Ads 468x60px

Thursday, April 23, 2015

அவள் நினைவு!

இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா

தேங்காத நீருற்றாய்த் தேடிவரும் தாயன்பாய்
நீங்காது நின்று நிறைந்த அவள்நினைவு!
தூங்காது காத்துத் துயரினைப் போக்கிடும்!
தீங்கெனைத் தீண்டாது சீராட்டிக் காத்திடும்!
மாங்குயில் ஓசையாய் வந்தெனைச் சேர்ந்திடும்!
பூங்கொடி யாகவுளம் பூத்துப் பொலிந்திடும்!
தாங்கிட நானும் தவிக்கின்றேன் என்னவளே!
ஓங்கி ஒளித்திடும் என்குரல் கேட்டிடுவாய்!



14 comments:

  1. மரபில் ஓர் கவி, அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மரபில் ஓர் கவி, அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான புகழ் மாலை.

    ReplyDelete
  4. தாய் அவள் பா மாலை அழகு!
    த ம 4

    ReplyDelete


  5. வணக்கம்!

    அன்னைத் தமிழழகில் ஆழ்ந்து படைத்தகவி
    என்னை மயக்கும் எழில்!

    ReplyDelete
  6. வணக்கம்
    சகோதரி

    கவிப்பாமாலை.. இனிதே நன்று... பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. விதம் விதமான பாப்ப்புனைந்து அசத்திக் கொண்டிருகிறீர்கள் . தொடரட்டும்

    ReplyDelete
  8. மரபுக் கவிதை அருமை ! இணைந்து விட்டேன் இனித் தொடர்வேன் அழகு கவிதை காண. தொடர வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  9. தமிழ்த்தாய்க்கு சூட்டிய பாமாலை அழகு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ஆஹா... பிரமாதம்... மரபுக்கவிதை எழுதுவது சாதாரண காரியமில்லை. எவ்வளவு இயல்பாக அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் சசி.

    ReplyDelete


  11. ஓங்கி ஒலிக்கும் உனதுகுரல் கேட்டவளும்
    தாங்கித் தருவாள் தமிழ் !

    அருமை சகோ வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  12. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  13. சொல்லாட்சி மிளிர்கிறது

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி