Ads 468x60px

Saturday, April 25, 2015

அன்பின்றி அகிலத்தில் நன்மை உண்டோ?

ஆடுகின்ற ஆசைகளால் நிறைவும் உண்டோ ?
         அன்பின்றி அகிலத்தில் நன்மை உண்டோ?
பாடுகின்ற பாட்டினிலும் கூட நல்ல
        பார்சிறக்கக் கருத்துகளும் இருக்க வேண்டும்.
தேடுகின்ற தேவைகளில் எல்லாம் நாட்டில்
      தீமையெதும் ஏற்படாது வளர்க்க வேண்டும்.
நாடுகின்ற நன்மைகளும் செழிக்க நம்மில்
       நட்புணர்வும் நற்குணமும் இருக்க வேண்டும்!

செய்கின்ற தொழில்களிலே இயற்கை நன்மை
       தருகின்ற வகையாக அமைய வேண்டும்.
நெய்கின்ற ஆடைகளும் தமிழர் வாழ்வில்
       நேர்மையினை உணர்த்திடவே இருத்தல் வேண்டும்.
மெய்யென்ற உணர்வுகளே ஓங்கி அன்பர்
        மேன்மைகளை உடுத்தியேதாம் வாழ வேண்டும்.
பெய்கின்ற வான்மழையைப் போலே நாளும்
       பெருமிதமாய் நற்கொள்கை வளர வேண்டும்.

26 comments:

  1. அருமை சகோதரியாரே
    நன்றி
    தம 1

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  2. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல

    த ம 2

    ReplyDelete
    Replies
    1. வள்ளுவன் துணையோடு வந்த பின்னூட்டத்திற்கு நன்றிங்க சகோ.

      Delete
  3. //பெய்கின்ற வான்மழையைப் போலே நாளும்
    பெருமிதமாய் நற்கொள்கை வளர வேண்டும்.//

    அனைத்து வேண்டுதல்களும் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  4. உய்யும் வழிகளைநீ ஓங்கி உரைத்திட்டாய்
    வையம் உணரும் இனி!
    அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ...! தென்றலே நலமா ?

    ReplyDelete
    Replies
    1. இனிமையான வெண்பா வாழ்த்திற்கு நன்றிங்க தோழி.

      Delete
  5. // நேர்மையினை உணர்த்திடவே இருத்தல் வேண்டும் //

    அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  6. //நாடுகின்ற நன்மைகளும் செழிக்க நம்மில்
    நட்புணர்வும் நற்குணமும் இருக்க வேண்டும்!//

    எல்லா வேண்டுதல்களும் சிறப்பு!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. தங்கள் கவி அழகு,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  8. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  9. நாடுகின்ற நன்மைகளும் செழிக்க நம்மில்
    நட்புணர்வும் நற்குணமும் இருக்க வேண்டும்

    அருமையான சிந்தனை சகோ
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  10. அருமை அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  11. சகோதரி, தங்களின் அன்பான எண்சீர் விருத்தம் நன்று.
    சுடுகின்ற வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்
    சுடரொளியாம் நெஞ்சத்தைக் கொள்ள வேண்டும்
    படுகின்ற துன்பத்தைப் பகிர வேண்டும்
    பசியினிலே இரப்பவர்க்கு உதவ வேண்டும்
    நடுகின்ற வித்தெல்லாம் விளைய வேண்டும்
    நலமெல்லாம் நாளெல்லாம் காண வேண்டும்
    தொடுகின்ற இன்னல்கள் தொலைய வேண்டும்
    தொலையாமல் நேயங்கள் மலர வேண்டும்.
    மரபில் தொடருங்கள். தொடர்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் ஊக்கம் தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete

  12. எண்சீர் விருத்தங்கள் என்றன் மனமேவிப்
    பண்சீர் விருந்தைப் படைத்தனவே! - மண்சிறக்க
    அன்பாம் அமுதை அளித்தனவே! ஈடிலா
    இன்பாம் தமிழை இசைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  13. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி