Ads 468x60px

Saturday, March 14, 2015

அடைகாத்த சொற்குவியல்! (ஏக்கம் நூறு)

புதுக்கோட்டையில்  பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்திய இலக்கியத்  திருவிழாவில் எங்கள் ஆசான் கவிஞர் திரு.கி.பாரதிதாசன் ஐயா அவர்களின் ஏக்கம் நூறு மற்றும் கனிவிருத்தம் ஆகிய நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.

ஐயா சென்னை வந்திருந்த போது எனக்கும் நூல்களை அன்புடன் வழங்கினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுப் படித்து மகிழும் நேரத்தில் என் எண்ணத்தே எழுந்த உணர்வுகளை இங்குத் தங்களுடன் பகிர்ந்துமகிழ்கிறேன்.

1.
ஏக்கமதைப் பாட்டாக ஈந்துவந்தீர்! நற்காதல்
 ஆக்கமதைப் போற்றும் அகம்!

2..
வெண்பட்டுக் காதலியை விந்தைத் தமிழாலே
பண்கொண்டு பாடிய பாட்டு!

3.
கன்னியவள் ஏக்கத்தைக் கன்னல் தமிழாலே!
பின்னியவர் காண்கவே பீடு!

4.
அடைகாத்த சொற்குவியல்! ஆரமுதம்! உண்டு
மடைதிறந்து பாடும் மனம்!

5.
கற்கண்டாய் ஈந்த கவிதைகள் அத்தனையும்
விற்கொண்டு  தாக்கும் விரைந்து!

6.
பாடிய பாட்டெலாம் பாவைமுகம் வந்திங்குச்
சூடிய காதலின் சொத்து!

7.
துன்பத்தை ஓட்டும்! சுடர்கவி அத்தனையும்
இன்பத்தைக் கூட்டும் இசைத்து!

8.
கண்பட்டுப் போகுமிந்தக் காவியக் காரிகைக்கு
மண்ணெடுத்துச் சுற்றல் மரபு!

9.
மண்ணுலகம் போற்றும்! வளர்கவி பாவலரைப்
பண்ணுலகம் போற்றும் பணிந்து!

10.
கவிஞர் கி.பாரதி தாசன் கவிநூல்
புவியில் பெறுமே புகழ்!

   

28 comments:

 1. அருமை அருமை சிந்தனைக்குறிய வரிகள் வாழ்த்துகள்
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

   Delete
 2. முத்து வரிகள்..கொடுத்து வைத்த ஆசான்...

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   முத்துக் கவிபாடும் முத்தமிழ்த் தென்றலைச்
   சொத்தெனச் சொல்லிச் சுடர்கின்றேன்! - இத்தரையில்
   என்போல் கவிபாடி இன்றமிழ் காத்திடுவார்!
   பொன்போல் புகழிற் பொலிந்து!

   கவிஞா் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
  2. வருக மோகன்ஜி அவர்களே. நான் தான் இப்படி ஒரு ஆசான் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

   ஊக்கம் அளித்து உளமாற வாழ்த்துமிந்த
   ஆக்கம் அளித்த அருள்.
   தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க ஐயா.

   Delete

 3. வணக்கம்!

  என்ஏக்கம் நுாறினை எண்ணிப் படித்தழகாய்ப்
  பொன்ஆக்கம் என்றே புகழ்ந்துள்ளீர்! - இன்பூக்கும்
  அன்னைத் தமிழின் அருள்என்பேன்! மின்நன்றி
  தன்னை அளித்தேன் தழைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. தங்களின் அழகிய வாழ்த்து வெண்பாக்களைக் காணவே தினம் ஒரு பதிவிடலாம் போல...
   தித்திக்கும் பாட்டில் தெவிட்டாத தீந்தமிழை
   எத்திக்கும் பாடிவரும் என்ஆசான் வாழ்த்தினையே!
   ஏற்று மகிழ்கின்றேன்! என்னுயிராம் தாய்மொழியை!
   கற்றுப் படைப்பேன் கவி!

   Delete
  2. இப்படியான மாணவி ஒருவரைப் பெற்ற கவிஞர் அய்யாவுக்கு என் வணக்கத்தையும், கவித்தங்கைக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

   Delete
  3. அண்ணா வாங்க. தங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க அண்ணா.

   Delete
 4. Nanru makilchy....
  Eruvarukkum eniya vaalththu.

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. மிக்க நன்றியும்.

   Delete
 5. வணக்கம்
  சகோதரி

  ஏக்கம் நூறு ஏட்டில் எழுதிய வரிகள்
  உலகம் உய்யும் வரிகள்
  செப்பிய வரிகளில் சிந்தை குளிர்ந்தது..

  சிந்தனை வரிகள் அற்புதம் பகிர்வுக்கு நன்றி த.ம4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. அகமகிழ வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிங்க சகோ.

   Delete
 6. பாமாலை குறள் பத்தும் பாரதிதாசருக்கு
  பூமாலை ஆகும் புகழே! அருமை மகளே!

  ReplyDelete
  Replies
  1. ஐயா தங்கள் வருகையும் வளமான வாழ்த்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 7. முத்தான இக்கவிகள் முன்மொழியும் இன்றமிழின்
  சொத்தென்று உன்னை சுமந்து !

  அத்தனையும் அருமை சகோ
  வாழ்த்துக்கள்
  தம 6

  ReplyDelete
  Replies
  1. பாட்டரசர் ஊக்கமுடன் பாவடிக்க ஏதுகுறை
   ஏட்டினில் பாட்டை எழுது.

   வருக சகோ. வாழ்த்தினை கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

   Delete
 8. ஏழு சீர்களுடன்... அருமை சகோதரி அருமை...

  ReplyDelete
  Replies
  1. வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

   Delete
 9. மரபின் நுணுக்கங்கள் அனைத்தும் அத்துப்படி . பாவைககள் கற்க அவரது பாக்கள் மிக சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆசானை போற்றிய குறட்பாக்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள். ஐயாவின் பாவகைகளை படித்தாலே பாயிற்றப் பழகலாம்.

   Delete
 10. அருமை சகோதரியாரே
  அருமை

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

   Delete
 11. ஆசானின் நூலிற்கு காணிக்கையாய் இனிய பாக்கள்! வாழ்த்துகள் தோழி

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி தோழி.

   Delete
 12. உங்கள் குறள் வரிகள் அருமை...
  வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி