Ads 468x60px

Thursday, April 2, 2015

கட்டுக் கடங்கா ஆசையிது !

 
கட்டுக் கடங்கா ஆசையிது
       கதைத்து மகிழும் நேரமிது
தட்டிக் கைகள் பாராட்டும்
       தாளம் போட்டுச் சீராட்டும்
கட்டித் தங்கம் போலிருக்கும்
       கரும்புச் சுவையாய் இனித்திருக்கும்
எட்டிப் போக நினைத்தவரை
        எளிதாய் கவரும் விந்தையிது!


என்ன என்று கேட்போரே
         என்னில் இருக்கும் அதுவேதான்
கன்னித் தமிழே பெயராகும்
         கருவாய் இருக்கும் கவியாகும்
மின்னிச் சிரிக்கும் மின்னலென
          வனப்பைக் கொடுக்கும் வள்ளலென!
கன்னம் மிளிரப் பேசுமங்கை
          கனவில் மிதப்பேன் நாளுமிங்கே!


கருத்தில் நுழைந்த காரிகையைக்
         கண்ணாய்ப் போற்றி வணங்கிடுவேன்!
மரமாய்க் காக்கும் நிழலுமவள்
        மனத்தை மயக்கும் மாதுமவள்
உரமாய் இருந்தே  உழவினிலே
        உழைத்தக் களைப்பை தீர்த்திடுவாள்!
தரமாய் நெஞ்சில் உயர்ந்தவளைத்
        தமிழால் வணங்கிப் போற்றிடுவேன்.

வளைந்து போகும் நதியழகை
          மனத்தே காணச் செய்திடுவாள்
களைப்பு நீக்கும் கலையதனைக்
          கற்ற ஆசான் பெருந்தகையே
வளமே காணச் செய்திடுவாள்
           வாழ்வில் எழிலைக் கூட்டிடுவாள்!
களஞ்சேர் நெல்லைச் சேர்த்திடுவோர்
           கவலை நீக்கும் கலையழகே!

எண்ணக் கலவை எடுத்தியம்ப
          எழிலாய்த் தோன்றும் வடிவமிது!
கண்ணில் காணும் காட்சிகளைக்
          கவிதை வடிவில் ஏடேறும்!
மண்ணில் பிறந்த மாந்தரினம்
            வீரம் காதல் வெளிப்படுத்த
பண்ணாய் இசைத்துப் பாடிடுவோம்
            பரவும் தமிழர் பண்பாடே!

29 comments:

 1. பொருத்தமான படமும், தலைப்பும், கவிதையும் அழகோ அழகு !

  கட்டுக் கடங்கா ஆசையுடன் படித்து மகிழ முடிந்தது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா! தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 2. அருமை தொடரட்டும் தங்களது ஆசைகள் கட்டுகடங்காமல்....
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. தொடர்கிறேன் தங்கள் வாழ்த்துகளுடன் நன்றிங்க சகோ.

   Delete
 3. Replies
  1. வருக! வருக! மீண்டும் இணையம் வந்ததில் மிக்க மகிழ்ச்சிங்க.

   Delete
 4. கவிதை கட்டுக்கடங்காமலே இருக்கட்டும்!
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

   Delete
 5. அருமை
  சகோதரியாரே அருமை
  வீரம் காதல் வெளிப்படுத்த
  பண்ணாய் இசைத்துப் பாடிடுவோம்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 6. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

   Delete
 7. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 8. வணக்கம்
  சகோதரி

  கவிதையின்வரிகள் மிக அழகு வரிகளை இரசித்து படித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 9. எழிலாய்த் தோன்றும் வரிகள் அனைத்தும் அழகு சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 10. கவி நன்று தோழி..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க

   Delete
 11. தமிழைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் உங்களின் ஆசை கட்டுக்கடங்காத ஆசை போல் தோன்றவில்லையே :))
  வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வருக! வணக்கம் சகோ. என்ன தமிழை நான் கட்டுக்குள் வைத்திருக்கிறேனா ? ஏன் இப்படி எல்லாம் தமிழின் விரல் பிடித்து நடக்கும் மழலை நான்.

   Delete

 12. வணக்கம்!

  கட்டுக் கடங்கா ஆசையுடன்
    கவிதை புனைந்தார் கவி.தென்றல்!
  கொட்டுக் கடங்காப் பிள்ளைகளின்  
    கோலம் இன்றி நடக்கின்றார்!
  பட்டுக் கடங்காப் பளபளப்பு!
    பகைவர்க் கடங்காத் துடிதுடிப்பு!
  மொட்டுக் கடங்கா மணத்தைப்போல்
    முகிழ்க்கும் ஆற்றல் வாழியவே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தினைப் பெற்றே வளர்ந்திடுவேன் நாளுமே
   வாழ்த்திடும் ஆசான் வனப்பு.

   வணக்கம்! ஐயா தங்கள் வருகையும் அழகிய விருத்தப்பாவினைக்கண்டும் உளம்மகிழ்ந்தேன். தங்களுக்கு மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 13. //கண்ணில் காணும் காட்சிகளைக்

  கவிதை வடிவில் ஏடேறும்!

  மண்ணில் பிறந்த மாந்தரினம்

  வீரம் காதல் வெளிப்படுத்த

  பண்ணாய் இசைத்துப் பாடிடுவோம்
  பரவும் தமிழர் பண்பாடே!//

  இரசித்தேன்! அருமை! தொடர்க!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வருக! வெகுநாட்கள் ஆகிவிட்டதே தங்களைப் பார்த்து.

   Delete
 14. கவிதை, கவிதைக்கான கரு, எழுதியுள்ள பாங்கு அனைத்துமே அருமை.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி