Ads 468x60px

Monday, March 9, 2015

வாடி வதங்கும் பெண்ணுலகு! வளமை காணல் எந்நாளோ?

குட்டிப் பெண்ணை ஒடுக்கிடவே
               கூட்டம் சுற்றும் அவனியிலே!
சட்டிப் பானை உலகமெனச்
               சட்டம் பேசும் வழக்குண்டு!
தட்டிப் பறிக்க உரிமையினைத்
            தாரம் என்றே விலங்கிட்டு
எட்டி உதைக்கும் கொடுமையினை
           எதிர்த்து வாழ்தல் எந்நாளோ ?

அடைத்து வைத்தே பழக்கிடுவார்
         அறிவாய் உள்ள பெண்ணினத்தை!
நடையே பழகும் பிள்ளையையும்
        நயவஞ் சகரும் தொடர்ந்திடுவார்!
உடைக்குள் மறைத்த மேனியினை
      உற்று நோக்கும் கயவருக்குத்
தடையும் உண்டோ? இக்கொடுமை
      தாக்கி அழித்தல் எந்நாளோ?

அச்சம் நாணம் மடமையென
          அடிமைத் தனத்தைப் பழக்கிவிட்டே
இச்சை கொண்ட ஆண்வர்க்கம்
         இங்கே நம்மை ஏய்த்திடுவார்!
பிச்சை கேட்டே பெண்ணினமும்
          பிணியால் வாடிக் கிடக்கிறது.
எச்சில் பிழைப்பு? புவிகொண்ட
         இன்னல் ஒழித்தல் எந்நாளோ?

வற்றா நதிக்கும் பெண்பெயரே
        மானைத் துரத்தும் புலிவேடம்!
விற்கும் பொருளின் விளம்பரத்தும்
      வேடக் காட்சி பெண்ணாகும்!
மற்ற வர்க்கம் எதற்குமிந்த
       மாசு உண்டோ எண்ணுங்கள்?
பெற்று வந்த வரமிதுவோ?
       பிழைகள் அழித்தல் எந்நாளோ?

கூடிப் பறக்கும் பறவையினம்
        கொடுமை செய்யாப் பெண்ணுறவை!
நாடி வந்த இணையிடமே
        நகையும் பணமும் கேட்டிடுமோ?
தேடி வந்த துணையிடமே
         தேவை நாடும் ஆணினமே!
வாடி வதங்கும் பெண்ணுலகு
        வளமை காணல் எந்நாளோ?

எண்ணிக் களித்திங்கே ஏற்றங்கள் தந்திடுவாய்!
கண்ணுக் கினிமையைக் கார்முகிலாய் ஈந்திடுவாய்!
என்னுயிர்த் தாய்மொழியே! இன்பத்தின் ஊற்றாகி
இன்னல் தடுப்பாய் இசைந்து!
      
        

44 comments:

 1. தாய்மொழி! இன்பத்தின் ஊற்றாகி
  எண்ணிக் களித்திங்கே ஏற்றங்கள் தந்திடும்!
  சகோதரியாரே
  அருமை
  நன்றி
  தம 2

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோதரருக்கு.

   Delete
 2. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 3. தென்றலில் ஒருகவிதை புயலாக அடிக்கிறது அருமை அருமை பாராட்டுக்கள் சசிகலா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 4. பாடையில் போகும்போதும் பெண்ணுக்கு
  பழுதுண்டு என்பார்கள் முன்னோர்கள் !

  பெண்களின் இயல்பை நாமென்ன சொல்ல
  மென்மையே சற்று வன்மையாய் மாறனும்

  தேவைக்கேற்ப பூவும் முள்ளாய் மாறலாம்
  பொறுமைக்கும் மதுரைக்கும் பெண்தானே !

  துணிச்சலை கற்றே கல்வியோடு தேரனும்
  பயத்தை புதைத்தே வீரத்தை விதைக்கவேண்டுமே

  எத்தனையோ எண்ணற்ற பெண்கள் பார்க்காத
  வேலையே இல்லை என்றே சொல்லலாம்...

  தாய்மை எனும் தனிச்சிறப்பால் உயர்ந்தே
  நிற்கும் பெண்மையை போற்றுவோமே...

  தென்றலாய் தவழ்ந்தே பெண்ணின் புகழை
  போற்றும் சசி கலாவே வாழ்க வளமோடு...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 5. வணக்கம்
  சகோதரி
  அழகிய கற்பனை நிறைந்த வரிகள் கண்டு மகிழ்ந் தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

   Delete
 6. அருமையான ஆழமான கருத்து பொதிந்த கவிதை கவிஞரே.... வாழ்த்துகள்
  தமிழ் மணம் 5
  போலீஸ் பதிவு இரண்டாவது போட்டாச்சு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 7. மிக அருமை தோழி! கனல் பறக்கும் கவிதை.
  //உடைக்குள் மறைக்கும் ...// உண்மை , உள்ளத்தில் கயமை வைத்து
  உடைமேல் பழி போடுவார்,
  கள்ளத்தால் பாதகம் செய்வார்
  உடைத்திடு தோழி வெகுண்டு"

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் தோழி. எதைச் சொல்லியாவது பெண்கள் மீது பழி போடுவதிலேயே இருப்பார்கள்.

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. ‘அச்சம் நாணம் மடமையெனும்
  .........அடிமைத் தனத்தை’ உன்பாட்டில்....
  உச்சிக் குடுமி பிடித்தபடி
  ..........உலுக்கி விட்டாய்! மிகஅருமை!
  ‘நாடி வந்த இணையிடமே
  ..........நகையும் பணமும் கேட்டிடுமோ?
  தேடி வந்த துணையிடமே
  .........தேவை நாடும் ஆணினமே!’
  போலும் வரிகள் மிகஅழகு!
  .........புரியும் நடையும் மிகஅருமை!
  மேலும் குறையாய் நினையாதே!
  .........மிகவும் சிலவாம் திருத்தங்கள்,
  (1)“மாசு உண்டோ“ என்பதனை
  .........மாசும் உண்டோ எனில்அழகாம்,
  (2)பறவை இனமாய் வந்ததையே
  .........பறவை இனங்கள் எனில்சரியாம்.
  வரவர உன்றன் கவிதைகளில்
  .........வளமார் சொல்லும் தமிழ்மரபும்
  பெருகிப் பொங்கி வருகுதம்மா!
  .........பெருமை யோடு வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா. திருத்தங்களை கண்டு உணர்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க அண்ணா.

   Delete
 10. Replies
  1. தமிழ் மண ஓட்டிற்கும் நன்றிங்க அண்ணா.

   Delete
 11. முத்துநிலவன் அய்யாவே பாராட்டிவிட்ட பின் நானென்ன சொல்ல கவிஞரே?
  அதுவும் அழகான அறுசீர் விருத்தத்தில்.......!!!


  அற்பப் புழுவெனப் பெண்ணை மிதித்த ஆண்டைகள் காலமெலாம் - பழங்
    கற்பனை, செத்த கிழக்கதை என்று காரியுமிழ் திறத்தீர் - உம்
  சொற்களில் நல்லறச் சீற்றத்தின் செந்தழல் சாட்டை விளாசல்களி்ல் - மனப்
    புற்றி லுறங்குமா ணாதிக்கப் பாம்புகள் முற்று மழிந்திடட்டும்!!

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சகோ ஒரு வேண்டுகோள் கவிஞரே என்றெல்லாம் எனை அழைக்க வேண்டாம். அந்த தகுதி எனக்கு இல்லை.
   தங்களைப் போன்று இலக்கண இலக்கியத்தில் இன்னும் நான் கற்க வேண்டியது கடலளவு இருக்கிறது. ஆசானின் அருளினாலும் தங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் வாழ்த்துக்களாலும் வளர்கிறேன்.

   Delete
 12. அருமை. பாராட்டுகள் சகோ.

  விலங்கிட்டுத்
  எட்டி - இங்கே வார்த்தை எதும் விடுபட்டுவிட்டதா? இல்லை “த்” அதிகமாக இருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. தட்டச்சுப் பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோ. திருத்தி விட்டேன்.

   Delete
 13. பெண் நிலையை நினைத்து வருத்தத்தில் விளைந்த விருத்தம் அருமை

  ReplyDelete
  Replies
  1. உண்மையே தாங்கள் கூறியது.

   Delete
 14. வாழ்த்துவோம் மகளிரை வாருங்கள்

  அன்னையவள் கருவறையில்
  ஆண்டவன் இவளை வைப்பின்
  இவள்சிதைய பப்பாளி மருந்து
  ஈகையாய் ஜனனம் கண்டால்
  உணவாய் கள்ளிப்பால் விருந்து
  ஊர்கூடி சட்டங்கள் மகளிர்க்கு
  எதற்காய் கல்வி என்றியம்பியே
  ஏணிப்படி இவர் ஏனிப்படியறியோம்
  மகாராணியென்போம் மாசில்லா
  கண்ணின் மணியிவர் வார்த்தையிலே
  மூக்கணாங்கயிறிட்ட அடிமாடுகளாய்
  மணமுதிர்ந்த மண மாலைகளாய்
  கண்கட்டிய சண்டிக் குதிரைகளாய்
  காலமெலாம் சுமை தாங்கிகளாய்
  விற்கப்பட்ட அடிமை கோலமேந்தி.
  ஆனாலும் வாழ்த்துவோம் அன்னை
  குலம் வாழ்க வாழ்கவென்று.....
  வாட்டம் தீர்கும் நாள்மலர
  தென்றல் புயலாய் மாறி
  அச்சமகற்றி வாழவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. காலமெலாம் சுமை தாங்கிகளாய்
   விற்கப்பட்ட அடிமை கோலமேந்தி.
   ஆனாலும் வாழ்த்துவோம் அன்னை
   குலம் வாழ்க வாழ்கவென்று. பெண்கள் நிலையை சரியாகச் சொன்னீர்கள்.

   Delete
 15. கவிதை புயலாய்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

   Delete
 16. Replies
  1. வருக சகோ. நன்றியும்.

   Delete
 17. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete

 18. வணக்கம்!

  வீட்டுக் குள்ளே பாவையரைப்
    பூட்டி வைத்தே உயா்வென்பார்!
  நாட்டுக் குள்ளே நடிக்கின்ற
    நரிகள் இவர்கள்! அடர்ந்துள்ள
  காட்டுக் குள்ளே வாழ்உயிர்கள்
    காலில் கட்டுப் போட்டிடுமோ?
  ஏட்டுக் குள்ளே தன்மானம்
    இசைத்த தென்றல் வாழியவே!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 19. தன்னிலையை தான்உயர்த்த தைரியத்தை ஊட்டிய
  என்னுடைய ஆசான் இயல்பு.
  வணங்கித் தொடர்கிறேன் ஐயா.

  ReplyDelete
 20. தென்றல் புயலாகிப் போனதோ!!?? அருமை.....சீரிப் பாய்ந்துள்ளீர்கள் முழுவதும் ஏற்றுக் கொள்கின்றோம்....பெண்கள் தினம் என்பதே தேவையில்லை. எல்லா நாட்களுமே பெண்கள் தினம்தான். ஆணும் பெண்ணும் சமமே. பிரித்துப் பார்ப்பதால் தான் இந்த நிலைமை. அருமை....

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள். ஆண் பெண் சமம் என்ற நிலை வந்தால் தான் பெண்ணடிமை போகும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

   Delete
 21. அருமைசகோதரி தங்களின் நூல் வெளியீட்டுவ்ழா காணொளி
  மிக அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றியும்.

   Delete
 22. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!

  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,

  தங்களது
  தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!

  வருக!
  வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
  கருத்தினை தருக!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 23. பெண்ணினத்தின் இன்றைய நிலையை
  இதை விட துல்லியமாக, தெளிவாக,
  கயவர் மனமும் கலங்கிடும் அளவுக்குச்
  சொல்லிவிட இயலுமோ !!!

  இதைப் பாடி இந்த கவிதைக்கு
  கவிதையின் நுட்பொருளுக்கு யான்
  நன்றி கூறுவேன்.

  சற்று நேரத்தில் எனது வலையில் கேட்கலாம்.
  சுப்பு தாத்தா
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி