Ads 468x60px

Monday, January 12, 2015

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !

இருளினை அகற்றி எங்கும்
       எழிலினைக் கொடுத்த வள்ளல்
அருவியின் ஊற்றாய் நாளும்
       அழகுசேர் பணியைச் செய்யும்
கருணையின் வடிவாய் வந்த
        கதிரவன் புகழைப் பாட
அரும்சுவை நன்னாள் தையே
         அன்பினைப் பொங்கி வாழ்க!

பூங்கிளி கொஞ்சிப் பேசும்
         புத்தொளி எங்கும் வீசும்!
மாங்குயில் கூவிப் பாடும்
        மரத்தினில் அணில்கள் ஆடும்!
தேங்கிடா நதியின் ஓட்டம்
         தேவதை அழகை ஒக்கும்!
பாங்குடன் இன்பம் நல்கும்
        படர்புகழ்த் தைநாள் வாழ்க!


சில்லெனக் குளிரை நல்கி
        சிலிர்த்திடும் காலைக் காட்சி!
மல்லிகை மணத்தைத் தேக்கி
        வழங்கிடும் தென்றல் காற்று!
மெல்லவே பறக்கும் வண்டு
         விந்தையே பறவை கூச்சல்!
செல்லவே சுரக்கும் எண்ணம்
          சுடர்ந்திடும் தைநாள் வாழ்க!

வாசலில் வண்ணக் கோலம்
        வஞ்சியர் எண்ணம் மின்னும்!
மாசதை நீக்கும் வண்ணம்
        வளந்தரும் கதிரை வாழ்த்து!
பூசணிப் பூவும் வைத்துப்
        பொன்னெனப் பொலியும் வாயில்!
வாசமாய் மனத்தை நல்க
         வந்தொளிர் தைநாள் வாழ்க!


இளங்கதிர் கிழக்கே தோன்ற
         எங்குமே எழிலே கூடும்
களமதில் நிறைந்த நெல்லும்
         களைப்பதை நீங்க வைக்கும்!
வளமதைக் கண்ட மக்கள்
         மனங்களில் பூக்கும் இன்பம்!
உளமதில் உவகை பொங்க
         உதித்துள தைநாள் வாழ்க!

44 comments:

  1. தைப் பொங்கல் பாடல் என் உள்ளத்தை
    தை தை எனக் குதிக்க வைக்கிறது.

    தாம் தோம் என சதிராட்டம் போட வைக்கிறது.
    தீம் தீம் என நடனமாட வைக்கிறது.

    ததிங்கினதோம் எனச் சலங்கை ஒலி போல்
    சப்திக்க வைக்கிறது.

    பாடட்டுமா ??

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். ஐயா. தங்கள் அனுமதிக்கு நாங்கள் தான் காத்திருக்க வேண்டும். பாடுங்கள் காத்திருக்கிறோம்.

      Delete
    2. https://www.youtube.com/watch?v=I3tfEpHLn8I
      Raag Mohanam

      Delete
    3. தாங்கள் பாடக் கேட்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  2. கரும்புதான் இனிக்கும் என்பார்கள் ஆனால் உங்கள் பொங்கல் கவிதை அதைவிட மிகவும் இன்னிகிறதே பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கரும்பு அங்கு கிடைக்குமா ? கரும்பு கிடைத்தாலும் பகிர்வில் இருப்பது போல மாட்டு வண்டிப் பயணம் போக இங்கு தான் நீங்க வரவேண்டும்.

      Delete
  3. கரும்பென இனிக்கும் பாக்கள் தந்தீர் தோழி !உங்களுக்கும்
    எங்கள் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .வாழ்க வளமுடன் .

    ReplyDelete
  4. வருக தோழி. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  6. பொங்கல் வாழ்த்தை நன்கே பாடினீர்கள்! அருமை! இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  7. பொங்கல் வாழ்த்தை நன்கே பாடினீர்கள்! அருமை! இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  8. கவிதை சுவையோ சுவை மோதகமும், அதிரசமுமாய் தித்தித்ததே...
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
    இனிப்புக்காக,,,,,, தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ. தஞ்சைக்கு பொங்கல் விழாவை இனிதே கொண்டாடுவோம்.

      Delete
  9. இளங்கதிர் கிழக்கே தோன்ற
    எங்குமே எழிலே கூடும்
    களமதில் நிறைந்த நெல்லும்
    களைப்பதை நீங்க வைக்கும்!
    வளமதைக் கண்ட மக்கள்
    மனங்களில் பூக்கும் இன்பம்!
    உளமதில் உவகை பொங்க
    உதித்துள தைநாள் வாழ்க!//
    இனிமையான பொங்கல் வாழ்த்து கவிதை.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  10. கரும்பு போன்று இனிப்பான பொங்கல் கவிதை!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  11. கரும்புப் பாடல்! விரும்பிச் சுவைத்தேன்

    ReplyDelete
  12. மிக்க மகிழ்ச்சிங்க ஐயா. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  13. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம 7

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ.

      Delete
  14. இனிக்கும் இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ.

      Delete
  15. சர்க்கரைப்பொங்கல் போல சுவையூட்டியது தங்களின் வரிகள். வாழ்த்துக்கள். தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  16. அறம் பொருள் இன்பமேந்தி மஞ்சள்'தை' வந்ததே
    ஆயிரமாயிரமாய் கொண்டுதந்து கவி'தை; பாடுதே
    இன்றுமுதல் என்னாளும் நல்வி'தை' வளருமே
    ஈடில்லாத'தை' வழங்கவந்த 'தை'யது வாழ்கவே.

    உறக்கத்'தை' உதறிவிட்டு 'நாம்'உழைப்போமே
    ஊக்கம'தை' மனமணிந்து பயணம் செய்வோமே
    எண்ணம'தை' சீர்செய்து உயர்ந்து நிற்போமே
    ஏக்கம'தை' உதறிவிட்டு ஆக்கம் காண்போமே.

    ReplyDelete
    Replies
    1. ஆக்கம் காண அருமையான வழியை தந்த வாழ்த்து. மிகவும் மகிழ்ந்தேன்.

      Delete
  17. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

      Delete
  18. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தோழி!

    //இளங்கதிர் கிழக்கே தோன்ற
    எங்குமே எழிலே கூடும்
    களமதில் நிறைந்த நெல்லும்
    களைப்பதை நீங்க வைக்கும்!// அருமையான பாடல் தோழி!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி.

      Delete
  19. சுப்புத் தாத்தா பாடியதையும் கேட்டுவிட்டேன்...உங்கள் இனிய கவிதை இனிய பாடலாக!

    ReplyDelete
    Replies
    1. இருவருக்கும் எனது நன்றி.

      Delete
  20. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

      Delete
  21. மிக இனிமையான கவிதை. சுப்பு தாத்தா பாடியதையும் ரசித்தேன். நன்றியும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து மகிழ்ந்ததும் வாழ்த்தியதும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete

  22. வணக்கம்!

    இனிய தமிழர் திருநாளின்
       இசைத்த கவிதை கண்ணுற்றேன்!
    பனியில் நனைந்த மலராகப்
       பசுமைத் தமிழில் நான்குளித்தேன்!
    கனியக் கனியக் கருத்தேந்திக்
       கமழக் கமழச் சீருரைத்தீர்!
    புனையும் பாக்கள் அத்தனையும்
       புகழிற் பொலிய வாழ்த்துகிறேன்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. இனிக்கும் விருத்தத்தில் இதமான வாழ்த்து மிக்க மகிழ்ச்சிங்க ஐயா.

      Delete
  23. After study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.
    Tamil Kavithai

    ReplyDelete
  24. மரபுக் கவிதையிலும் அற்புதமாக படைக்கிறீர்கள் . தொடரட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி