Ads 468x60px

Thursday, March 12, 2015

பெண்ணே உன்னைவிட உயர்வில்லை!


பெண்ணுரிமை எதுவென்று பெருங்கேள்வி கேட்கின்றேன்
                                                                          பதிலோ இங்குக்
கண்மூடிச் சொல்லிடுவார் கைதிநிலை நல்லதென்று
                                                                          தகுமோ சொல்வீர்?
முன்னோர்கள் சதிசெய்தார்! முன்னேறத் தடைபோட்டார்!
                                                                          முகமே கோண!
எண்எழுத்தில் வாழுமந்தப் பெண்ணுரிமை என்றெண்ணி
                                                                             ஏங்கும் நெஞ்சே.

அடங்குதலே முறையென்பார் ஆட்டுவித்தே பழக்கிடுவார்
                                                                                         அன்றும் இன்றும்!
தடைசொல்லித் தடுத்தேதான் தகர்த்திடுவார் முயற்சிகளைச்
                                                                                          சிறைக்குள் பூட்டி!
மடைதிறந்த வெள்ளமென மாண்புறவே துணிந்திடவாய்
                                                                                             மகளே நீயும்!
துடுப்பாகத் தைரியத்தைத் துணையாக ஏற்றிடுவாய்!
                                                                                              துன்பம் நீங்கும்!


பொட்டுவைத்துப் பூவுமிட்டுக் கொலுபொம்மை என்றேதான்
                                                                                           பெண்ணை வைத்தார்!
கட்டிவைத்து முடக்குமிந்தத் தலைமுறையை எரித்திடவே
                                                                                          கனலை ஏற்று!
கொட்டிநமைக் குனியவைத்துக் கொண்டாட்டம் போடுமிந்தக்
                                                                                            கூட்டம் தன்னைக்
கட்டிவைத்துக் கடமையினை எடுத்துரைத்துக் கண்ணியத்தைக்
                                                                                            காத்து நிற்பாய்!

அதிகாலை எழுந்தேதான் அடுக்களையில் நாள்தோறும்
                                                                                            ஆடும் ஆட்டம்!
பதிவிரதை பாங்கென்றே ஏட்டினிலே எழுதிவைத்தார்
                                                                                            பாராய் பெண்ணே!
சதியாலே நமைச்சாய்த்தார்! விதியென்று வீட்டினிலே
                                                                                           சாய்தல் ஏனோ?
மதிகொண்டு வென்றிடுவாய்! மடமையினைப் போக்கிடுவாய்!
                                                                                           மலர்ச்சி காண!


அன்புகொண்டு வாழ்ந்திடவும் ஆணவத்தை ஒடுக்கிடவும்
                                                                                          அறமே பாடு!
தன்னிலையை உணர்த்திடவும் தன்மானம் காத்திடவும்
                                                                                           தமிழைச் சூடு!
என்னயில்லை நம்மிடையே? எட்டிடுவாய் இமயத்தை
                                                                                           இனிமை யோடு!
உன்னைவிட உயர்வில்லை! ஓங்கட்டும் நம்பிக்கை!
                                                                                           ஒளிரும் நாடு!

22 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது சொல்லிய விதமும் முடித்த விதமும் வெகு சிறப்பு
    பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  3. Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க தோழி.

      Delete

  4. வணக்கம்!

    பெண்ணுரிமை பேசுகின்ற பெருங்கவிபோல் இப்பாடல்
             பெருமை சூடும்!
    மண்ணுரிமை வீசுகின்ற மாண்புடைய கருத்துக்கள்
             மணத்தை நல்கும்!
    விண்ணுரிமை எல்லைவரை வியன்தமிழை ஒலிக்கின்ற
             விந்தைப் பெண்ணே!
    தண்ணுரிமை தான்பெற்றுத் தழைக்கட்டும் இவ்வுலகு
             சந்தம் போன்றே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. சத்தான தங்கள் வாழ்த்தை அகமகிழ்ந்து ஏற்று வணங்கித் தொடர்கிறேன் ஐயா.

      Delete
  5. ஆத்தாடி ஆத்தா பயமாவுல இருக்கு பாரதியின் புதுமைப்பெண்தான் போங்க...
    ஸூப்பர் எழுச்சிமிகு வரிக(ல்)ள் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

      Delete
  6. எழுச்சிமிகு வரிகண்டேன் இதயம் பொங்க..!

    அருமை சகோ வாழ்த்துக்கள்
    தம 5

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

      Delete
  7. ஒவ்வொரு வரியும் அருமை தோழி, வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

      Delete
  8. எழுச்சியுடன் சீர்மிகு வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

      Delete
  9. எழுச்சி மிகு வரிகள் கண்டு உள்ளம் பூரித்து நிற்கிறது தோழி !
    வாழ்த்துக்கள் மென் மேலும் தங்களின் ஆக்கத் திறன் ஓங்குக
    உலகில் புகழின் உச்சி வரைக்கும் .த .ம.7

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி. தங்கள் வருகையும் உற்சாகம் தரும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்.

      Delete
  10. நான்கு காய், இருமா அறுசீர்விருத்தம், பாரதிதாசனின் தமிழியக்கத்தை நினைவூட்டுகிறது சசி. அழகான சொற்கள், ஆழ்ந்த கருத்துகள். அறுசீர்க் கவிதைவடிவம் வலைப்பக்க வடிவில் சிதைந்து விட்டதைக் கவனித்து மாற்றக்கூடாதா? மரபுக்கவிதைக்கு வடிவமும் முக்கியமல்லவா? நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருக அண்ணா. வடிவமைப்பில் பலமுறை முயன்று தோற்றுவிட்டேன். மன்னிக்கவும்.

      Delete
  11. மதிகொண்டு வென்றிடுவாய்! மடமையினைப் போக்கிடுவாய்! மலர்ச்சி காண!

    அருமை சசி சிறப்பான நாளில் நல்லதொரு படைப்பு

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் நாடுவது மலர்ச்சியைத்தானே.. நன்றிங்க.

      Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி