Ads 468x60px

Monday, January 26, 2015

மனசெல்லாம் மத்தாப்பு !

 
கட்டான கட்டழகி
கரும்சாந்து பொட்டழகி
கண்ணசைச்சே எனைதுரத்தும்
கருமேக ஓட்டக்காரி.
தோப்போரம் காத்திருக்கேன்
தோரணமே நீ வாடி...
பேசாம பேசுமந்த
பெருவிழிய காட்டேன்டி...
ஆத்தோரம் காத்திருக்கேன்
ஆரமுதே வாயேன்டி..
அழுக்கெடுக்க எம்மனச
அரைநொடியும் ஏந்தேன்டி...
மாந்தோப்பில் மறைஞ்சிருந்தேன்
மனசெல்லாம் மத்தாப்பு
மரிக்கொழுந்தா உன்வாசம்..
மடிச்சி வைச்ச நெனப்பினிலே
வீசுதடி காதல் வாசம்..
பாட்டா பாடி காத்திருப்பேன்
விழி தோட்டா கொண்டு வாயேன்டி.

10 comments:

  1. கட்டான கட்டழகியை அழகாய் வர்ணித்தே
    அழைக்கும் விதம் அற்புதமே கவித்தென்றலே

    கூப்பிடும் விதத்திலேயே தானா வந்திடுவாள்
    அப்படிவொரு பக்குவத்தை பாட்டா படிச்சதால்

    மரிக்கொழுந்து வாசம் போல் ஏதுமுண்டா உச்சமாய்
    அதனோடு ஒப்பிட்டதால் உன் மணமும் புரியுதே

    விழி எனும் தோட்டாவை கொண்டு வாயேன்
    எனையும் சுட்டுதான் போயேன் மகிழ்வாய்

    அருமையான மண்வாசனை வீசும் தென்றலாய்
    எல்லோரையும் மயங்க செய்யுதே பாராட்டுக்கள்....

    ReplyDelete
  2. கவிதை அருமை.
    குடியரசு தின நல்வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. வணக்கம்
    சகோதரி.

    அழகிய வரிகள் இரசித்துப்படித்தேன்.. பகிர்வுக்கு நன்றி.த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. உங்களின் இந்த மாதிரி கிராமத்து பாணியான கவிதைகளை படிக்கும் போது மனசு மத்தாப்பூ போல ஆகிறது பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. கட்டான கட்டழகி
    நெஞ்சைத் தொட்டுவிட்டாள் சகோதரி...

    ReplyDelete
  6. நெஞ்சைத் தொட்ட கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

  7. பாட்டாவே படிக்கலாம் போல.. கிராமத்து கவிஞர் ஆகிவிட்டீர்கள் ..

    ReplyDelete
  8. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_30.html

    ReplyDelete
  9. அருமையான கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி