Ads 468x60px

Friday, March 20, 2015

காதல் பருவமதில் !


பார்த்த நாளாய்த் தூக்கம் இல்லை
              பாவை நெஞ்சினிலே!
வார்த்தை இல்லா மௌன யுத்தம்
            மனதில் நடக்கிறதே!
கார்கா லத்து மேகம் போலே
              கனவில் மிதக்கின்றாள்!
போர்வை கொண்டு காதல் நினைவைப்
             போர்த்தப் பார்க்கின்றாள்.

சின்னச் சிட்டாய்ச் சிரிக்கும் மொட்டாய்த்
                திரிந்த இளமங்கை!
கன்னல் கவியில் கலந்து நாளும்
                காதல் புரிகின்றாள்!
மின்னல் பார்வை மேனி தீண்ட
               மீட்டும் இசையினிலே!
இன்னல் தீண்டா உலகம் இதுவே
               என்றே சொல்கின்றாள்.

இனிக்கும் காதல் தவிக்கும் தனிமை
               இவளுள் வந்ததுவோ?
பனியில் நனைந்த மலரைப் போலே
               பார்க்க இனித்ததுவோ?
கனியின் சாறாய்க் கவனம் ஈர்த்த
               காதல் பருவமதில்
நனியும் ஆவல் நல்கும் சுவையும்
                நாணம் பயிற்றிடுமே!

32 comments:


  1. வணக்கம்!

    தென்றல் படைத்த செந்தேன் கவிகள்
       சிந்தை புகுந்தனவே!
    இன்றென் இதயம் இன்பக் குளத்துள்
       இறங்கிக் குளித்ததுவே!
    நன்றுன் கவிதை நடையைக் கண்டு
       நானும் வாழ்த்துகிறேன்!
    என்றும் இவைபோல் எழுதிக் குவிப்பாய்
       ஈடில் தமிழ்மகளே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.


      இன்றென் சிந்தை இனிக்கும் விதமாய்
      இட்டீர் வாழ்த்தினையே!
      மன்றம் நிறைய! மகிழ்ந்து பறந்து!
      விடுத்தப் பாராட்டும்!
      நன்றே எனவும் நாவும் சொல்ல
      நன்றி உரைக்கின்றேன்!
      என்றும் தமிழே என்னிள் இருக்க
      இயக்கும் ஆசானே!

      தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.

      Delete
  2. வழக்கம் போல மிக அருமையான கவிதை....பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  3. அழகிய கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  4. நாளும் தென்றல் நற்றமிழ் வீசி
    நாடி வந்திடவே
    ஆளும் இன்பம் அலை கடலாக
    அன்பைத் தந்திடவே
    தாளில் அணிந்த தண்டை ஆகும்
    தமிழாம் அன்னைக்கு
    தோளில் விழுந்த மாலை மணமாய்
    தொடரத் தந்திடுமா!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வடிவில் அளித்த வாழ்த்து
      அணிந்து மகிழ்வேனே!
      என்றன் வளர்ச்சி கண்டு மகிழ்ந்து
      இன்பம் கொண்டதனால்!
      என்றும் வணங்கி வாழ்த்தைப் பெறுவேன்
      இனிக்கும் செந்தமிழில்!
      கன்றின் களிப்பாய் துள்ளிக் குதித்தே
      கருத்தும் இனிக்கிறதே!
      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

      Delete
  5. இன்னல் தீண்டா உலகம் இதுவே
    என்றே சொல்கின்றாள்.//

    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  6. நெஞ்சக் கூட்டில் கொஞ்சும் தேனீ
       நினைவை நிறைக்கிறது! - மனப்
    பஞ்சில் காக்கும் நெருப்பாய் உள்ளே
       பற்றி எரிகிறது! - இனி
    எஞ்சும் காலம் எதிலும் மோகம்
       இன்றிக் கழிகிறது! - கவி
    செஞ்சொல் தென்றல் செதுக்கக் கண்டு
       சிந்தை மகிழ்கிறது.

    தமிழ்ச்சிந்தை மகிழ்கிறது!!!!

    அருமை சகோ!

    தொடருங்கள்...!

    தம கூடுதல் 1
       
       

    ReplyDelete
    Replies

    1. அழகுத் தமிழுக்கு அழகை சேர்க்கும்
      அன்பு வாழ்த்திதுவே!
      பழகும் எனக்கு பகிர்ந்த வாழ்த்தில்
      பறக்கும் எந்நெஞ்சே!
      கழகம் பலவும் கண்டு களித்த
      கன்னித் தமிழ்மொழியில்!
      வழங்கும் வாழ்த்து வளமை சேர்க்கும்
      வளமாய்த் தந்திடுக!
      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

      Delete
  7. அருமை
    அருமை
    சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

      Delete
  8. மின்னல் பார்வை மேனி தீண்ட
    மீட்டும் இசையினிலே
    இன்னல் தீண்டா உலகம் இதுவே
    என்றே சொல்கின்றாள்.

    அருமை, அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. மறவாமல் மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றிங்க சகோ.

      Delete
  9. அருமை... அருமை... ரசித்தேன் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருக ...வருக சகோ. நன்றியும்.

      Delete
  10. ரசனை மிக்க வரிகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ரசனை மிக்க வரிகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இனியும் வேண்டாம் பொறுமை
    இனிதே கடக்கும் இனிமை

    ReplyDelete
  13. அன்புள்ள சகோதரி,

    காதல் பருவமதில் பூத்த கவிதை

    கண்டு வாசனை நுகர்ந்து மகிழ்கின்றேன்.

    நன்றி.
    த.ம. 9.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. இன்னல் தீண்டா உலகம் இதுவே
    என்றா சொல்கின்றாய்
    கன்னிப் பெண்ணின் உள்ளம் தன்னை
    காட்டிச் செல்கின்றாய்
    எண்ணில் அடங்கா வார்த்தை ஜாலம்
    போட்டே மயக்குகின்றாய்
    கன்னித் தமிழில் தேனைப் போல
    தெவிட்டாது மிழ்கின்றாய்

    அருமை அருமை தோழி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி தங்கள் வருகையும் அழகான வாழ்த்துப்பாவும் கண்டு உளமகிழ்ந்தேன். மிக்க நன்றியும் தோழி.

      Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி