலை நினைவுப் படுத்தியமைக்கு நன்றிங்க தோழி.

      Delete
  4. ஆஹா ஆஹா
    இதுக்கு மேலயும் மச்சான் வராம இருக்க முடியாது.. அருமை தோழி

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி ... நன்றியும்.

      Delete
  5. வணக்கம்
    சகோதரி.

    மச்சனுக்கு இசைபாடிய வரிகளை இரசித்தேன்.. ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

      Delete

  6. வணக்கம்!

    நெஞ்சுக்குள் பேசும் நினைவுளை என்னென்பேன்?
    வஞ்சுக்குள் வந்தநிலை என்னென்பேன்? - மிஞ்சும்
    அழகழகாய்ப் பாத்தொடுக்கும் ஆற்றலைப் பெற்றீர்!
    வழவழப்பாய்ச் சீர்கள் வடித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா. தங்கள் வருகையும் வெண்பா வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  7. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  8. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  9. அருமையான கவிதை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  10. Replies
    1. ரசித்து மகிழ்ந்தமைக்கு நன்றிங்க.

      Delete
  11. காற்றும் பூவாசமும் கார்மேகமும் செய்யாத தூது வேலையை நிலவு அழகாகச் செய்துவிடும். கிராமியப்பெண்ணின் ஏக்கத்தை மிக அழகாக வெளிப்படுத்தும் வரிகள். பாராட்டுகள் சசி.

    ReplyDelete
    Replies
    1. வெகுநாட்கள் ஆகிவிட்டது. இது போன்று எழுதி தாங்கள் அன்று நினைவு படுத்தியதும் எழுதியது. நன்றிங்க தோழி.

      Delete
  12. நாட்டுப் புற நடை மணக்கும் கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  13. ஆத்தாடி வழியப் பாத்து
    அங்கமெலாம் நோகுதடி
    நேரத்தோட போனமச்சான்
    நெனப்பென்ன வாட்டுதடி!ம்..ம்..ம் அருமையான காதல் பாட்டு.

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி.. இனிமையான வாழ்த்தில் மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  14. அருமை! மகளே! அருமை !மணக்கும் பாமாலை

    ReplyDelete
  15. அடடா அடடா அழகிதுவா அன்பைத் தேடும் கவியிதுவா ..! செம
    அருமை சகோ வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  16. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  17. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  18. கிராமத்து வாசனை மூக்கை துளைக்கிறது

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி