Ads 468x60px

Sunday, January 4, 2015

உயர்தமிழ் யாப்பைக் கற்பீர்!

மரபினில் எழுதக் கற்க
       மதுவென மயக்கும் நாளும்!
வரவென மகிழ்வே தங்கும்
       வசந்தமே வந்து கூடும் !
தரமிகு தமிழைப் போன்று
         தரணியில் மொழியும் உண்டோ ?
உரமெனப் பயிரைக் காக்கும்
         உயர்தமிழ் யாப்பைக் கற்பீர்!

உலவிடும் தென்றல் காற்றும்
        உவந்திடும் பாட்டே கேட்டு!
கலந்திடும் உறவாய் நம்மில்
        காத்திடும் வாழ்வை என்றும்!
கலத்தினில் நெல்லைப் போலே
        கவின்மிகு காட்சி ஆகும்!
பலத்தினை வழங்கும் பாவைப்
         பருகிடச் சுவையே கூடும்.

பூக்களில் தேனைத் தேடிப்
         புகுந்திடும் வண்டாய் நாமும்!
பாக்களில் கலந்தே நாளும்
         பலசுவை காண்போம் வாரீர்!
ஈக்களாய் மொய்க்கும் துன்பம்
         போக்கிடும் வழிகள் காட்டும்!
தாக்கிடும் பகைவர் நெஞ்சைத்
       தகர்த்திடும் வீரம் ஊட்டும்!

வண்ணமாய் வளங்கள் வந்து
        வாழ்வினில் நிறைந்து நிற்கும்!
திண்ணமாய் வடிக்கும் பாட்டில்
        திரண்டிடும் இனிமை பூக்கும்!
மண்வளம் மாண்பைப் பாடும்
        மனத்தினை உலகம் வாழ்த்தும்!
கண்ணெனக் கவிகள் கற்றுக்
        காவியத் தமிழைப் பாடு!

பாடிடப் பறக்கும் உள்ளம்
        பார்வையில் இனிக்கும் காட்சி!
நாடிட நலமே சேரும்
        நல்விதை முளைக்கும் நன்றே!
தேடியே முன்னோர் வைத்த
        செந்தமிழ்ச் செல்வம் தன்னைக்
கூடியே காப்போம்! வல்ல
        கொள்கையை ஏற்போம் இன்றே!

50 comments:

 1. அழகிய கவிதை பாராட்டுக்கள் தென்றல்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 2. இது அறுசீர் விருத்தத்தில் எழுதிய கவிதைதானே?

  ஹாஹா மதுரைத்தமிழனுக்கு இதெல்லாம் தெரிந்து இருக்கிறதா என்ற ஆச்சிரியாமா என்ன?

  ReplyDelete
 3. அது ரொம்ப சிம்பிள்...கவிதைக்கு கிழே நீங்களே அறுசீர் என்று போட்டிருக்கீங்களே ஹீஹீ

  ReplyDelete
 4. மீண்டும் மீண்டும்படித்து ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 5. கவிதை நன்று. ஆனால் சொன்னவை எல்லாம் சற்று ஓவராகத் தோன்றுகிறதே. எனக்கு ஏனோ மரபுக்கவிதைமேல் ஒரு காழ்ப்புணர்ச்சி. எழுத்துக்காக உடன்பாடில்லாத விஷயங்கள் பலவும் வருகிறதோ.?

  ReplyDelete
  Replies
  1. மரபில் மணக்கும் மணித்தமிழ்மேல் காதல்
   விரவும் மனத்தால் விளைந்துள்ள பாட்டிது!
   கற்பனை பொங்கிக் கருத்துக்[கு] அணியூட்டும்
   பற்றுடன் ஏற்றால் பயன்!

   Delete
 6. மரபிலும் அசத்துகிறீர்கள் . இனிய விருத்தம். வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 7. அருமை சகோ அசத்தலாக இருக்கிறது வாழ்த்துகள்
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. வருகை தந்து வாழ்த்தியமைக்கும் தமிழ் மண ஓட்டிற்கும் நன்றி.

   Delete
 8. கவிதை நன்றாக இருக்கிறது சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சிங்க தோழி.

   Delete
 9. முதலில் எழுதியவைகள் பார்த்தால் இப்பொது பிதற்றலாகத் தெரியும்.
  விழும்பியவர்கள் பின்பற்றலாம்.
  எல்லோரும் இது தான் பின்பற்நகிறார்களல்ல சகோதரி...
  வாழ்த்து..
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அவரவர் விருப்பம் தான் தோழி. வாழ்த்திற்கு நன்றி.

   Delete

 10. வணக்கம்!

  முன்னே பிறந்த முதுமொழியைக் கற்றுணர்ந்து
  தன்னே ரிலாமல் தழைத்திடுக! - பொன்னேர்
  விருத்தங்கள் தந்த வியன்தென்றல் காண்க
  வரும்பொங்கல் போன்றே வளம்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. விரும்பியே ஏற்றேன் விருத்தப்பா என்னில்
   கரும்பாய் இனிப்பை கசிந்து.
   வணங்கி வாழ்த்தை ஏற்கிறேன் ஐயா. தங்கள் ஆசியுடன் தொடர்கிறேன்.

   Delete
 11. வணக்கம் !
  அருமையான வெண்பா மாலை சகோதரி !வாழ்த்துக்கள்
  மென் மேலும் தொடரட்டும் .

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி தோழி.

   Delete
 12. ஆகா
  கவி அருமை
  வர்ழ்த்துக்கள் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சிங்க சகோ. தங்களுக்கு எனது நன்றியும்.

   Delete
 13. அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 14. அசத்தல் அறுசீர்
  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா. ஹைக்கூ வாழ்த்திற்கு நன்றி.

   Delete
 15. வணக்கம் தோழி!

  மரபினிற் கற்றிட வாருங்கள் என்றே
  வரவழைத்த தென்றல் வனப்பு!

  அருமையான அறுசீர் விருத்தங்கள் தோழி!
  தொடரட்டும் உங்கள் மரபுக் கவிகள்!..

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தொன்றுதொட்டு நம்மவர் தேர்வாம் மரபையுந்தான்
   வென்று களிப்புறு வோம்.
   தங்கள் வருகையும் வாழ்த்தும் சத்தாகும் என்றும் எனக்கு. நன்றிங்க தோழி.

   Delete
 16. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 17. நான் இனிமே என்னத்தைக் கற்று......!?
  கவிதை அருமை கவிதாயினி அவர்களே

  ReplyDelete
  Replies
  1. கற்பதற்கு வயது ஒரு தடையேயில்லையே..
   நன்றிங்க ஐயா.

   Delete
 18. வணக்கம் சகோதரி
  சிறப்பான வீறுநடை போடும் கவிவரிகளுக்கு பாராட்டுகள் சகோதரி. அழகிய தமிழ்மொழியை நாளும் போற்றி வளர்ப்பது நமது கடமை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. கடமை என சொன்னது உண்மையே.

   Delete
 19. மரபின் சிறப்பை சொல்லும் அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

   Delete
 20. அழகான அருமையான கவிதை சகோதரி..

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோ.

   Delete
 21. //தரமிகு தமிழைப் போன்று
  தரணியில் மொழியும் உண்டோ ?// இல்லை இல்லை :)
  அருமை தோழி..பாக்களில் அசுத்துகிரீர்கள்..வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. வாழ்த்திற்கு நன்றி.

   Delete
 22. நன்றிது என்றே நவின்றிட யாத்த
  ஒன்றிது என்றே உரைதனன் ! வாழ்க!

  ReplyDelete
 23. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

  ReplyDelete
 24. அருமை வாழ்த்துக்கள் சகோ. தம 11

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி