Ads 468x60px

Monday, April 20, 2015

தாயும் - தமிழும்!


அள்ளி அணைத்தே அமுதினை ஊட்டிய அன்னையினைத்
துள்ளி விளையாடி இன்பம் சுவைத்து மகிழ்ந்தவளைப்
பள்ளி அனுப்பிப் படித்திடச் செய்துனைப் பார்த்தவளைத்
தள்ளி நிறுத்தத் துணிந்திடும் மாந்தரைத் தள்ளுகவே!

உள்ளம் உருகி அழைத்திடும் தாயை உணர்ந்திடுவாய்
கள்ளத் தனமறி யாத மனத்தினைக் காத்திடுவாய்
அள்ளி யெடுத்தே அனுதினம் தந்திடும் அன்புமழை
பள்ளிக் குழந்தை அடையும் பரவசம் பாய்சிடுமே!

தங்க மனத்தில் இடமே கொடுத்த தளிர்முகமே!
எங்கும் தெரியும் வடிவென ஆகி இருப்பவளே!
பொங்கும் இனிமை புதுநல் வரவாய் அமைந்ததுவே!
மங்கா ஒளியை மகிழ்வுடன் வார்க்கும் தமிழ்மகளே!

கட்டளைக் கலித்துறை


25 comments:

 1. மனதைக்கலங்க வைத்திடும் படமும், அதற்கேற்ற கவிதையும் சிறப்பாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளன. பகிர்வுக்குப்பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 2. மாந்தருக்கு மாந்தரே எதிரி என்ன சொல்ல
  இந்த கொடுமையையும் மடமையையும்

  தனக்கும் இந்நிலை நேர்ந்தால் என்னாகுமென்றே
  எண்ணாத கூட்டமொன்று ஏராளமான வீட்டிலுண்டு

  ஈரமில்லா நெஞ்சம் கொண்ட இவர்களை ஏற்காதே
  ஒருபோதும் இவ்வுலகம் பெண்ணினமென்று

  இனமே இனத்திற்கு எதிரியாய் இருப்பதோ
  அய்யஹோ என்று மாறும் இந்த அவலமிங்கே...

  தன்னை பெற்றதாய் உசத்தியாய் தெரியும்போது
  தன் கணவனை பெற்றதாய் எப்படி மட்டமாகி போனார்

  ஓரவஞ்சனை என்பது இதுதானோ இல்லை
  வஞ்சனையின் மொத்த உருவமும் இவள்தானோ...

  யோசியுங்கள் மருமகள்களே நீங்களும் ஓர்நாள்
  ஓர் பெண்ணால் இதை அனுபவிக்க நேரும்

  புகுந்தவீட்டு தாயை உடன்வைத்து வாழ நினையுங்கள்
  கணவனே மறுத்தாலும் நீங்கள் கவனியுங்கள்....

  அழகாய் சொன்னீர்கள் தென்றலே இங்கு இதமாய்
  எல்லோரும் மாறினால் குளிருமே பெற்றவயிரும்...

  மனதார வாழ்த்துகிறேன் தென்றலாகிய உங்களை
  தாய்மார்களின் உள்ளமும் வாழ்த்துமே தங்களை...

  ReplyDelete
  Replies
  1. எவரிடத்தும் விட்டுக்கொடுப்பதும் சகிப்புத்தன்மையும் இல்லையென்றால் பிரிவு தான் முடிவு.
   தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 3. நெஞ்சாரப் பாடிய கவிதை! தமிழ் மணத்தில் மீண்டும் முன்னணிக்கு வர வாழ்த்துக்கள்!
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 4. அரிதான சந்தங்களுக்கு கவிதை எழுதுவது குறைந்து வருகிற இந்த காலத்தில் கட்டளைக் கலித்துறை போன்ற செய்யுள் நடையில் கவிதை புனைவது சிரமமே. அதை நீங்கள் சிறப்பாக செய்து வருகிறீர்கள்.

  த ம 4

  ReplyDelete
  Replies
  1. என் செயல் இதில் எதுவுமில்லை. என் ஆசானின் ஊக்கமே காரணம். வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க.

   Delete
 5. செய்யுள் நடையில் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 6. வணக்கம்
  சகோதரி

  மனதை கனக்கவைத்த வரிகள்... படங்களும் மனதை அள்ளிச்சென்றது பகிர்வுக்கு நன்றி த.ம5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 7. தாயை கண்டு தமிழ் படித்தேன் மனம் கணத்ததே...
  தமிழ் மணம் 6 மனமே 6

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. முதியோர் இல்லங்கள் பெருகி வருவதும் வியாபாரம் ஆகிவிட்டது இந்த காலத்தில்.

   Delete
 8. கற்றறிந்தார் ஏத்தும் கலி,
  அருமையான கவி,
  மனம் கனக்கிறது,
  இந்நிலை என்று மாறும்,
  மனம் மாறும் போது,,,,,,,,,,,,,,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மனங்களில் மாற்றம் வந்தால் ஒழிய மாற்றம் இல்லைங்க. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

   Delete
 9. மனதை கலங்கச் செய்திடும் பதிவு சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 10. எழுத்தெண்ணிப் பாடுதல் எளிதென்று
  உங்களின் முயற்சியின் ஆழம் அறிவேன்.

  தொடருங்கள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முயற்சியின் ஆழம் எனதன்று ஆசானுடையது. எனக்கு கற்றுத்தரும் அளவிற்கு அவருக்கு பொறுமை இருக்கிறதே...

   Delete
 11. Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 12. அருமையான கவிதை.

  ReplyDelete

 13. வணக்கம்!

  மூன்று கவிதைகள் மூளைக்குள் இன்பத்தை
  ஊன்றும் கவிதைகள் ஓது!

  ReplyDelete
 14. கட்டளைக் கலித்துறையில் அழகாய் மனந்தொட்ட கவி வரிகள்.. சந்தமும் கவிதைநயமும் ரசிக்கவும் சிந்திக்கவும் செய்யும் ஒருமித்த அழகு. பாராட்டுகள் சசி.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி